பீட்ரூட் கொண்டைக்கடலை வடை

ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai

beetroot vadai

வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தேவையான பொருட்கள்

  1. பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)
  2. கருப்பு சுண்டல் – 200 gm
  3. பச்சை மிளகாய் – 5
  4. பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது).
  5. சோம்பு – 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலலை, மலலி (சிறிதளவு நறுக்கியது)
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய்

செய்முறை

சுண்டலை முதல் நாள் இரவு நீரில் ஊறவிடவும். மறு நாள் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி சுண்டலோடு சேர்த்து கலவைஇயந்திரத்தில் உப்பு பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சற்று வடை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு அந்த கலவையில் வெங்காயம் சோம்பு, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து கலந்துகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும். சூடான,சுவையான பீட்ரூட் கொண்டைக் கடலை வடை தயார் -beetroot vadai .

இதில் உள்ள சத்துகள்: பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் இரத்தம் விருத்தியாகும். மாவுச் சத்தும் இருப்பதால் ஜீரண சக்தி அதிகமாகும். கருப்பு சுண்டலில் புரதம் அதிகம் உள்ளதால், உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

– ஏஞ்சலின் கமலா

You may also like...

7 Responses

  1. Vanitha says:

    Nice recipe. It looks tasty and at the same time it’s healthy also. Definitely will try this 👍

  2. Vanitha says:

    Nice recipe. It looks tasty and at the same time it’s healthy also. Definitely will try this 👍

  3. முனைவர் கு வாணி ஜமுனா says:

    ஆரோக்கியமான உணவு முறையை அறிமுகப் படுத்திய தங்களுக்கு வாழ்த்துகள்….

  4. Khusnara banu says:

    Super and useful

  5. N.shanmugapriyq says:

    பீட்ரூட் வடை என்பதற்கு பதில் ஆரோக்கிய வடை என்று குறிப்பிடலாம்…வித்தியாசமான முயற்சி சகோதரி வாழ்த்துக்கள்…💐💐

  6. S. krishnaveni says:

    அனைவரும் எளிதில் செய்யக்கூடிய சுவையான சத்தான பதார்த்தம்..இந்த அருமையான வடையை இன்றே முயல்கிறேன் உங்கள் குறிப்பு படி செய்ய..மிக்க நன்றிகள் தோழி.

  7. ‌sasikumar .v says:

    அருமையான மாலைச் சிற்றுண்டியை
    அறிமுகம் செய்த சகோதரி கமலிக்கு
    நன்றி.வாழ்த்துகள்