என் மின்மினி (கதை பாகம் – 19)
சென்ற வாரம் – மரத்தில் இருந்து குதித்து ஓடிவந்து வண்டியில் ஏறி அமர்ந்தபடி ம்ம்ம்ம் இப்போ போகலாம் என்று சிரித்தாள் ஏஞ்சலின்.. – en minmini thodar kadhai-19.
சிறிது நேர பயணத்திற்கு பிறகு ஒரு ஜூஸ் ஷாப்பின் முன்னால் வந்து வண்டியினை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும் ஷாப்பினுள் சென்று ஒருவரையொருவர் பார்த்தவண்ணம் அமர்ந்தனர்…
அவர்கள் அமர்ந்து சில வினாடிகளில் சார் என்ன சாப்பிடுறீங்க என்றபடி தன் கையில் இருந்த மெனுகார்ட்யினை அவர்களிடம் நீட்டினார் கடைஊழியர்.
ம்ம் கொஞ்சம் நேரம் இருங்க சொல்றே ம்ம்ம் எனக்கு லெமன்ஜூஸ்., உனக்கு என்ன ஜூஸ் வேணும் சீக்கிரம் சொல்லு என்றாள் ஏஞ்சலின்…
ஹே ஏன் அவசரபடுத்துறே.லெமன்ஜூஸ் நம்மவீட்ல கூட செய்து குடிக்கலாம்.அதனாலே நான் ஷார்ஜா வாங்க போகிறேன்.நீயும் அதையே வாங்கிக்கோ.சூப்பரா இருக்கும் என்றான் பிரஜின்…
வேணாம்னு சொன்னா கேட்கவா போறே.நானும் அதையே சொல்றே என்றபடியே அண்ணே என்று கூப்பிட ஆரம்பிக்கும் போதே அவள் முன்னே வந்து நின்றுகொண்டு சொல்லுங்க மேடம்,என்ன வேணும் என்றார் கடை ஊழியர்.
ம்ம் இரண்டு ஷார்ஜா வேணும்,கொஞ்சம் சீக்கிரம் தாங்க அண்ணே என்றபடியே மீண்டும் பிரஜினிடம் அரட்டை தொடங்கினாள் ஏஞ்சலின்
மெதுவாக அவள் கையினை தொட முயற்சி செய்து கொண்டே அவளின் மிருதுவான புன்னகையில் மூழ்கி கிடந்தான் பிரஜின்
அவன் கை நெருங்கி வருவதை பார்த்தவள், சுதாரித்து கொண்டு தன் கையினை அவனிடம் இருந்து விலக்கியபடி இந்தாடா ஜூஸ் கொண்டுவந்துட்டாங்க.சீக்கிரம் குடி என்றாள் ஏஞ்சலின்.
ம்ம் ஓகே என்று தனக்கான ஜூஸ்கப்பினை கையில் எடுத்தாவாறே அவள் ஜூஸ் கப்பினையும் எடுத்துகொண்டு இந்தா உனக்கு என்று அவளின் நீட்டியவன் ஜுஸ்கப்புடன் சேர்த்து அவள் கையினையும் பிடித்தான் பிரஜின்.
ஹே இதே சாக்குல என் கையையும் புடிச்சுடீயா.சரி சரி பரவாயில்லை கையை விடு என்று பிடித்திருந்த தன் கையினை அவன்
கையில் இருந்து விலக்க முற்பட்டு தோற்றுப்போனாள் ஏஞ்சலின் கிறிஸ்டி – en minmini thodar kadhai-19.
கதை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது
கதையோடு தொடர்ந்து பயணிக்க… வாழ்த்துகள்
கதை நடை ஜாலியாக போகிறது… வாழ்த்துகள்..
கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.