நண்பனைப் பார்த்த கணம்

நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு
மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. friend poem nanban kavithai

என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்த
ஒற்றை நிலா – சந்திரனே உன் நட்பு.

உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட
பிடிக்காமல் போனது என்னிடம்.

சுவைக்க சுவைக்க நேற்று பார்த்த திரைப்படக் கதை சொல்லி…..
உன்னால் என் கற்பனைத் திரையில் உருவான
எத்தனையோ திரைப் படங்கள்
எனக்கு மட்டுமே திரையிடப்பட்டு .

பிறப்பின் அர்த்தங்கள் தேடவில்லை(தேவையில்லை)
கடவுள் தந்த பரிசாய் நீ கிடைத்தபோது.

சொல்லெடுத்து நீ நின்றால் சோகங்கள் மரணிக்கும் ,
வில்லெடுத்து நீ நின்றால் அந்த
மரணமும் இலைமறைக் காய் போல மறைந்து விடும்.

friend poem nanban kavithai

எத்தனையோ நாட்கள் கள்ளிச் செடி மறைவில்,
தோட்டத்தில், தேநீர் கடையில்
நான் ஒட்டிய புகை வண்டிக்கு சிவப்பு விளக்காய்
உன் அறிவுரைகள். இருந்தாலும் சில சமயம்
“இன்று மட்டும் – ஒன்று மட்டும்” என்று எத்தனையோ நாட்கள்
கிடைத்த உன் அனுமதிகள் .

சிலருக்கு நண்பர்கள் பல கிடைக்கலாம்
அனால் ஆயுள் வரை பயணிக்கும் நட்பு நமதே.

friend poem nanban kavithai

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. Anonymous says:

    Anna all super…..

  2. Anonymous says:

    Anna all super go ahead