கவிதை போட்டி 2023_01

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-01

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி 2023_01 அறிவிப்பு

தைத்திருநாள்
உழவும் வாழ்வும்
புத்தாண்டு
குடியரசு
திருவள்ளுவர்
தாங்கள் விரும்பும் தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-01. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

8 Responses

 1. தாரா says:

  தலைப்பு: குடியரசு

  விடுதலை கிடைத்தது

  அடிமை என்ற வார்த்தை மறந்தது

  சட்டம் வகுத்தது சட்ட மேதை

  அம்பேத்கர் கொடுத்தது

  போராடி பெற்றது அதன் மதிப்பை

  நாம் மறந்தது

  குடியரசு ஆனாது

  நாம் குடியுரிமை பெற்றது

  வாழ்க்கை உயர்ந்தது

  மற்ற நாடு நாம்மை கண்டு வியந்தது

  காந்தியின் தியாகம் தெரிந்தது

  பல தலைவர்கள் உயிர் காற்றில்

  கரைந்தது

  தேசிய கொடி ஓங்கி உயர்ந்தது

  என்ன வளம் இல்லை இந்த

  திருநாட்டில்

  ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி

  நாட்டில் என சொன்ன வார்த்தையின்

  அர்த்தம் புரிகிறது

  அள்ள அள்ள குறையாத வளம்

  இருக்கிறது

  என் பரததாய்யின் கருணை

  தெரிகிறது

  ஒற்றுமை இங்கு இருக்கிறது

 2. தாரா says:

  தலைப்பு: தைத்திருநாள்

  மார்கழி மாத குளிர் முடிகிறது

  தை மகள் மெல்ல வருகிறது

  கதிரவன் கண் விழிக்கிறது

  அறுவடைக்கு செங்கதிர்கள்

  விளைந்து இருக்கிறது

  விவசாயின் முகம் புன்னகையில்

  ஜொலிக்கிறது

  மஞ்சள் மனம் ஊர் எங்கும் விசுகிறது

  செங்கரும்பின் அரும்புகள் காற்றில்

  அசைகிறாது

  வண்ண வண்ண கோலங்கள்

  வாசல்களை அலங்கரிக்கிறது

  மாஇலை தோரணம் விடுகளில்

  சிரிக்கின்றது

  பச்சரிசி புது பானையில்

  கொதிக்கிறாது

  அச்சு வெல்லம் பச்சரிசி உடன் சேர

  கர்த்திருக்கிறது

  அனைத்தும் ஒன்றாக சேர்ந்து

  பொங்கலோ பொங்கல் என பொங்கி

  வருகிறது

  மனதில் ஆனந்தம் பெருகி வருகிறது

  வெளிச்சம் தரும் செங்கதிரவனுக்கு

  பொங்கலை படைத்து ஊர்ரே நன்றி

  சொல்கிறது

  தித்திக்கும் பொங்கலை போல்

  வாழ்க்கை இனிக்கும்

  தைபிறந்தாள் அனைவரின்

  வாழ்க்கையில் புது வழிபிறக்கும்

  உறவுகளை இணைத்து உள்ளம்

  மகிழ்ந்து

  தமிழ் மகள் நாம் தைமகள்‌

  வருகையால்

  இனி வருஷம் எல்லாம் வசந்தம் ஆகும்

 3. தாரா says:

  தலைப்பு: உழவும் வாழ்வும்

  தங்க மகளே என் தைமகளே தரணி

  எல்லாம் செழிக்க வேண்டும்

  வியர்வை துளியில் விளையும்

  நெற்கதிர்கள்

  விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்

  விவசாயமே நாம் நாட்டின் கண்கள்

  பாரம்பரியத்தை போற்றும் தமிழர்கள்

  வெளிச்சம் தரும் சூரியனுக்கு நன்றி

  சொல்கிறோம்

  பயிர் செழிப்பாக வளர நீர் தரும்

  காவிரிக்கு நன்றி சொல்கிறோம்

  நாடெங்கும் உணவளிக்கும்

  விவசாயிகளுக்கு நன்றி

  சொல்கிறோம்

  உழவுக்கு உழைத்த மாட்டுகளுக்கு

  நன்றி சொல்கிறோம்

  உறவுகள் ஒன்றாக இணைகிறோம்

  வண்ண கோலம் வாசலில்

  போடுகிறோம்

  மாஇலை தோரணங்களால்

  அலங்கரிக்கிறோம்

  வாழைஇலையில் பொங்கல்

  படைத்து

  மஞ்சள் குங்குமம் கொடுத்து

  தைமகளை அழைக்கிறோம்

 4. Raja J says:

  திருவள்ளுவர்

  ஈரடியில் உலகளந்த ஈசனவன்

  வெண்பாவில் வெண்ணிலவை உருவாக்கி
  நன்னிலம் சேர வழி காட்டும் கலங்கரை விளக்கம்

  ஏழடி சீரை ஏட்டினில் படித்தால்
  ஏற்றமே உனது தோற்றமாகும்

  கடலளவு வாழ்வியலை
  கடுகை போல் சுருக்கி சொன்னவன்

  அரசருக்கும் புத்தி சொல்லும் அமுதசுரபி

  உலக மொழி அத்தனையும் காணாத பொதுமறையை
  தமிழ் மொழியில் தந்தவன்

  முத்து முத்தாய் வாழ்வதற்கே
  பத்து பத்தாய் குரல்களை அதிகாரம் தோறும் படைத்தவன்

  அவர் படைத்த முப்பாலை,
  தாய் பாலாய் கொண்டவர்க்கு
  வாழ்வெல்லாம் வளமாகும்

  வள்ளுவரை வளம் வந்தால்
  வாழ்வெல்லாம் நலமாகும்

  ராஜா

 5. சதிஷ் குமார். ம . மு says:

  தீங்கொசு
  இயற்கை அளித்த உயிர்நீரை
  இன்னலில் ஆழ்த்தி மாசாக்கி
  இழிநீராம் அதனில் பிறந்து
  இன்னுடல் எடுத்த கொசவே
  இன்னும் வளர்ந்து புசிக்க
  இப்பிறப்பதை ஈந்த உயிர்க்கே
  இங்கோர் ஆழ்ந்த கடியதனில்
  இயங்காது துடித்து வலியாலே
  இயன்ற வலிமை உன்னிடம்
  இட்டு உயிர்நோக செய்தாரே
  இடியொத்த பேரிடர் நுமக்கீந்து
  இழிநோய் அதனால் வதைவாரே
  சதிஷ் குமார். ம . மு

 6. க. சம்பத்குமார் அவிநாசி says:

  செய்வதறியா கடவுளர்கள்

  இப்போதெல்லாம்
  வியாழக்கிழமையே
  வந்து விடுகிறது
  வெள்ளிக்கிழமை

  அவள் அலுவல் முடித்து
  ஸ்கூட்டியில் விரைகிறாள்
  அம்மன்கோயில் கடந்து
  தென் சீரடிக்கு

  நேற்று வரை
  கற்பூரம் கொளுத்தி
  முழந்தாளிட்டிருந்தவள்
  சட்டென மாறிக் கொண்டாள்
  சாய் பஜனுக்கும்
  தியானித்து தன்னை கரைப்பதற்கும்

  வாகனம் விரைந்து கடந்ததும்
  சன்னதி கடந்து
  வீதிமுனை வரை வந்து
  கை பிசைந்து நிற்கின்றனர்
  இதுவரை அவள் வழிபட்ட
  கடவுளர்கள் அத்தனை பேரும்

 7. P Shanmugapriya says:

  மௌனம் இருக்கும் என்னிடம்..
  மௌனமாய் பேசுகிறாய் பல பாசையில்..
  காற்றில் உன் கண்ணீர் துளிகள்
  என் காதோடு உரசுகிறது !
  உன் அருகில் நான் இருக்கையில்
  நீ இலை துளையில் விழுந்து என் இதழில்
  உறங்க இடம் தேடுகிறாய்..
  உருவம் இல்லா நீ எனக்குள்
  வரும்பொழுது உருகிப்போகிறேன்
  உன் அசைவில்!!…
  துயரமில்லா என்னிடம்
  தூரலாய் வந்துவிடு துளிர் சேர்க்க
  உன் அருகில் நான்!!!…

 8. P Shanmugapriya says:

  மழைத்துளிகள்!!!💧

  மௌனம் இருக்கும் என்னிடம்..
  மௌனமாய் பேசுகிறாய் பல பாசையில்..
  காற்றில் உன் கண்ணீர் துளிகள் என் காதோடு உரசுகிறது !
  உன் அருகில் நான் இருக்கையில்
  நீ இலை துளையில் விழுந்து என் இதழில்
  உறங்க இடம் தேடுகிறாய்..
  உருவம் இல்லா நீ எனக்குள்
  வரும்பொழுது உருகிப்போகிறேன் உன் அசைவில்!!…
  துயரமில்லா என்னிடம் தூரலாய் வந்துவிடு
  துளிர் சேர்க்க உன் அருகில் நான்!!!…