வீண் முயற்சி ! விடா முயற்சி !

வீண் முயற்சி செய்யாதே, விடா முயற்சி செய் என்று சிலர் சொல்ல
கேட்டிருக்கிறோம். வீண் முயற்சியை விடாமல் செய்து என்ன பயன். பலரும் பல
தருணங்களில் செய்து தோற்றுப் போகும் பொது உணரும் மனம் அந்த தோல்வியை
சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை. vidaa muyarchi kavithai

சிதைக்கப்படும் என்று தெரிந்தும்
கனவில் தினம் தினம் ஒரு மாளிகை
கட்டி முடிக்கிறது மனம்.

கண்கள் மூடிய உறக்கத்திலும்
காட்சிப்பிழைகள்.

vidaa muyarchi kavithai

கருவில் சுமப்பது வெறும் கல்
என்பது தெரியாமல்
கற்பனை திரை எதற்கு ?

அழும் மேகம் அறியுமா ?,,
விரிசல் விழுந்து வீனைய்ப் போன
கரிசல் காட்டு பூமியை மட்டுமே சிலிர்க்க
வைக்கும் சத்தியம் ?

தூரத்தில் தூறல் என்று
நாவரண்டு ஓடுகிறாய்
அந்த கானல் நீருக்காக !

விதை விருட்சமாக அது காலக் கணிதத்திடம் பதில் சொல்லியே ஆகா வேண்டும்,
ஆனால் காத்திருக்காத நீரோடைகள் சங்கமித்து
காட்டாறாக மாறி காலத்திற்கு கட்டளையிடலாம் !

மழைத்துளி கூட முத்தாகும், விடம் கூட மாணிக்கமாகும், கற்கள் கூட அதிசயப் பொருளாகும். அது செல்லும் பாதை சொல்லும் முடிவுரை.

போராடு தோழமையே !
சரியான பாதையில் !
சரியான நேரத்தில் !

 – நீரோடைமகேஷ்

vidaa muyarchi kavithai

You may also like...

5 Responses

 1. அருமையான சொல்லாடல்கள் நண்பரே.
  கவிதை நெஞ்சில் விடாமல் பதிந்தது.

 2. Nandraga irukku best wishes

 3. nandraga irukku best wishes

 4. முயற்சி திருவினையாக்கும்!
  முயற்சி உடையார்… இகழ்ச்சி அடையார்!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!

 5. தூரத்தில் தூறல் என்று
  நாவரண்டு ஓடுகிறாய்
  அந்த கானல் நீருக்காக !

  அருமையான வார்த்தைகள்.வாழ்த்துகள்