என் மின்மினி (கதை பாகம் – 29)
சென்ற வாரம் – கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. படுத்திருந்தவாறே அந்த அறை முழுவதும் என் மங்கலான கண்களை சுழல விட்டேன்.தூரத்தில் ஏதோ ஒரு உருவம் வெள்ளை நிறத்தில் சாய்ந்து கிடப்பது போலே தோன்றியது – en minmini thodar kadhai-29.
கண்களை சுருக்கி மெதுவாக உற்றுப்பார்த்தேன்.ஆஸ்பத்திரி வாசலில் என்னை உள்ளே அழைத்துச்சென்ற நர்ஸ் ஒரு மேசையின் மீது தலைசாய்த்து படுத்திருந்தாள். அக்கா…அக்கா…என்று அவர்களை கூப்பிட முயன்று பார்த்தேன்.நான் கூப்பிடுவது அவர்கள் காதுகளுக்கு ஏனோ கேட்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து போய் கூப்பிடுவதை நிறுத்திவிட்டு அவள் தூங்கி கொண்டிருப்பதையே படுக்கையில் படுத்தவாறே பார்த்து கொண்டிருந்தேன். நேரம் சரியாக இரவு 12.15 இருக்கும்.பொத்தென்று ஒரு சத்தம்.திடுக்கிட்டு பார்வையினை கூர்மையாக்கி பார்த்தேன்.மேசையின் மீது சாய்ந்து படுத்திருந்த நர்ஸ் தூக்ககலக்கத்தில் கீழே விழுந்து கிடந்தாள்.
கீழே விழுந்தவள் ஐய்யோ என் கை.வலிக்குதே என்று கைகளை பிசைந்தபடி மெதுவாக எழும்பி என்னருகில் வந்து கண் முழிச்சு ரொம்ப நேரம் ஆச்சா.எழுப்பி இருக்கலாம் இல்லையா என்றாள். இப்போதான் முழிச்சேன்.கொஞ்சம் நேரம் இருக்கும்.உங்களை கூப்பிட்டு பார்த்தேன்.நன்றாக தூங்கிட்டு இருந்தீங்க. அதான் மேலும் மேலும் கூப்பிட வேணாம்னு விட்டுட்டே என்றேன்.
ஓ…சரி சரி.ஏன் நீ இப்படி பண்ணிட்டே.இந்த வயசுல இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்.சரியாக படிக்கவில்லைன்னு வீட்ல அம்மா அப்பா ஏதாச்சும் அடிச்சாங்களா என்றாள் நர்ஸ். எனக்கோ ஒன்னும் புரியவில்லை.என்ன சொல்றீங்க நீங்க?நான் எந்த தப்பும் செய்யவில்லையே.நீங்க ஏன் ஏதேதோ கேட்குறீங்க என்றேன்.
ஒரு தப்பும் பண்ணவில்லைணு சொல்றே.அப்புறம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி பண்ணணும்,பூச்சி மருந்து குடிக்கணும் என்றாள் நர்ஸ். என்ன அக்கா சொல்றீங்க.என்ன…..பூச்சி மருந்தை குடிச்சேனா?நான் ஏன் தற்கொலை செய்யணும்.இல்லவே இல்லை.வாழ்க்கையின் எந்த நிலை வந்தாலும் இதைபோன்ற கோழைத்தனமான செயலை நான் எப்போதும் செய்யவே மாட்டேன் என்று நர்ஸிடம் சொல்ல சொல்லத்தான் அப்பாவும் அம்மாவும் பேசியது நினைவுக்கு வந்தது.
அம்மா என்ன காரியம் செய்துவிட்டாய்.அப்பாவிடம் சொன்னது போலே பூச்சிமருந்தை எங்களுக்கும் கொடுத்து நீயும் சாக நினைத்தாயா அம்மா என்று என் அம்மாவினை நினைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன்.
அருகில் நின்ற நர்ஸ் என்ன சொல்றே.எனக்கு ஒன்னும் புரியவில்லை என்றாள். ஒன்னும் இல்லை.என் அம்மா அப்பா தம்பி எல்லாம் எங்கே.நான் அவங்கள உடனடியாக பார்க்கணும்ணு அடம்பிடித்து படுக்கையினை விட்டு எழும்பி ஓட ஆரம்பித்தேன்.
மூக்கில் பொருத்தப்பட்ட மூச்சுகுழல்களும் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதர்காக குத்தப்பட்ட ஊசியும் கீழே கழன்று விழ கைகளில் இருந்து இரத்தம் துளி துளிகளாக கொட்ட தொடங்கியது – en minmini thodar kadhai-29.
– அ.மு.பெருமாள்
பாகம் 30-ல் தொடரும்
மனம் கலங்க வைத்துவிட்டார் ஆசிரியர். எந்தப் பெண்ணும் சந்திக்க வேண்டாத ஒரு சூழ்நிலை. கதை அருமையாக செல்கிறது …
இனியடுத்து என்ன என்பது போல சுவாரசியம் கூட்டும் கதை
கதை மிகவும் வித்தியாசமாக நகர்கிறது
கதையை சுவாரஸ்யமாக நகர்த்தும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்