கோதுமை கச்சாயம் செய்முறை

உடலுக்கு ஆரோக்கியமான உணுவுப்பண்டங்களில் கோதுமை கச்சாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தை, பற்களை, ஈறுகளை பலப்படுத்தும் கோதுமையை கச்சாய வடிவில் எளிதில் உடலில் சேர்த்துவிடலாம் – gothumai kachayam.

gothumai kachayam

தேவையான பொருட்கள்

  • கோதுமை – 250 கிராம்
  • கட்டி வெல்லம் – 250 கிராம்
  • வாழைப்பழம் – 1
  • தேங்காய் துருவல் – தேவையான அளவு
  • ஏலக்காய் – தேவையான அளவு

செய்முறை Gothumai Kachayam

கோதுமையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். கோதுமையுடன் கட்டிவெல்லம் வாழைப்பழம் சேர்த்து நன்றாக தோசை மாவு பக்குவத்தில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கி எண்ணெய் காய்ந்ததும் பொரித்து பரிமாறலாம்.

குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு. முதல் முறை செய்யம்போது பொறுமையாக கைப்பக்குவம் வரும் வரை பொரிக்கவும்.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு ரசிக்க – https://youtu.be/LA2eZQ8JhMM


மேலும் அரிசி முறுக்கு செய்முறை தெரிந்துகொள்ள…


கீழ்கண்ட பதிவிற்கு இணையான ஆரோக்கியமான பதிவாக மேலே உள்ள பதிவு தயாரிக்கப்பட்டது. செய்வதற்கு இலகுவாக சிலர் மைதா பயன்படுத்துவார்கள் அவர்களுக்கு மேலே உள்ள இந்த பதிவு (கோதுமையில்) செய்து பதிவிடப்பட்டது.

You may also like...

2 Responses

  1. Udhayanila groups says:

    Superb

  2. Nithyalakshmi says:

    super.. i will try