என் மின்மினி (கதை பாகம் – 37)
சென்ற வாரம் – சரி சாப்பிடலன்னா விடவா போறே.சாப்பிட்டு தொலையிறேன் என்று அரைமனசுடன் சாப்பிட உட்கார்ந்தான் பிரஜின்.. – en minmini thodar kadhai-37.
வெறுப்புடன் கொஞ்சமாக கையில் எடுத்து பார்த்து சுவைத்து பார்த்தவாறே ம்ம்ம் பரவாயில்லையே நல்லா இருக்கு.எனக்கு புடிக்காத விஷயம் இன்னிக்கு உன்னால எனக்கு புடிச்சிருக்கு ரொம்ப நன்றி என்றான் பிரஜின்.
ம்ம்.நன்றாக சாப்பிடு என்றவாறே அவன் சாப்பிடுவதை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ஏஞ்சலின். ஏன் இப்படி பாத்துட்டே இருக்கே.கண் வெச்சுற போறே.அப்புறம் எனக்கு தான் வயிறு வலிக்கும் என்று சொல்லிகிட்டே இந்தா நீயும் சாப்பிடு…
அப்படினு ஒரு கை சாப்பாடினை எடுத்து அவளுக்கு கொடுத்தான் பிரஜின். ஏதோ கோவில் பூசாரி பிரசாதம் தருவதை போலே அதை வாங்கி சாப்பிடவும் அவள் கண்களில் கண்ணீர் துளி வழிந்து பிரஜின் கைகளில் விழுந்தது…. – en minmini thodar kadhai-37
அவனை நினைத்தபடி
ஹே இப்போ ஏன் அழுதே.எதுக்கெடுத்தாலும் அழுறே.எனக்கு சாப்பாடும் வேணா ஒண்ணும் வேணா என்று கோபத்துடன் எழுந்து கையை கழுவினான் பிரஜின். ச்சே இப்படி பண்ணிட்டேனே.
சாப்பிட கூட விடாம டென்சன் பண்ணிட்டேனே என்று மனசுக்குள் நொந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் நிரம்பி வழிய., ஒன்றுமே பேசாமல் அழுதபடியே எழுந்து நான் கிளம்புறேன் என்று பிரஜினுடன் சொல்லிவிட்டு மழையில் நனைந்தபடி கிளம்பினாள் ஏஞ்சலின்.
தனியாக கிளம்புகிறாளே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் போனா போயி தொலை என்று அசையாமல் உக்காந்து இருந்தான் பிரஜின். ஒரு வழியாக பஸ்ஸை பிடித்து ஹாஸ்டலுக்கு திரும்பியவள் சாப்பிட கூட மனமில்லாமல் அவனை நினைத்தபடியே தூங்கி போனாள்…
இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது.அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள்… ச்சே எங்கே போட்டு தொலைச்சே இந்த போன் வேற என்று மனசுக்குள் புலம்பியவாறே ம்ம்ம்ம் இங்கதான் இருக்குதா என்று சலிப்புடன் எடுத்து ஹலோ என்றாள்.
மறுமுனையில் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் என்று ஒரு குரல்… ஒன்றும் பேசாமல் கைபேசியினை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்து விட்டு மீண்டும் தொலைந்த தூக்கத்தை தொடர்ந்தாள் ஏஞ்சலின்….
வழக்கம் போலே காலை விடிந்தது.ஊரெல்லாம் ஒரே புகைமூட்டம்.பழைய பொருள்களை அனைவரும் எரித்து கொண்டு போகிப்பண்டிகையை ஆடி பாடி கொண்டாடி கொண்டிருந்தனர்… அவற்றை வேடிக்கை பார்த்தவாறே அலுவலகம் கிளம்பினாள் ஏஞ்சலின்…
தூரத்தில் பிரஜின் வருவதை பார்த்து பக்கத்தில் சென்று கொஞ்ச என்னோட ஆபீஸ் ரூம்க்கு வந்துட்டு போயே என்று சொல்லிவிட்டு வேகமாக அவளது ஆபீஸ் ரூமுக்குள் நுழைத்தாள் ஏஞ்சலின்… பிரஜினும் அவள் பின்னாலே வந்து அவளது ஆபீஸ் ரூமுக்குள் சென்றான்.
சின்ன பரிசு
சரி நைட் எதுக்கு போன் பண்ணுனே.எனக்கு உன்னால தூக்கம் கலைந்து போச்சு என்று அவள் அதட்ட ஒன்றுமே பேசாதவனாய் என் இனிய தேவதைக்கு இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு அவள்
கையை பிடித்து….நான் உனக்கு சர்ப்ரைஸ் பண்ணதா நேத்து வேணும்னே சண்டை போட்டுடே சாரி என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின்.
போடா., ஒன்னும் பேச வேணா. எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகு யாரும் சாப்பாடு ஊட்டிவிட்டது இல்லடா. நீ ஒரு பிடி சோறு கொடுத்ததும் எனக்கு அது அமுதமாக இனித்தது. வேற என்ன சொல்றதுனு தெரியாம கண்ணீர் வந்துட்டு என்று மீண்டும் அவள் புலம்ப ஆரம்பிக்க…
மெல்லிய சிரிப்போடு
சரி ஓகே விடு. நான் சும்மாதான் விளையாடுனேனு தான் சொல்லிட்டேனே.நீ இப்படி பேசுனா என்ன அர்த்தம். விடு அதை பத்தி இனி ஏதும் பேச வேணா என்றான் பிரஜின்… உடனே அவளும் அதை பற்றி ஏதும் பேசாமல்., இந்தா இத பிரிச்சு பாரு என்று சின்ன பரிசுபெட்டகத்தை அவனிடம் நீட்டியபடி இது உனக்குனு நான் வாங்குன ஒரு சின்ன பரிசு என்றாள்…
அட என்ன இது… உனக்கு தான் பிறந்த நாள். நான் தான் எதாவது வாங்கி தரணும். இருந்தாலும் பரவாயில்லை இது உன்னோட முதல் பரிசு. வேணானு சொல்லல என்று பிரித்து உள்ளே இருந்த கைகடிகாரத்தை எடுத்தான்.
மனம் நொறுங்கி
கைகடிகாரத்தை பார்த்தவன் ஐயோ ச்சே நல்லாவே இல்ல.என்ன இப்படி வாங்கி வெச்சுருக்கே. எனக்கு வேணா. நீயே வெச்சுக்கோ. இவ்ளோதான் உன் டேஸ்டா என்று மூஞ்சில அடிச்சா போலே சொல்லிட்டு மெல்லிய சிரிப்போடு கிளம்புறே என்றான் பிரஜின்…
ஹே நல்லாத்தானே இருக்கு.இதுக்கு என்ன குறை…ரொம்ப பண்ணாதே… ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு டைம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிகோ என்றாள் ஏஞ்சலின்… வேணா எனக்கு புடிக்கலைனு சொன்னா விட்டுரு. உன்கிட்டே நான் இப்போ எனக்கு வாட்ச் வாங்கி குடுனு கேட்டேனா. வேணானு சொன்ன அதோடு விடு. சும்மா உயிரை வாங்காதே என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பிரஜின்… அவன் பேச பேச மனம் நொறுங்கி போனவளாய் நிலைகுலைந்து நின்றாள் ஏஞ்சலின்..
– அ.மு.பெருமாள்
பாகம் 38-ல் தொடரும்
Pen manathu poo pondrathu enpathu aankalullu innum theriavillai enpathu ithan moolam therilirathu
கதை நன்றாக நகர்கிறது
தொடர் கதைக்கு வாழ்த்துக்கள்!
பிரஜின் ஏஞ்சலின் உரையாடல்
இன்னும் சிறிது sharpபாக இருந்தால்
இயல்பாக இருக்கும்.
தொடர் கதைக்கு வாழ்த்துக்கள்!
பிரஜின் ஏஞ்சலின் உரையாடல்
இன்னும் சிறிது sharpபாக இருந்தால்
இயல்பாக இருக்கும். நன்றி
அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி…கருத்துகளை மனதில் வைத்து இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்…
மிக்க நன்றி