என் மின்மினி (கதை பாகம் – 48)
சென்ற வாரம் – அதே நேரத்தில் அயர்ந்த தூக்கத்தில் இருந்து மீளமுடியாதவனாய் தேங்க் யூ மை டியர் என்று பேசியபடி மெதுவாக கண்களை திறந்தான் பிரஜின் – en minmini thodar kadhai-48
கண்களை திறந்தவனுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. நான் பேசியது எல்லாமே கனவில் தானோ. அதுதானே பார்த்தே.நமக்கு எல்லாம் எங்க இப்படி நடக்க போகுது என்று படுக்கையினை விட்டு எழுந்து வேக வேகமாக கிளம்ப தயாரானான் பிரஜின்…
அதே நேரத்தில் என் ஆளபாக்க போறே அப்படினு பாட்டை பாடிக்கிட்டே தலைமுடியினை சீவி சிங்காரித்து ஊர் சுத்த தயாராகிகொண்டிருந்தாள் ஏஞ்சலின்…
அப்போ நீ இன்னிக்கு ஆஃபீஸ் க்கு போகலையா.., நீ சீக்கிரமா எழுந்துச்சு ஆடிட்டு இருக்கும் போதே எனக்கு தெரியும்டி, சரி நல்லா இருந்தா சரி என்று குறுக்கிட்டு அடங்கியது சக தோழியின் குரல்…
ம்ம் வருவேன் ஆனா கொஞ்ச டவுட் என்று வெட்கத்துடன் கண்ணாடியில் ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டினை என்று தன் நெத்தியில் ஒட்டியபடி குடுகுடுவென ஹாஸ்டலினை விட்டு வேகமாக கிளம்பினாள் ஏஞ்சலின்…
அவள் வெளிவரும் முன்னரே வந்து அவளின் அன்றைய காட்சிக்காக கால்வலிக்க காத்துகொண்டிருந்தான் பிரஜின்… நேரமாக ஆக கால்வலி வேற பின்னி எடுத்தது அவனுக்கு.அவன் அதை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் அவள் வரும் வழியினையே பார்த்துக்கொண்டு நின்றான்…
சற்றுநேரம் ஆனது.அவனை சுற்றிலும் சில்லென்ற காற்று வீசியது போலே உன்னதமான உணர்வு.நிமிர்ந்து பார்த்தான். கடல் நீர் அலைஅடிக்க மேகங்கள் தெளிந்து வானத்தை கிழித்து இளஞ்சூரியன் வெளிவருவதை போலே சிவப்பான ஆடையிலே தனக்கே உரித்தான எள்ளுப்பூ புன்னகையால் காந்தள் இதழ் போன்ற விரல்கொண்டு, ஹாய் சாரி கொஞ்ச லேட்டா போச்சு என்று ஹாஸ்டல் வாசலினை விட்டு வெளியே வந்து அவன் எதிரினில் வந்து நின்றாள் ஏஞ்சலின்…
அவளின் எழிலில் மூழ்கி போனவன் இதுக்கெல்லாம் எதுக்கு சாரி சொல்றே என்று வழிந்து கொட்டினான் பிரஜின்… ம்ம் ரொம்ப பசிக்குது டீ சாப்பிடலாமா அப்புறம் கிளம்பலாமே ப்ளீஸ் என்று செல்லக்கொஞ்சலுடன் அவனை கேட்டாள் ஏஞ்சலின். அவள் கேட்டு இவன் மறுக்கவா செய்வான்….அவளை தன் பைக்கில் ஏற்றி கொண்டு டீ கடையினை நோக்கி பயணம் தொடர்ந்தான்.. – en minmini thodar kadhai-48
– அ.மு.பெருமாள்
பாகம் 49-ல் தொடரும்