என் மின்மினி தொடர்கதை (பாகம் – 76)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-76
En minmini thodar kadhai
ஐயா,நடந்தது நடந்து போச்சு.இனி கவலைப்பட்டு என்ன ஆக போகுது.இனி நாம அந்த பையன் முகில் பத்தியும்,அவனது வாழ்க்கை பத்தியும் தான் கவலைப்படணும் என்று ஆறுதல் கூற முயன்றான் பிரஜின்…
அப்படியில்லையப்பா.,அவ உயிரோடு இருந்திருந்தா இந்த பத்திரத்தை கூட வாங்கி இருக்க மாட்டா.மிச்சம் பணத்தை தங்துட்டு வாங்கிக்குறேன்னு தான் சொல்லி இருப்பா.அந்த அளவுக்கு நேர்மையான நல்லப்பொண்ணு பாரதி.இந்த உலகத்துல தான் நல்லவங்க எல்லோரும் சீக்கிரம் செத்து போயிடுறாங்களே.அதே சமயம் அவ நல்ல உழைப்பாளி. யாருகிட்டேயும் போயி நிக்காம என் பையனை ராஜா மாதிரி நான் வளர்ப்பேன்னு அடிக்கடி சொல்லுவா…அந்த தைரியமும்,அவளது உத்வேகமும் இந்த வயசுல அவளுக்கு இருந்தது என்னை அடிக்கடி வியக்க வெச்சு இருக்கு…அதனாலோ என்னவோ தெரியவில்லை.,அவ மேலே எனக்கு ஒரு தனி பாசம்…
ஆனா அவளுக்குன்னு நான் ஒண்ணுமே பண்ணல.அதா இந்த வீட்டுப்பத்திரத்தை அவளுக்கு சம்பந்தபட்ட ஆளுககிட்டேயே கொடுத்துவிடலாம் ன்னு வந்தேன்,இப்போ கொடுக்கவும் செய்துட்டேன்.இப்போ தான் எனக்கு மனசுக்கு நல்லா இருக்கு. இதை நான் அவ இருக்கும் போதே செய்து இருக்கணும்…ஆனா எனக்கு அப்போ அவ அன்பு புரிஞ்ச அளவுக்கு அவளோட கஷ்டம் புரியாம போயிடுச்சோன்னு ஒரு உறுத்தல் எனக்குள்ளே இன்னமும் இருந்துட்டு தான் இருக்கு.
இது என்னை அப்பா மாதிரி நினைத்த பாரதிக்கு என்னால முடிந்த ஒரு சின்ன நன்றிக்கடன் என்று நெகிழ்ந்தார் சிவனாயகம்…
ஆமாங்க ஐயா.பாரதி எப்போவும் நல்லபடியா தன்னோட பையனை வளர்க்கணும், யாருகிட்டேயும் கையேந்தி நிற்கும் நிலையை அந்த ஆண்டவன் எனக்கு தராம இருக்கணும் டீச்சர் என்று அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா இடையில் இப்படி நடக்கும்ன்னு யாரும் நினைச்சு கூட பார்க்கல என்று வருந்தி நின்றாள் டீச்சர்…
என்ன செய்வது எல்லாம் விதி. வீட்டை விட்டு தனியா வந்து கல்யாணம் பண்ணனும்,புருஷனை இழக்கணும்,பெத்த பையனை தனியா யார் துணையும் இல்லாம வளர்க்கணும்,ஒரு கட்டத்துல தானும் செத்துப்போனும்,பெத்து வளர்த்தபுள்ள தனியா நிக்கணும்ன்னு அவளுக்கு மட்டும் ஆண்டவன் எப்படித்தான் விதியை எழுதினானோ தெரியல என்று நொந்தபடி நான் கிளம்புகிறேன் டீச்சர்,வரட்டுமா தம்பி என்றபடி கிளம்ப தயாரானார் சிவனாயகம்…
இந்த மனுசன்,அவரது வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடி வாழ்ந்து விட்டாரோ என்று லேசாக மனதிற்கு தோன்றவே லேசான புன்னகையுடன் சரிங்க ஐயா என்று வீட்டுக்கு வெளியே வரை வந்து சிவனாயகத்தினை வழியனுப்பி வைத்தான் பிரஜின்.எதுவும் பேசாதவளாக கதவில் ஓரத்தில் நின்றபடி அவர் செல்வதை பார்த்து கொண்டு நின்றாள் ஷீலா டீச்சர்…
என்ன செய்வதென்றே புரியாமல் வீட்டுக்குள் சென்று இருந்த நான்கு அறையில் ஒவ்வொரு அறையாக உலவ ஆரம்பித்தான் பிரஜின்.அங்குமிங்கும் உலவியவனுக்கு பட்டென ஒரு வெள்ளை துணிப்பை கண்ணில் பட.,
டீச்சர் சீக்கிரம் இங்கே வாங்க.இங்க வித்தியாசமா ஒரு துணிப்பை இருக்கு.அதுக்கே மேலே மஞ்சள் குங்குமம் வைத்து ஓம் நாமம் போட்டு இருக்கு.நல்ல இறுக்கமா வேற கட்டியிருக்கு என்று அவன் குரல் கொடுக்கவே
என்ன பை தம்பி,பிரிச்சு பாருங்க என்றபடியே அந்த அறையினுள் நுழைந்தாள் டீச்சர்,கூடவே முகிலும் அந்த அறைக்குள் நுழைந்தான்…
டீச்சர் இது அம்மாவோடது தான்…சாமி முன்னாடியே வெச்சு இருப்பாங்க…எப்போவாச்சு தான் அம்மாவே அந்த பையை எடுத்து பார்ப்பாங்க…சில நேரம் அழ கூட செய்வாங்க…என்னை இது வரை அந்த பையை தொடகூடவிட்டதில்லை என்று பாரதியின் மகன் முகில் சொல்ல.,
மனதில் ஒரு கவலை இருந்தாலும்,கூடவே ஆர்வமும் அதிகமானது இருவருக்கும்.
பிரிச்சு பாருப்பா,உள்ள ஏதாச்சும் முக்கியமான விசயம் இருக்கான்னு பார்ப்போம் என்றாள் டீச்சர்.
சரிங்க டீச்சர் என்றபடி கட்டப்பட்ட முடிச்சை அவிழ்க்க முயன்று இறுதியில் பையின் முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறினான் பிரஜின்…
ஆர்வமிகுதியால் தன் அம்மா இறந்தது கூட பெரிதாக தெரியாமல் குழந்தைகளுக்கே உரிய சுட்டித்தனத்தில் ஒரு நிமிசம் அங்கிள்,இதோ வரேன் என்று ஓடிச்சென்று ஒரு கத்தியை கொண்டு வந்து பிரஜினிடம் கொடுத்தான் அதையே உற்றுநோக்கி கொண்டிருந்த முகில்…
ஒரு வழியாக கட்டப்பட்ட முடிச்சு அறுத்து எடுக்கப்பட்டது.
உள்ளே என்னதான் இருக்கும் என்று எட்டி நின்று பார்த்துக்கொண்டிருந்தான் முகில்…
பாகம் 77யில் தொடரும்…
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)
சமிபத்தில் வாசிக்க தொடங்கினேன்.. முந்தைய எபிஸோடுகளை வாசித்து வருகிறேன்.. நன்றாக உள்ளது