பொங்கல் வாழ்த்துக்கள் : உழவன் – கவிதை
அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்,அதற்க்கு முன் நமது உழவர்களின் நிலை பற்றி சில வரிகள் சொல்ல வேண்டிய தருணம். pongal vaazhthu uzhavan kavithai
அன்று செங்குருதி சுண்டலிலும்
ஏர் பிடித்து உழவு செய்து
அறுவடைக்கு மட்டுமே
காத்துக் கிடந்த உழவன் .
இன்றும் காத்திருக்கிறான்
மழைக்காக, நீர் பாசனத்திற்காக,
வாடகை இயந்திரத்திர்க்காக
காத்திருப்பில் தேங்கிய நிலைமமாய்.
அங்கு வயலிலே உழவன் வாடிய
பயிர்களைப் போல, தினம் தினம்
உயிர்கொடுத்து பயிர் விளைவிக்கையில்,
ஆனால் சிலர்
அரசாங்கம் தரும் அரிசியை
கால்நடைகளுக்கு அரைத்தமாவாய்
கரைத்து வார்க்க.
உழைப்பின் அர்த்தங்கள்
மறந்த மூடத்தனம், இங்கே மட்டுமே.
மனித சக்த்தியை மட்டுமே நம்பிய நிலை மாறி
இயந்திர சக்தி நிறுவக்கூட பொருளாதாரம்
முட்டுக்கட்டை போடும் நிலையில்….
விளை நிலங்களை
விலை நிலங்களாக்கி
குடியிருப்புகளிடம் தொலைத்துவிட்டு ,,,
உணவில்லாமல் தவிக்கப் போகும்
அடுத்த தலைமுறையை
நிர்கதியாக்கிய நிலையில் பல
இடங்களில் மடிந்து வரும் விவசாயம்.
மறுபுறம் உழவுக்கு, அதன் செழிப்புக்கு
சந்தர்ப்பங்கள் சான்று கொடுக்கும்
செழிமை இருப்பதையும் மறுக்கவும் முடியாது.
எல்லா உள்ளங்களும் தன்னிலை
பார்க்காமல் கொண்டாடும் இந்த
தமிழர் திருநாளை ….
தித்திக்கும் தேன் சுவையும்
திகட்டாத செங்கரும்பும்
திகைக்க வைக்கும் ஜல்லிக்கட்டும் சிறக்க.
சாலையோர பூக்களும் காதல் கொள்ளும்
நம் காணும் பொங்கலைக் கண்டு… pongal vaazhthu uzhavan kavithai
என் தமிழ்க் குடும்பத்தாரே உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
– நீரோடைமகேஷ்
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!