என் மின்மினி (கதை பாகம் – 1)
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த நண்பர் அர்ஜுன் முத்தம் பெருமாள் எழுதிவரும் தொடர்கதை, வாரம் தோறும் நமது நீரோடையில் வெளியாகவுள்ளது. அதன் முதல் பாகம் தான் இந்த பதிவு! – en minmini thodar kadhai.
அழகான அந்திநேரம்… சூரியன் தன் கதிர்களை கடலுக்குள் இழுத்தவண்ணம் மஞ்சள் வெயிலை காட்டி மகிழ்வித்து கொண்டிருந்த நேரம்…
அலுவலகம் முடிய இன்னும் சரியாக ஐந்து நிமிடங்கள் மட்டுமே மீதமுள்ளது என்பதை கடிகாரம் காட்டிய நிலையில் அயராமல் சுற்றி கொண்டிருந்தது…
எதையும் கண்டுகொள்ளாமல் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகணும் என்று வேக வேகமாக தன் வேலையினை செய்து கொண்டிருந்தவனை,, – en minmini thodar kadhai
ஏங்க ஒரு சின்ன உதவி என்று குறுக்கிட்டு தடுத்தது ஒரு பெண் குரல்…
குரலின் இனிமையில் மெய்மறந்தவனாய் நிமிர்ந்து ம்ம்ம் சொல்லுங்க என்ன வேணும் என்றான் அவன்…
ஒண்ணும்இல்லை. என் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை. ஏதோ கோளாறு போலே.கொஞ்சம் உங்க கம்ப்யூட்டரில் இருந்து ஒரு பிரிண்ட் கொடுத்துக்கவா என்றது அந்த பெண்குரல்…
எதையும் கேளாமல் அவள் குரலின் இனிமையில் மெய்மறந்து அவள் கண்களை பார்த்தே ம்ம் என்று மெதுவாக தலை அசைத்து கொண்டே அவளை ரசித்து கொண்டிருந்தான் அவன்…
சில நிமிடங்களில் “ஓகே தேங்க்ஸ்” வேலை முடிந்தது, நான் கிளம்புறேன் என்றவாறே கிளம்ப தயாரானவளிடம்
அதுக்குள்ளே முடிச்சுடீங்களா… வேகம் தான் நீங்க என்றவாறே.,
உங்க பேரு அப்படினு கொஞ்சம் பல்லை இழித்தவாறே அவளை பார்த்து கேட்டான் அவன்…
ம்ம்ம் இவன் எதுக்கு இப்போ இழிச்சுக்கிட்டே பெயரை கேட்குறான் அப்படினு யோசிச்சுகிட்டே என் பெயர்…..
பாகம் 2ல் தொடரும்…..
– அ.மு.பெருமாள், நாகர்கோவில்.