கவிதை போட்டி 2023_02

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-02

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி அறிவிப்பு

தைப்பூசம்
உலக காதலர் தினம்
மகா சிவராத்திரி
தமிழ் தாத்தா உ.வே.சா
இரும்புப் பெண்மணி ஜெ
கவிஞர் விரும்பும் தலைப்பிலும் எழுதலாம்

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-02. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

10 Responses

 1. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- காதலில் மறந்தேன் எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன் என் மனதை கூட உன்னிடம் தந்துவிட்டேன்; என் மனதை உன்னிடம் முழுவதுமாக பறிகொடுத்துவிட்டேன்; எது வேண்டுமானாலும் நடக்கட்டும் பார்க்கிறேன்; உலகத்திடம் நான் பயப்படமாட்டேன்; நான் உன்னிடம் காதல் செய்தே தீருவேன்; காதல் வந்துவிட்டால் தூக்கமே வராது, அமைதி இருக்காது; ஒரு முறை காதலை சொல்லிவிட்டால் மறக்கவும் மனம் வராது, பிரியவும் மனம் வராது; நீ என்னை அடித்தால், திட்டினால் கூட தாங்கி கொள்வேன்; ஆனால் உன்னை அவ்வளவு எளிதாக மறக்கமாட்டேன்; நீ என்னை வெறுத்துவிட்டால், தேம்பி தேம்பி அழுவேன்; நீ என்னை மறந்துவிட்டால், உயிரை விட்டுவிடுவேன்; நான் உன்னை இன்னொரு அம்மாவாக நினைக்கிறேன்; உன் அன்பு, பாசம், உறவுக்காக ஏங்குகிறேன்; நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன் என் மனதை கூட உன்னிடம் தந்துவிட்டேன்;

 2. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- காதலில் இழந்தேன்
  எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  எல்லாம் மறக்க வைத்தது இந்த மனது! எல்லாம் இழக்க வைத்தது இந்த மனது! எல்லாம் வீணாகிப்போன காதலால்! காதல் விரும்பியது! என்னை பைத்தியம் பிடிக்க வைத்தது! என் வாழ்க்கையை அழித்தது! இதை நிறுத்தவும் முடியாது, அடக்கவும் முடியாது! கட்டுப்படுத்தவும் முடியாது! ஞாபகங்களில் தொலைந்து கிடக்கும்! வார்த்தைகளில் மூழ்கி கிடக்கும்! கஷ்டங்களை உருவாக்கி கொண்டிருக்கும்! பெரும் நஷ்டங்களை உருவாக்கி கொண்டிருக்கும்! கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும்! இறுதியில் எதுவும் இல்லாமல் செய்துவிடும்! தேவையில்லாமல் கோபம் வரவைக்கும்! அழுகையை வரவைக்கும்! கண்ணீர் மழையை பொழிந்து கொண்டே இருக்கும்! எதுவும் இல்லாமல் செய்து விடும் இந்த காதல்!

 3. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- தமிழ் ஜாதி!
  எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!
  தமிழ் ஜாதி நமது!
  வென்றிடும் வேங்கை ஜாதி நமது! வட இந்தியர் வாழ்வார்! மலையாளிகள் வாழ்வார்!
  மராத்தியர் வாழ்வார்! தெலுங்குகாரரும் வாழ்வார்! எல்லாம் மக்களும் இணைந்த தமிழகம் நமதே, நமதே, நமதே டா! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

  ஊர்கள் வேறானாலும் நமது எண்ணம் ஒன்றே அண்ணா! மொழிகள் வேறு இருந்தாலும் நமது மொழி தமிழ் அண்ணா! யார் வந்தாலும், யார் போனாலும் வாழவைத்திடும் தமிழகம் அண்ணா! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

  ராமாயணம் பிறந்தது தேரழுந்தூரில்! சீறாப்புராணம் பிறந்தது ஏட்டயபுரத்தில்! இந்த படைப்புகள் யாவும் இல்லையென்றால் நமது கலாச்சாரம் பெரிய பூஜ்ஜியம்! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

  வைகை அணை எவரது? ஆழியார் அணை எவரது?
  மேட்டூர் அணை எவரது? கரிகாலனின் கல்லணை எவரது? எல்லாம் வளங்களும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழும் தமிழ் அன்னையின் செல்ல குழந்தைகள் 72 கோடி பேருக்கு! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

  சிப்பாய் கலகம் வேலூரில் நடத்தி சிங்கங்களாய் கர்ஜித்தோமே!
  வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி மாபெரும் புரட்சி செய்தோமே! வந்தே மாதரம்! ஜெய வந்தே மாதரம்! ஜல்லிக்கட்டாலே மல்லுக்கட்டி உலகை திரும்பி பார்க்க செய்தோமே!
  தேச பக்தியில் தமிழனுக்கு ஈடு இணையில்லை என உலகிற்கு நிரூபித்தோமே! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

  வள்ளுவன் தந்த திருக்குறளை உலகத்திற்கு அர்பணித்தோமே! சங்க தமிழை மதுரையில் உருவாக்கி உலகிற்கு அர்பணித்தோமே!
  சண்டை போட்டு கொண்டு தமிழ் ஜாதியை அசிங்கப்படுத்தவேண்டாம்! நான்கு பேரிடம் நம் ஜாதி பெயர் கேலி கிண்டல் ஆக்கவேண்டாம்! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

 4. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- குழந்தைகளை கொண்டாடுவோம்
  எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  படிப்பே உலகமில்லை! பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளது இயல், இசை, நாடகம், விளையாட்டு என பல திறமைகள் உள்ளது;
  குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்கள் கையில் உள்ளது; அவர்கள் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் பெற்றோர்களிடம் உள்ளது

  நாட்டின் முதல் பிரதமர் நேருஜி குழந்தைகளை மிகவும் விரும்பினார்; குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என அவர் சொன்னார்; மக்கட்பேறு தான் பெரிய சொத்து என வள்ளுவர் சொன்னார்; நல்ல குழந்தைகளே பெற்றோர்களின் பெரிய சொத்து என விளக்கமாக சொன்னார்

  படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் ஒன்றும் சம்மந்தமே இல்லை; பாதி பெற்றோர்களுக்கு இன்னும் இது தெரியவில்லை; இப்படி இருப்பதால் தான் பாதி குழந்தைகள் ஜொலிப்பதில்லை; இதனால் நாட்டை வழிநடத்த நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை

  படிப்பில் கவனமில்லையா? குழந்தைகளை பெற்றோர்கள் திட்டக்கூடாது; அவர்களை பெற்றோர்கள் பயமுறுத்தி,மிரட்டி,மோசமாக அடிக்க கூடாது; படிப்பில் கவனம் வர, அறிவு வளர வேறு வழி கண்டறிய வேண்டும்; ஒளிந்திருக்கும் திறமையை கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டும்

  குழந்தைகளுக்கு பயம் வந்தால் தைரியம் தர வேண்டும்; மன அழுத்தம் அவர்களுக்கு வந்தால் கட்டிப்பிடித்து, கொஞ்சி, தாலாட்ட வேண்டும்; கோபம், வெறுப்பு அவர்களுக்கு வந்தால் மனதை அமைதி படுத்த வேண்டும்; திறமைகளை வளர்க்க அவர்களை இன்னும் ஊக்கவிக்க வேண்டும்

 5. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- தைப்பூசம் எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக! அச்சம், பயம் விலகி தைரியம் உருவாக! வறுமை நீங்கி வளமைகள் பெருக! அறியாமை நீங்கி அறிவுச்சுடர் பெருக! மடமை நீங்கி ஞான ஒளி பெருக! பக்தி கடலென பக்தி பெருக! தீராத வினைகள், தடைகள், கவலைகள், தோஷங்கள் நீங்க! இகபர சௌபாக்கியம் மற்றும் சுகங்கள் அனுபவிக்க! நாம் இறைவனை நாடுவோம்
  யார் கைவிட்டாலும்! யார் ஏமாற்றினாலும்! பெற்ற தாய் மற்றும் தந்தை கைவிட்டாலும்! நீ என்னை கைவிடக்கூடாது என இறைவனிடம் கோரிக்கை வைப்போம்!
  தேரோடு இந்த திருநாளை, இறைவனை கொண்டாடுவோம்! காவடி தூக்கி, நடனம் ஆடி, மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தில் மூழ்கிவிடுவோம்! வடலூரில் வள்ளலாரை ஜோதி வடிவில் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிடுவோம்! இறைவனுக்கு திருவிழா கொண்டாட்டம்! பக்தர்கள் கூட்டம் குவியும் வண்டாட்டும்!

 6. Shakila Devi G says:

  தலைப்பு:: நிழற்படம்!!

  சப்தம் நான், நிசப்தம் நீ!
  நிலையற்ற நான், சிலையாக நீ!
  தடுமாறும் நான், தடம் மாறா நீ!
  வழி தேடும் நான், ஒளி தேடும் நீ!
  நிஜமாக நான், நிழலாக நீ!
  கொஞ்சம் அழகாய் நான், மிஞ்சும் அழகாய் நீ!
  சமயங்களில் நாடகம் நான், எனக்கேற்ற நடிகன் நீ!
  ஒரு முறை இயற்கையுடன் நான், ஒவ்வொரு முறையும் நீ!
  நிலவாய் வளர்ந்து தேயும் நான், மேகமாய் என்றும் ஒளிரும் நீ!

  காலம் தொலைக்கும் மனிதனுடன் நான்,
  தொலையும் முன் கண்டெடுத்த அற்புதம் நீ!

  வரையா சித்திரமே, அழியா விசித்திரமே,
  நிஜங்கள் ஊற்றி வளர்த்த நினைவுகளே!
  உணர்வற்ற நிலையில் உயிரூட்டும் கலையே!!

  சாதாரண பெண் நான், அசாதாரண புகைப்படம் நீ!!!

 7. பிரகதீஸ்வரன் அ says:

  கூந்தல் கோரும்
  குளிர்கால பூவே!
  உந்தன் நகத்தோடு
  நாட்கள் வாழ்ந்திடுவேன்-ஆயினும்
  அகத்திலிருந்து அழைக்கின்றேன்,
  இகமெங்கிலும் சென்றாலும்
  என்னுடைய
  பகம் நீ இருந்தால்
  யுகமுழுதும் எனக்கு
  காதலர் உகமே…!

 8. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- பெண் எழுத்தாளர்:-M. மனோஜ் குமார்

  அம்மா நீயே; அத்தை நீயே; அக்கா நீயே; தங்கை நீயே; சித்தி நீயே; பெரியம்மா நீயே;
  மனைவி நீயே; பாட்டி நீயே; தோழி நீயே; காதலி நீயே; மகளும் நீயே; பேத்தியும் நீயே; தெய்வங்களில் நீயே; மிருகங்களில் நீயே; முப்பெரும் தேவியரும் நீயே; இப்படி பல வடிவங்களில் நீயே; எல்லோரும் நினைக்கும் இடங்களில் நீயே;

  நீ இன்றி குடும்பத்தில் வம்சவிருத்தி இல்லை; நீ இன்றி ஒரு குடும்பமே இல்லை; நீ இன்றி ஆண்களுக்கு ஆறுதல் இல்லை; நீ இன்றி ஆண் இனமே இல்லை

  ஒரு ஆணுக்கு நீ அடிமை இல்லை; அந்த ஆணும் உனக்கு அடிமை இல்லை; சூரியன் இன்றி பூமி சுழற்சி இல்லை; நீ இன்றி இவ்வுலகமே இல்லை

 9. சதிஷ் குமார். ம . மு says:

  குருதி
  ஓட்டமிகு கூடினும் மயக்கம்
  அழுத்தம் குறையினும் தயக்கம்
  வெப்பமது மிகினும் கலக்கம்
  குளிரில் வதையினும் நடுக்கம்
  நுண்ணுயிர் புகினும் ஒடுக்கம்
  தன்செல் கரையின் உருக்கம்
  உள்ளில் அமைதியாய் இருக்கும்
  வெளியில் கசியின் வலிக்கும்
  ம.மு.சதிஷ் குமார் .

 10. சே.சண்முகவேல், முதுகலைத் தமிழாசிரியர் says:

  கல்விக் கூடத்தில்
  ஆசிரியர்களின்
  கைகளைக் கட்டிப்போட்டு
  கைகளிலிருந்த
  கம்புகளைக் கைப்பற்றி விட்டோமென
  பெருமை கொள்ளாதீர்கள்!!!
  அக்கம்புகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்
  காவல் நிலையத்திற்கு
  இருமடங்காகத் தேவைப்படும்