என் மின்மினி (கதை பாகம் – 40)

சென்ற வாரம் எப்போதுமே எனக்கு புடிக்கல அப்படினா நான் அதை யூஸ் பண்ணவே மாட்டே. என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-40

en minmini kathai paagam serial

ஒன்றும் புரியவே இல்லை., இதுலே என்ன இருக்கு. அவனாகவே வந்தான். திடீர்ணு என்னை புடிச்சிருக்குனு சொன்னான். ஆனால் நான் ஒரு பொண்ணுதானே. அவன் வந்து ஐ லவ் யு ணு சொன்னவுடனே ஓகே வா லவ் பண்ணலாம்ணு எப்படி அவன்கிட்டே சொல்லமுடியும். கொஞ்ச நானும் யோசிக்க நேரம் வேணும் இல்லையா என்று மனசுக்குள் புலம்பினாள் ஏஞ்சலின்…

இப்போதான் என் மனசுக்குள் நீ கொஞ்ச கொஞ்சமா வர ஆரம்பிச்ச. அதுக்குள்ளே என்னை இப்படி வேணும்னே விட்டு தள்ளி தள்ளி போறே என்று மனசுக்குள் நினைத்தவாறே தனது வேலையினை தொடர்ந்தாள் ஏஞ்சலின்…

கைபேசி அரட்டைகளும் இல்லாமல் போனது

கோபத்துடன் சென்ற பிரஜின் ச்சே எதுக்கு இந்த பொண்ணு இப்படியெல்லா பண்ணுது. அவளை திட்டினாலும் மனசு தாங்கமுடியாத பாரத்தால் தடுமாறி போகுது. திட்டாமலும் இருக்க முடியல.எனக்குள் என்ன நடக்குது., முதலில் இந்த கோபத்தை குறைக்கனும் என்று யோசித்தபடியே நடந்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது சுத்தமாகவே இல்லாமல் போனது. கைபேசி அரட்டைகளும் கூட அறவே இல்லாமல் போனது. நாட்கள் நகர நகர நான்கு மாதங்கள் வெகுவேகமாக உருண்டு ஓடியது…

தீடீர் என்று ஒரு நாள் இரவு மணி 10.50 இருக்கும். நன்றாக தூங்கி கொண்டிருந்தாள் ஏஞ்சலின். அவளது கைபேசிக்கு எதோ அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து Good nit swt dr என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது.யாரென்று தெரியாத எண் என்பதால் அவள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை…

கைபேசி சிணுங்களில் தூக்கம் தொலைந்தவள் தூக்கம் வராமல் பாடல்கள் கேட்டவண்ணம் தன்மனதுள் பிரஜினின் பழைய நினைவுகளை நினைத்து கொண்டே அந்தரத்தில் ஓடிய மின்விசிறியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலின்…

மனசாட்சி குத்திக்காட்டியது

ச்சே இவ்ளோ நாள் ஆச்சு. ஒரு போன் பண்ணல. ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை என்று மனசுக்குள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்…

மறுகணமே இரு இரு. அவனை குறை சொல்லுரீயே. நீ ரொம்ப ஒழுங்கா. அவன் மேலே உள்ள உன்னோட காதல் உண்மைனா நீ கூப்பிட்டு பேச வேண்டியது தானே என்று அவள் மனசாட்சி அவளை குத்திக்காட்டியது…

இதுவேற அடிக்கடி வந்து வந்து எரிச்சல் படுத்துது. உன்கிட்டே இப்போ கேட்டேனா. ஏற்கனவே நீ சொல்றது வெச்சு தான் இவ்வளவு பிரச்னையும். மரியாதையாக உள்ளேபோயி தொலை என்று தன் மனசாட்சியினை துரத்தினாள் ஏஞ்சலின்… – en minmini thodar kadhai-40

– அ.மு.பெருமாள்

பாகம் 41-ல் தொடரும்

You may also like...

2 Responses

  1. N.shanmugapriya says:

    அருமை. காதலின் வலி அவளை வாட்டுகிறது
    …..கதை காதலின் வெளிப்பாடு….

  2. எதார்த்தமான வலியும் வார்த்தைகளும் …நல்ல எழுத்து நடை .