சொக்க வைக்கும் சொதி குழம்பு

சாதம், தோசை, இட்லி, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் சுவையான திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை வழங்கிய வள்ளி அவர்களுக்கு நன்றி – sothi kuzhambu

sothi kuzhambu

தேவையானவை

1). முற்றிய தேங்காய் 1 (துருவியோ அல்லது கீறியோ வைத்துக் கொள்ளவும்
2). கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, காலிபிளவர் ஆகிய காய்கள் நறுக்கியவை ஒரு கப் வைத்துக் கொள்ளவும்
3). பச்சை மிளகாய் 3 – 4
4). எலுமிச்சம்பழம் – 1 பெரியது
5). மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
6). கடலை மாவு – அரை ஸ்பூன்

செய்முறை

தேங்காயை துருவலுடன் மிளகாய் சேர்த்து அரவை இயந்திரத்தில் போட்டு (மிக்ஸியில்) சற்று சூடான வெந்நீர் விட்டு திக்காக ஒரு பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு மீண்டும் அந்த தேங்காயை அரைத்துக் கொண்டு இரண்டாவது பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டு பால்களையும் ஒன்றாக சேர்த்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் – sothi kuzhambu.

பால் எடுத்த தேங்காயை திரும்ப மிக்ஸியில் போட்டு வெந்நீர் விட்டு மூன்றாவது பால் எடுத்துக் கொள்ளவும். அந்த தேங்காய் பாலில் நறுக்கிய காய்கறிகளுடன், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு வாணலியில் வேகவிடவும். குக்கரில் வைக்க வேண்டாம் வெந்ததும் தனியாக தண்ணீர் இன்றி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தேங்காய்ப்பாலில் உப்பு ,மஞ்சள் தூள்,கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும் பின் வேக வைத்துள்ள காய்கறிகளை நீரின்றி சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துசற்றே கிண்டிக் கொள்ளவும்.பிறகு கரண்டியை எடுத்து விட்டு மோர் குழம்பு போல முறை கூட்டி வரும் போது கிண்டி இறக்கவும் .பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான் குழம்பு ரெடி

தாளிக்க

கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு (காரத்திற்கேற்ப) தாளித்து குழம்பில் கொட்டவும் ..சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு ரெடி இதை 3 அல்லது 4 பேர் வரை சாப்பிடலாம்.

குறிப்பு: அதிகம் கொதிக்க விட வேண்டாம் அதிகமாக கொதிக்க விட்டால் திரிந்து போய்விடும் – sothi kuzhambu.

திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான குழம்பு வகை இது. விருந்து சாப்பாடு என்றாலே சொதி குழம்பு என்பது அந்தக்காலத்து மரபு. இதில் இஞ்சி சிறு பருப்பு சேர்த்து செய்பவரும் உண்டு. ஆனால் மேற்கூறிய இம்முறைதான் ஒரிஜினல் திருநெல்வேலி ஸ்பெஷல் குழம்பு .செய்து பாருங்கள்.. அசந்து போவீர்கள் அதன் சுவையில்., நன்றி. – தி.வள்ளி, திருநெல்வேலி.

You may also like...

6 Responses

 1. நிர்மலா says:

  செய்முறை விளக்கத்திற்கு மிகவும் நன்றி.

 2. Rajakumari says:

  Super

 3. Kavi devika says:

  அருமை … இன்றே செய்முறையில்…

 4. மாலதி நாராயணன் says:

  செய்முறை அருமை.. வாழ்த்துக்கள்

 5. Kasthuri says:

  தென் தமிழ்நாட்டின் பிரபல உணவுமுறை தெரிந்துகொண்டோம்.. நன்றி

 6. தி.வள்ளி says:

  நன்றி சகோதரிகளே….சொதி குழம்பு உண்மையிலேயே சொக்கவைக்கும் ….சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போடலாம் என்றே தோன்றும்