என் மின்மினி (கதை பாகம் – 39)
சென்ற வாரம் – குழம்பி போனவளாக சரி காலைல யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்று தூங்க முயற்சி செய்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-39
தூக்கம் கண்களை தழுவ அயர்ந்து தூங்கி போனாள் ஏஞ்சலின்… அவனது நினைவலைகள் பாழாய்போன கனவில் வேறு வந்து வந்து செல்லவே தூங்கி கொண்டே புலம்பியபடி.,
“நான் இன்னிக்கு காலைல சீக்கிரமே எழுந்து உன்னை பார்க்க ஆவலா வந்தேன். நான் ஆசையாக வாங்கின வாட்ச்யினை உன் கைல கட்டி எப்படி இருக்குனு பாக்கணும்ணு ஆசையா வந்தேன்…
ஆனால் கருவாப்பயலே உனக்குத்தான் அது புடிக்காம போச்சு.விடு விடு என்னையாவது உனக்கு புடிக்குமானு பாக்குறே. இல்ல பாதியிலே கழட்டி விட்டுருவீயா என்று புலம்பியாவாறே சிரித்தாள்…
மறுமுனையில் அவன்
சிரித்தவள் தீடீர் என்று என்னை விட்டுரு வேணா., ரொம்ப பயமா இருக்கு, எனக்கு எனக்கு என்று தேம்பி அழுது கொண்டே படக்கென்று விழித்தாள் ஏஞ்சலின்… அச்சமயம் சூரியன் தனது கதிர்களை அவளது மேனியில் தூவி அவளை தங்கதேவதையாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்… ஐய்யோ என்ன இது எப்போ விடிந்தது. இவ்வளவு நேரம் தூங்கி போய்ட்டேனே!
லேட்டா ஆகுது சீக்கிரம் ஆஃபீஸ் கிளம்பனும் என்று வெகுவாக கிளம்ப தயாரானாள்… மணி சரியாக காலை 10.20 இருக்கும்.பிரஜினது நினைவுகளில் மெய்மறந்து கனவுலகில் தனை மறந்து அவனது குரும்புகளை ரசித்து கொண்டிருந்த சமயம்.,ட்ரிங் ட்ரிங் என்று போன் அலற ஆரம்பித்து அவளது ரசனையினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. போனை எடுத்து சொல்லுங்க என்றவுடன் மறுமுனையில் அவன்…
என்ன போன் எடுக்க இவ்வளவு நேரமா என்று கேட்டதுதான் தாமதம்.,அவன் மேலே அவளுக்கு இருந்த கோபங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் பறந்து சென்றன… இல்லடா.கொஞ்ச வேலை.அதான் கவனிக்கல.ம்ம்ம் சொல்லு,காலையில் சாப்பிட்டு வந்தீயா என்று தனது வழக்கமான பேச்சை தொடங்கினாள் ஏஞ்சலின்
ம்ம்ம்….நீ சாப்டீயா என்று பதிலுக்கு கேட்டான் பிரஜின்… இல்லடா ரொம்ப நேரம் தூங்கி போய்ட்டேன். ஆஃபிஸ்க்கு லேட் ஆச்சுனு கிளம்பி சாப்பிடாமலே வந்துட்டேன் என்றாள் ஏஞ்சலின்…
ஓஹோ சரி சரி ஒரு நேரம் சாப்பிட்டலனா ஒன்னும் உயிர் போகாது என்று நக்கலடித்தான் பிரஜின்… அதுதான் நேத்தே என்னோட பாதி உயிரை பேசியே கொன்னுட்டே இனிமேல் என்ன இருக்கு.அதைவிடு அப்புறம் என்று வேறு
பாதையில் தனது பேச்சை திசைதிருப்பினாள் ஏஞ்சலின்… ஹேய் இப்படி எல்லா சினிமா டயலாக் போலே பேசிட்டு இருக்காதே.இந்த மாதிரி பேசி பேசி என்னோட வெறுப்பை மட்டும் தான் சம்பாதிக்க முடியமே தவிர எப்போதும் அன்பை வாங்க முடியாது…
எனக்கு அந்த வாட்ச் பிடிக்கல.பிடிக்கலணு சொன்னே.இதுல என்ன தப்பு இருக்கு.எனக்கு இது பிரச்னையாகவே தோணல.ப்ளீஸ் ஓவரா சீன் போடாதே என்று கோபமானான் பிரஜின்… ம்ம் அப்போ நான் உனக்கு கொடுத்த வாட்ச்ல உள்ள அழகு தான் நீ பாக்குறே.அதை உன்கிட்ட கொடுத்த என்னோட மனச நீ பாக்கல இல்லையா ஓகே தப்பு என்னோ டதுதான் மன்னிச்சுறு என்றாள் ஏஞ்சலின்.
அப்படி இல்லை.
எப்போதுமே எனக்கு புடிக்கல அப்படினா நான் அதை யூஸ் பண்ணவே மாட்டே.என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின்…
சரி ஓகே.,எப்போதும் பல்ப் வாங்குறது என்னோட வேலைதானே.பழகிபோச்சு விடு என்று தனது வெறுப்பை காட்டினாள் ஏஞ்சலின்…
இவ்வளவு சொல்லியும் ஓவரா சீன் கிரியேஷன் பண்ற.ஓகே நான் போகிறேன் என்று எரிச்சலுடன் கிளம்பினான் பிரஜின்…
– அ.மு.பெருமாள்
பாகம் 40-ல் தொடரும்
கதை நன்றாக போகிறது
கதை சுவாரசியமாக போகிறது….