என் மின்மினி (கதை பாகம் – 13)
சென்ற வாரம் – எனக்கு அப்படி செல்லமாக கூப்பிட அம்மாவும் இல்லை, தட்டி கொடுக்க அப்பாவும் இல்லை.. இரண்டு பேரும் ஒரே நாளில் என் கண்முன்னாடியே இறந்து போய்ட்டாங்க.. – en minmini thodar kadhai-13.
ம்…அதுவந்து என ஆரம்பித்தவன்…
எனக்கு உன்னை பார்த்த நாளில் இருந்தே ரொம்ப பிடிச்சிருக்கு. நீயில்லாத நாட்கள் ஏதும் நல்லாவே இல்லை.உன்கூட உக்காந்து சாப்பிடும் போது நிம்மதியாக இருக்கு. உன் கூட பேசிட்டே இருக்கணும் போலே இருக்கு… ஆனால் இது எல்லாம் ஏன் என்றுதான் புரியவில்லை என்று கட கட வென அவன் மனதில் இருப்பதை எல்லாம் உளறி கொட்ட துவங்கினான் பிரஜின்…
இதையெல்லாம் பொறுமையாக கேட்டுகொண்டு அமைதியாக இருந்தவள், எனக்கும் உன்னை புடிக்கும், உன்னோட வெகுளிப்புன்னகை புடிக்கும்,உன்னோட ஜோக்ஸ் புடிக்கும்… ஆனால் உன்கூடவே எப்படி நான் இருக்க முடியும்… அது எல்லாம்
தேவை இல்லாத நினைப்பு. அது எல்லாம் நமக்குள்ளே வேணாம்… நாம நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என்று முடித்தாள் ஏஞ்சலின்…
ஏன் நான் உன்கூடவே இருக்க முடியாதா… ஏன் முடியாது… உன்னோட அப்பா உன்னை எப்படி பாத்துகிட்டு இருந்தாரோ அதைவிட நல்ல உன்னை பாத்துக்குவேன்.நிஜமாகத்தான் சொல்றேன் என்று லேசான நடுக்கத்துடன் கூறினான் பிரஜின்…
ஓ….எங்க அப்பாவை போலே என்னை பாத்துக்குவீயா???
நிஜமாகவா சொல்றே என்றாள் ஏஞ்சலின்… – en minmini thodar kadhai-13
ஹே அப்பா என்ன அப்பா… அம்மா மாதிரியும் உன்னை நான் நல்ல கவனிச்சுக்குவேன்… ஏன் நீ விரும்பினால் உன்னோட நல்ல
காதலனாகவும் இருப்பேன்… எப்படி உனக்கு ஓகேவா என்றபடி தலையை குனிந்தான் பிரஜின்…
அவன் சொல்வதை சரியாக கேட்காமல் ஓகோ அப்போ சரி… பாத்துக்கோ பாத்துக்கோ என்றவள், சில நொடிகளில் டேய் என்ன சொல்றே… நீ என்னை காதலிக்குறீயா… முழுசா ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ளே காதலா…. அதெல்லாம் எனக்கு செட் ஆகாது…. ப்ளீஸ் என்றாள் ஏஞ்சலின்…
அதெல்லாம் ஒன்னும் இல்லை. காதலுக்கு எதுக்கு பலநாள், பலவருட கணக்கு எல்லாம்…
ஒரு வினாடி,ஒரே ஒரு வினாடி போதும்… அந்த ஒரே ஒரு வினாடியில் தான் நான் உன்னை…
இல்லை,இல்லை..
உன் கண்ணை முதன்முதலில் பார்த்தேன்.அன்றே பிக்ஸ் பண்ணிட்டேன்,நீதான் என்னவள் என்றவாறே லேசான காதல் பார்வையால் அவளை தன் வசப்படுத்த முயன்றான் பிரஜின்…
லவ்வோ, கிவ்வோ… நீ எத எப்படி சொல்லியிருந்தாலும் நீ உன்னோட காதலை எங்கிட்டே மிக அழகா பிரதிபலிச்சு காட்டிட்டே…
நீ உன்னோட லவ் சொன்ன விதம் கொஞ்சம் வேற மாதிரிதான் இருக்கு… ஐ லைக் தாட் என்று புன்னகை பூ பூத்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி….
பாகம் 14-ல் தொடரும்
Interesting aga irukku
கதை நல்லாத் தான் போகுது!
பிரஜன் காதல் என்கிறான்…ஏஞ்சலின் நட்பு என்கிறாள்…பார்ப்போம் ..நல்ல நடை..இளமை துள்ளுகிறது..பாராட்டுகள்
இப்போதே காதலை சொல்லிவிட்டால், பின்னர் ஏதோ பிரச்சனையை சுவாரசியமாக சொல்ல போகிறார் ஆசிரியர் என்று நினைக்கிறேன்
அருமையாக செல்கிறது தொடர் பாராட்டுக்கள்