என் மின்மினி (கதை பாகம் – 3)
சென்ற வாரம் – அவள் செல்வதையே பார்த்து கொண்டே ச்சே….. இவள் என்னைஎப்படி கூப்பிடுவானு சொல்லாமலே போய்ட்டாளே… – en minmini thodar kadhai-3.
இரவு பொழுதும் ஆனது. கட்டிலில் புரண்டு கொண்டே பப்புவை நினைத்தபடி.,
இவ யாரு எனக்கு??? இவளுக்கும் எனக்கும் அப்படி என்ன சம்பந்தம்,
பார்த்த ஒரே ஒரு நொடியிலே மனதினுள் நுழைந்து விட்டாளே என்று எண்ணிக்கொண்டே ,,…
தன்னையும் மறந்து தூங்கி போனான் அவன்…
பொழுது புலர்ந்து அனைவரும் பரப்பரப்பாக ஆபீஸ்க்கு வர ஆரம்பிக்கும் நேரம் கடிகாரம் சரியாக 9 மணியை தாண்ட முயற்சி
செய்து கொண்டிருந்தது…
இவனும் சரியாக இயங்காமல் நேரம் குறைவாக காட்டும் தன் வாட்ச்யினை சரிசெய்த வண்ணம் ச்சே இந்த இத்து போன
வாட்ச்சால இன்னிக்கும் லேட்டா ஆகி போச்சா என்று விருக் விருக்கென ஓடி வந்து தன் கேபினுக்குள் நுழைந்தான்…
வந்து தன் இருக்கையில் உக்கார்ந்து இருந்தவனுக்கு திடீர் என்று பப்பு வந்துருப்பாளா, எப்படி தெரிஞ்சுக்குறது எந்த
டிபார்ட்மென்ட்ல வேலை செய்றான்னு கூட ஒரு வார்த்தை கேட்கலயே என்று மனதிற்குள் புலம்பிய வண்ணம் அவள் வருகிறாளா
என்று,!,
தன் அருகில் இருக்கும் ஜன்னல் வழியே ஆபீஸின் வாசல் கதவை பார்த்து கொண்டே இருந்தான்…
மணியும் 10.05 யினை தொட்டது. உள்நுழையும் மெயின் கேட்டின் கதவும் மூடப்பட தயாராக இருந்த அதே நேரம்….
ட்ரிங் ட்ரிங் என்று போன் மணி அலறியது. ஜன்னலில் இருந்து தன் பார்வையினை விலக்கி போனை எடுத்து ஹலோ சொல்லுங்க
என்றான்…
மறுமுனையில் ஒரு பெண் குரல்… சார் உடனடியாக மீட்டிங் ஹால் வாங்க…
ஒரு சின்ன மீட்டிங் இருக்கு என்று சொல்ல., ஓகே
வருகிறேன் என்று பதிலளித்தபடி போன் இணைப்பை துண்டித்து விட்டு பூட்டப்பட்ட மெயின் கேட் வாசலை பார்த்து கொண்டே
அவளை பார்க்காத ஏமாற்றத்துடன் மீட்டிங் ஹாலுக்கு விரைந்தான் அவன்…
பாகம் 4-ல் தொடரும்
மீட்டிங் ஹாலுக்குள் அவளா ! அல்லது அவளின் தொடர்புடையவர்களா ! – அடுத்த வாரம்,,,,,,,…. பாகம் 4-ல் – en minmini thodar kadhai-3
– அ.மு.பெருமாள், நாகர்கோவில்.