கவிதை போட்டி 2023_10
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-10
வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.
கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.
கவிதை போட்டி அறிவிப்பு
- கிருஷ்ண ஜெயந்தி
- விநாயகர் சதுர்த்தி
- பாடகர் பாலசுப்ரமணியம்
- தீதும் நன்றும் பிறர் தர வாரா
- மிலாடி நபி
- காந்தி ஜெயந்தி
- விஜய தசமி
- ஆயுத பூஜை
- கலைமகள்
- விரும்பிய தலைப்பு
கல்விக்கண் திறந்த மகான் பிறந்தநாள் சிறப்பாக இந்த மாத போட்டி அறிவிக்கப்படுகிறது
மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-10. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு:
1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
அதிகாலை சூரியன் வரும் முன்னும்..
அந்திவானம் சாய்ந்த பின்னும்..
ஆகாயம் கடந்த ஒரு ‘குரல்’.
வேறு யாருமில்லை, குயில் ஓசை ஒத்த என் அழகிய “ரயில் “.
நான் வருகிறேன், நீயும் வா என்ற
‘மின்னல் ஒளி’.
‘நுரையீரலுடன்’ ஒரு உரையாடல் போல, அடேய்! தினமும் ஓடு என்றால் கேட்கிறாயா?
மெதுவாக ஓடுடா..
என் உயிர் மேலும் கீழும் ஆக ஊசலாடுகிறது..
சற்று பொறுத்துக்கொள் வந்து விட்டோம் என்று ‘மூளையின் ஆறுதல்’ ..
இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ஏதாவது சொல்வதற்கு மட்டும் தான் நீ என்றது நுரையீரல்..
சற்று மௌனமாக இருங்கள் என்று ‘கண்கள்’ நீங்கள் பேசுவதில் தலையில் வலி, ஏற்பட்டு எனக்கு வலி தோன்றுகிறது..
அப்பாடா! வந்துவிட்டோம் என்று கால்கள் சொல்ல, கைகள் மிகவும் தாகம் என்றது..
நீர் அருந்த நின்றவன், மீண்டும் ஓட ஆரம்பித்தான்..
ரயில் பெட்டிக்கு அருகில் சென்றான், எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்த பெட்டியை தொட்டுப் பார்த்தான்.
உனக்காகத்தான் இத்தனை வேகம் என்றான்..
பெட்டிகளை அடுக்கியவன்..
சற்று தொலைவில் மாங்கனியை பார்த்தான், சுவைக்க விரும்பினான்..
முன்னேறி செல்ல தடுக்கி கீழே விழுந்தான்..
எழுந்தவுடன் கண்கள் ‘ சரியில்லை போலும்’ என்றான் ஒருவன்..
அவனை கடந்தான்..
மாங்கனியில் அவன் கை வைக்க ஒன்று எல்லாம் தர முடியாது.. எத்தனை வேண்டும்? என்றான்..
இவன் மீண்டும் ஒன்று என்றான்..
இப்போது தானே கூறினேன் ஒன்று இல்லை என்று..
இல்லை எனக்கு ஒன்று தான் வேண்டும் என்றான்..
மாங்கனி வைத்துவிட்டு செல் என்றான்..
சோகமாய் நின்றவன் புறப்படும் ரயிலை கவனிக்கவில்லை..
யாரோ ஒருவன் மோதியதும் என் ரயில் என்று ஓடினான், ரயில் கடந்து விட்டது..
ஒருவன் உதவி செய்தான், தவற விட்டான்..
மீண்டும் முயற்சித்தான், பிடித்து விட்டான்..
‘ கடைசி ரயில் பெட்டி’ சற்று சோகமாக அங்கு அமர்ந்தான்..
ஆச்சரியம்! அவனை சுற்றி மாங்கனிகள்..
அளவில்லா மகிழ்ச்சி ‘ ஒன்று இல்லை என்ற வருத்தம்’ இங்கு மூட்டைகள்..
பிறகு அதனை சுவைத்துக் கொண்டே சுகமான பயணம் இது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்..
……… கடைசி ரயில் பெட்டி……