அல்னாஸ்கர்
ஒரு ஊரில் அல்னாஸ்கர் என்ற ஏழைச்சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் பத்து ரூபாய் கண்டெடுத்தான். அதை வைத்து கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தான். தொழில் சிறக்க மென்மேலும் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தான் alnaskar short story.
ஒரு கட்டத்தில் அதன் மூலம் கிடைத்த பெரிய இலாபத்தை வைத்து ஒரு பெரிய கூடை நிறைய பொருட்களை வாங்கி விற்பனை செய்ய தொழில் சிறந்தது. ஒரு நாள் மதிய நேரம் ஒரு மரத்தடியில் அமர்ந்து கனவு காண ஆரம்பித்தான்.
இந்த பொருட்கள் முழுவதும் விற்றால் அதன் மூலம் ஐந்தாயிரம் கிடைக்கும் ஆகா பணக்காரன் என்ற பெயரும்கிடைக்கும். நம் நாட்டின் மாதிரியே சம்பந்தம் பேசி தனது மகளை மணமுடித்து வைப்பார்.
தகுதிக்கு மிஞ்சிய கனவு
பின்னர் காலை எழுந்தவுடன் மணி அடித்தால் மனைவி ஓடி வந்து தேநீர் கொடுப்பாள், நேரத்திற்கு அமுது படைப்பாள் என்றெல்லாம் கனவில் ஓடிய வண்ணம். நாம் வேலைக்கு புறப்பட்டவுடன் காலனி அணிவிப்பாள், அதை சரியாக அணிவிக்கவில்லையென்றால் வேகமாக அவளை உதைப்பேன் என்று கர்வ எண்ணத்தோடு கூடையை உதைக்க கண்ணாடி பொருட்கள் அனைத்தும் உடைந்து நொறுங்கி விழ கனவும் பிழைப்பும் ஒன்றாக சுக்குநூறானது.
தகுதிக்கு மிஞ்சிய கனவும் நினைப்பும் அவனை பழையபடி தெருவில் அலைய விட்டது.
கற்பனை கர்வத்தில் வாழும் மானிட பதறுகளுக்கு இந்த கதை ஒரு பாடமாகட்டும்.
Nice….perasai Peru nastam