மேகக் கடன்காரியின் தாய்
சமீப காலங்களாக படிப்பிற்காக மாணவர்கள் பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கமாகி விட்டது. சிலருக்கு தாய் முகம் பாராமல் மாலை,இரவு உறக்கம் இல்லை. நண்பர்களுடன் கலந்துவிட்டால் பிரிவின் வேதனை சற்று மறந்துவிடும். ஆனால் அந்த தாய் மனம்தான் கோடை காற்றில் சிக்கிய காகிதமாய் தவிக்கும்.
மேகக் கடன்காரியிடம்
எதிர்பார்ப்புகள் நிறைந்த இலையுதிர்கால
மரமாய் !
உதிர்க்கப்பட்ட இலைகள் யாவும் வீட்டுக் கூரையை
அலங்கரித்தவண்ணம்.என் கண்களை கண்ணீர் சொந்தம் கொண்டாட
இழப்புகள் தேவையில்லை !
உன் – உனைப் பிரிந்த நாட்கள் போதும்.
நான் சோறு உன்கையில், உன் பூவிதல்களில்
நான் நிரப்பிய உருண்டைகள்
நினைவுகளாய் தட்டை நிரப்ப.
உனக்கு பதில் நிலவை அழைத்து
மடியில் தாலாட்டி அசரீரியால்
உன்னை உறங்க வைத்துக்கொண்டே.
பிரிவின் தண்டனைகளும் சுகம் தரும்
உன் பட்டம் பற்றி என் விரல்கள் அதை
வருடும் பொது.
– நீரோடைமகேஷ்
கவிதையில் பிரிவும் அழகு!
அழகிய சொல்லாடல்