பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

மருத்துவ குறிப்புகள் – இன்றைய பெண்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய காய்கறிகள் பற்றி காணலாம் – pengal prachanai tamil.

pengal prachanai tamil

வலியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டி – கொத்தவரை (சீனி அவரைக்காய்) அதிகம் பயன் படுத்தவும்.

தாமதமாகும் மாதவிடாய்க்குமுருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

மலடே மலடாகி பெண்களுக்கு தாய்மை மலர கத்தரிக்காய் அதிகம் பயன்படுத்தலாம்.

வெண்பூசணி அதிகம் பயன்படுத்தினால் – சரியான கால இடைவெளி இன்றி வரும் மாதவிடாய் போக்கு தவிர்க்கப்படும். மேலும் இந்த காய் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது – pengal prachanai tamil.

தைராய்டு கோளாறுகள் – எலுமிச்சை சேர்த்துக் கொள்வதால் சரியாகிறது.


தனியா துவையல் – காய்ச்சலுக்கு ஏற்ற ஒன்று

தேவையான பொருட்கள்:
தனியா (மல்லி) 50 கிராம்
பூண்டு 3 பற்கள்
வற்றல் (மிளகாய்) 5
புளி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
மல்லி பூண்டு மிளகு வற்றல் புளி அனைத்தையும் மணம் வரும் வரை வறுக்கவும், பின்னர் அதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். நல்ல மணமான காரசாரமான துவையல் தயார், காய்ச்சலுக்கு ஏற்றது.


சிறந்த மருத்துவ குறிப்புகள்

 1. வில்வ இலை சுக்கு மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் எந்த வித காய்ச்சலும் நீங்கும்.
 2. கொள்ளு முளைகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 3. வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் எரிச்சல் நீங்கும்.
 4. வேப்ப விதையில் வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.
 5. முள்ளங்கி இலைச்சாறு 5 மில்லி காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.
 6. ஆண்மை தன்மை அதிகரிக்க திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
 7. கோரைக்கிழங்கு பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புத்திக்கூர்மை உண்டாகும்.
 8. தினசரி 5 ஆவாரம்பூ மென்று வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 9. இரத்த அழுத்தம் சீராக ஒரு குவளை மோரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்து வரலாம்.
 10. இலந்தை பழம் இரத்தத்தை சுத்தம் செய்யும்.
 11. இலந்தை இலையை தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை அருந்தி வர உடல் எடை குறையும்.
 12. பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர பசி உண்டாகும்.
 13. அல்சர் நோய் குணமாக தினமும் ஒரு குவளை திராட்சை பழச்சாறு குடிக்கவும்.
 14. உடல் பலம் பெற தினமும் தொடர்ந்து 40 நாட்கள் அத்திப் பழம் சாப்பிடவும.
 15. முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் நோய் குணமாகும்.
 16. வரட்டு இருமல் குணமாக எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகலாம்.
 17. முலாம்பழம் அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுநீரகக் கோளாறுகள் தவிர்க்கப்படும் சுகமான எளிதில் தூக்கம் வர கசகசா, கற்கண்டு பயன்படுத்தி வரவும்.
 18. பித்தம் நீங்கி உடல் நலம் பெற, பணங்கிழங்கு சாப்பிடலாம்.
 19. வயிற்றுப்போக்கு, பேதி நீங்க கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
 20. பணங்கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வீரியம் தணியும்.

– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.

You may also like...

1 Response

 1. Deepa says:

  பயனுள்ள தகவல்கள்.. நன்றி…