என் மின்மினி தொடர்கதை (பாகம் – 52)
சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-52
50 வாரம் கடந்து
En minmini thodar kadhai
இப்போ ஹேப்பியா ஜில்லுனு இருக்குமே என்று கோபத்துடன் பிரஜினும் வண்டியை விட்டு இறங்கினான். நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனக்கு இப்போ ஜில்ஜில்னு தான் இருக்கு., அதுக்கு உன் வண்டி என்றவள்., சாரி சாரி உன் நண்பனோட ஓட்டை வண்டி நின்னு போனது ஒன்னும் காரணம் இல்லை. வேற எதோ ஒரு காரணம் இருக்கு… ஒரு வேளை குளிர்காய்ச்சல் வர அறிகுறியாக இருக்குமோ என்று லேசான குளிர்நடுக்கத்துடன் கேட்டாள் ஏஞ்சலின்.
வேணும்னு தான் வண்டியை நிப்பாட்டினேன்
எம்மம்மா என்னம்மா யோசிக்கிறே, நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளேயில்லை.., வேற வேற வேற மாறி ஆளு என்று நக்கல் அடித்தான் பிரஜின். என்ன நக்கலா எனக்கு நிஜமாகவே ஜில்லுன்னு எதோ காய்ச்சல் வர மாதிரி இருக்கு என்றாள் பயத்துடன் ஏஞ்சலின். ஹே ஹே நீ நெனெக்குற அளவுக்கு இங்க ஒண்ணும் ஆகலை பயப்படாதே இந்த இடம் தான் ஜில்லுனு இருக்கு. நான் வேணும்னு தான் வண்டியை நிப்பாட்டினேன். அதுவாக ஒண்ணும் ரிப்பேர் ஆகல என்றான் பிரஜின்…
என்னடா சொல்றே ஏன் இப்படி பண்ணினே என்று மனதிற்குள் பயந்தவாறே சுற்றும்முற்றும் பார்த்தாள் ஏஞ்சலின். சுற்றிலும் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வனாந்திரம் போலே அந்த இடம் காட்சியளித்தது..
கண்கலங்கியவாறே கெஞ்சினாள்
பயத்தில் திறுதிறுவென சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே வா இங்க இருந்து உடனே கிளம்பலாம் என்னை உடனே கூட்டிட்டு போயி ஹாஸ்டலில் இறக்கி விடு நான் போறே என்று லேசாக கண்கலங்கியவாறே கெஞ்சினாள் ஏஞ்சலின்…
அவளின் பயந்த சுபாவத்தை பார்த்து ரசித்துகொண்டே அவளை இன்னும் இன்னும் பயமடைய செய்யும் முயற்சியில் தனது புத்தியை தீட்டினான் பிரஜின்…
அட இதுக்கே பயந்துட்டீயே,இன்னும் எவ்வளவு இருக்கு. கஷ்டப்பட்டு உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன் தெரியுமா..? இத பண்றதுக்கு உன் பின்னாடி ஆறேழு மாசம் சுத்தி உன்கிட்டே நல்லவன் மாதிரி நடிச்சு, அத நீ நம்பி.., அப்பப்பா போதும் இன்னிக்கு அவ்வளவு கஷ்டத்துக்கும் பலன் அடஞ்சே தீருவேன்… இப்போ நீ வேற என்கிட்டே தனியாக மாட்டிக்கிட்டீயா, வசதியா போச்சு. இப்போ என்ன பண்ணுவே என்றான் பிரஜின்…
அவன் பேச பேச அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, லேசாக துளிர்விட்ட பயம் மூளைவரை பாய்ந்தது போலே இருந்தது. வாய்திறந்து ஹே நீ சும்மாதானே சொல்றே.எனக்கு தெரியும் நீ ரொம்ப நல்லவன், என்று மெதுவாக அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் ஏஞ்சலின்.
மயங்கி விழுந்தாள் ஏஞ்சலின்
ம்ம் இப்போதுதான் நான் நல்லவன்னு புரியுதா என்று மனசுக்குள் சிரித்தவாறே, அவளது மெல்லிய மேலாடையினை இழுக்க கையினை நீட்டினான் பிரஜின். பயத்தின் உச்சத்துக்கே சென்றவள். இது எல்லாம் துரோகம்.. உன்னை நம்பி கூட வந்தவளை இப்படி பண்றது என்ன நியாயம் என்று பயத்தில் ஏதேதோ உளறதொடங்கினாள் ஏஞ்சலின்.
ஹே உன் நியாயத்தை தூக்கி குப்பையில் போடு என்றவாறே அவள் மேலாடையினை இழுக்க மீண்டும் முன்னேறினான் பிரஜின். பயத்தில் செய்வது அறியாது தப்பிக்கவும் வழியின்றி பொத்தென்று மயங்கி விழுந்தாள் ஏஞ்சலின்.
அவள் கீழே விழவும் பதறி போய் அவள் அருகில் சென்று என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றான் பிரஜின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-52
– அ.மு.பெருமாள்
பாகம் 53-ல் தொடரும்