கவிதை தொகுப்பு 70
by Neerodai Mahes · Published · Updated
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் சிறுவாச்சூர் பெ.தங்கதுரை அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம்.
இடி; மின்னல்; காற்றோடு
சிலநேரம்!
குளிர் இளம் தென்றலோடு
சிலநேரம்!
காரிருள் மேகம் சூல
சிலநேரம்!
கதிரவனின் வெயிலில் கூட
சிலநேரம்!
தூரல் மழை
சிலநேரம்!
சாரல் மழை
சிலநேரம்!
ஆலங்கட்டி மழை
சிலநேரம்!
அடை மழை
சிலநேரம்!
மனிதன் வாழ
விலை
மழை!!!
அதுவே என்றும்
நிலை!!!
அழகிய வான வெளிகள்
ஆங்காங்கே மேக கூட்டம்
இடைவெளியுடன் கூடிய மலைகள்
இடையே ஒரு வானவில்
லேசான சாரல் மழை
நடுவில் ஒரு நதி
இருபுறமும் உயர்ந்த மரங்கள்
அடியே அழகிய பூக்கள்
பரவிய செடி கொடிகள்
பயம் காட்டும் விலங்குகள்
துள்ளி ஓடும் மான்கள்
நீரின் உள்ளே மீன்கள்
கதிரொளி படும் நிலம்
தொடர்ந்து பயிர் காடுகள்
அழகு கொஞ்சும் வீடுகள்
தொடர்ந்து வரும் பறவைகள்
துள்ளி விளையாடும் சிறுவர்கள்
வளைந்து நெளிந்த ஆறுகள்
இடையே சிறுசிறு பாலங்கள்
நதி கரையோரம் ஆலமரம்
அருகில் ஒற்றையடி பாதை
உழவுக்கு செல்லும் மாடுகள்
வண்ண வளவளப்பு கற்கள்
வலுவான முதலையின் பற்கள்
கடலோரம் சதுப்பு நிலம்
கடந்து செல்ல மரக்கலம்
பாலை குவியல் மணல்
வீசும் உப்பு கணல்
பரவி கிடக்கும் ஆழ்கடல்
கண்ணில் காணாத உயிர்கள்
பளபளக்கும் பவள பயிர்கள்
அளவறியா கிடக்கும் முத்துக்கள்
இவைகளே இயற்கையின் சொத்துக்கள்!
உன்னை சுற்றி பாறக்குதடி தேனீக்கள் கூட்டம்
நீதானே மனம் வீசும் மல்லிப்பூ தோட்டம்
உன் வீட்டு முன்னாலே போடுவனா நோட்டம்
உன் அண்ணன்காரன் வந்தாக்க எடுத்துடுவேன் ஓட்டம்
பசங்க ஒன்னா சேர்ந்தாலே எப்பவுமே ஆட்டம்
ஒரு நாள் உன்னை பார்க்கலன்னா முகமெல்லாம் வாட்டம்
பனித்துளி சிரிப்புக்கு ஈடு என்ன சொல்ல
பருவ நிலா அழகுக்கு இணையேதும் இல்ல
பவளவிளி பார்வையிலே கொடுக்குறியே தொல்ல
ரத்தினமே உன்னை வைப்பேன் வைரக்கல்லு உள்ள
என்னை மயக்கி போகுறியே பேரழகு புள்ள
கனவுக்குள்ள வருவேன்னு கையோடு அல்ல
சந்தன பொட்டுக்கு ஏங்குறனே உள்ள
சம்மதம் சொல்லிவிடு என்னவளே மெல்ல!
சிறுவாச்சூர் பெ.தங்கதுரை