என் மின்மினி (கதை பாகம் – 7)
சென்ற வாரம் – அப்படியெல்லாம் யாரும் இல்லைங்க
என்று கூறியபடி போன் இணைப்பை துண்டித்தது மறுமுனையில் பேசிய அந்த பெண்குரல் – en minmini thodar kadhai-7.
போன் இணைப்பு துண்டிப்பு செய்யப்படவும், அச்சுனு யாரும் இல்லையா… அப்போ இவன் யார் என்று குழம்பி குழம்பி
தலைவலியே வந்தது போல் ஆனாள் பப்பு…
அன்று முழுவதும் மனம் அவனது நினைவுகளில் மூழ்கியதால் நேரம் மெதுவாக செல்வது போலே ஓர் உணர்வு… இதற்கிடையில்
தன் வேலைப்பளு காரணமாக தலைவலி இன்னும் அதிகமாகவே செய்ததால் ஆபிஸ் முடியும் முன்னரே பெர்மிஷன் போட்டுவிட்டு
வீட்டுக்கு கிளம்பினாள் பப்பு…
இரவுப்பொழுது முடிந்து விடியலும் ஆனது… வழக்கம் போலே ஆபிஸ்க்கு கிளம்பினாள்.
வரும் வழியில் எல்லாம் மனம் முழுவதும் அவன் முகமே தேடவே கண்களும் அவனை தேட ஆரம்பித்து இருந்தன… எங்கும்
அவனை காணாததால் அவள் முகம் ஏமாற்றத்தில் கலையிழந்து கண்கள் சிவந்தபடியே தன் டிபார்ட்மெண்ட்யினை நோக்கி
நடந்தாள்… நடந்துகொண்டு இருந்தவளுக்கு ஏதோ ஒரு யோசனை… அவன் இடத்தில் போயி பார்த்துவிட்டு வரலாமா என்று
திரும்பி அவன் கேபின் இருக்கும் இடத்திற்கு வந்தாள்…
நேற்று அவன் அமர்ந்து வேலை செய்த இடத்தில் ஒரு பெண் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். அவளிடம் ஒன்றும்
கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஏமாற்றத்துடன் மீண்டும் அவள் இடத்தை நோக்கி புறப்பட்டாள் பப்பு.. – en minmini thodar kadhai-7
பாகம் 8-ல் தொடரும்
அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறோம்
பப்பு அடுத்து என்ன செய்ய போகிறாள் என யூகிக்க முடியாத ஏழாம் பாக மின்மினி அகத் அருமை. பாராட்டுக்கள்.
சீரியல் தொடர் மாதிரிப் போயிட்டு இருக்கு! ஆனாலும் விறுவிறுப்பாகச் செல்கிறது.
அச்சு என்ன ஆனான்? பப்பு பாவம் நமக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டுவது ஆசிரியருக்கு கிடைத்த வெற்றி