என் வீட்டு தெய்வம் : கவிதை
மானிடரைப் படைப்பது பிரம்மன்
என்ற கூற்று எனக்கில்லை,
அம்மா நீ என்னை வடித்ததால் !
உன் முகமே காட்சிகளாய் ,
உன் மடி உறக்கமே சொர்க்கமாய்,
நீயே உலகமாய்
நான் வாழ்ந்த அந்த
பொற்காலம் வேண்டும் எனக்கு
மீண்டும் மீண்டும்……
மழலையாய் தாய் தன் மகவை
பார்ப்பது இயல்பு …
தாயே நீயோ நான் வளர்ந்த இன்றும்
என்னை பச்சிளம் மகவாய் தாங்க,
சில சமயம் நீயே என் மகளாய்
சித்தரிக்காப்படும் இயல்புகள் தினமும்.
இன்று அலுவலகம் முடிந்து
நான் தாமதித்து வீடு திரும்பும்
விநாடிகளை நெருப்புத் துண்டுகளாக்கி
கரங்களில் பற்றி எண்ணிக்கொண்டு
வீட்டின் முன்னோ, வீதி முற்றத்திலோ,
காத்திருக்கும் ஜீவன்
நீ தான் என் உயிரே !!!!!
கடவுளை மட்டும்
நான் கண்டால்
என் ஆயுளை எடுத்துக் கொண்டு
இதுவரை உன் பச்சிளம் மகவாய் நான் வாழ்ந்ததை
மறுமுறை தா ! என்று கேட்பேன்.
உன் மகனாய் இதுவரை 25 வருடங்கள் வாழ்ந்த இந்த பொற்க்காலம் மறுமுறை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் என்னில் உருகிய வார்த்தைகள் தாயே.!!!!!
– நீரோடைமகேஷ்
good one…
lovely …… touching…. nice.