அறுபடை வீடுகளில் எது குரு ஸ்தலம் – வைகாசி விசாக சிறப்பு பதிவு

இன்று வைகாசி விசாகம் (04-06-2020), முருகப்பெருமான் அவதரித்த நாள் – ethu guru sthalam.

ethu guru sthalam

முருகனின் அறுபடை வீடுகளான,

 1. திருப்பரங்குன்றம்
 2. திருச்செந்தூர்
 3. பழனி
 4. சுவாமிமலை
 5. திருத்தணி
 6. பழமுதிர்ச்சோலை

ஆகியவற்றில் எது குரு ஸ்தலமாக போற்றப் படுகிறது என்பதை பார்ப்போம்.

திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் ஆலயமே குரு தலமாக போற்றப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஞான குரு

பல அதிசய சக்திகளை பெற்ற சூரபத்மன் தேவர்களுக்கு பல்வேறு இடையூறுகளை கொடுத்து வந்தான். சூரனை வதம் செய்ய தேவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க சிவபெருமானால் அனுப்பப்பட்ட முருகப்பெருமான் போருக்கு கிளம்பிய இடமே இந்த தலமாகும். முருகப்பெருமான் போருக்குச் செல்லும் முன் குரு பகவானிடம் அசுரர் களை பற்றிய வரலாற்றை அறிந்து கொண்டதால் இத்தலம் சிறப்பு பெற்றது. மேலும் இத்தலத்தில் முருகப் பெருமான் ஞான குருவாக அருள்புரிகிறார் – ethu guru sthalam.

கடற்கரை ஓரத்தில்

இந்த தலம் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம் 2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. முருகப்பெருமான் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தலமாகவும் சிறப்பு பெறுகிறது. கடலை பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

பஞ்சலிங்க தரிசனம்

முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

You may also like...

4 Responses

 1. R. Brinda says:

  நல்ல அருமையான பதிவு! திருச்செந்தூர் முருகனைத் தரிசித்த ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. இன்று வைகாசி விசாக நன்னாளில் முருகனைத் துதிப்போம்!

 2. மாலதி நாராயணன் says:

  வைகாசி விசாக சிறப்பு பதிவு மிகவும் பயனுள்ள தகவல்.
  முருகப்பெருமான் கடற்கரை அருகில் அமைந்துள்ள‌தலம் மற்றும் குரு ஸ்தலமாக போற்றப்படும்‌ விஷேச மான ஸ்தலம் ‌திருச்செந்தூர். தகவல் அருமை. நன்றி

 3. Udhayanila groups says:

  Super

 4. தி.வள்ளி says:

  சூரனை வதம் செய்ய தாய் பார்வதிதேவியிடம் சிக்கல் எனும் தலத்தில் வேல் வாங்கி முருகன் சூரசம்ஹாரம் நிகழ்த்திய தலம். பார்வதி தன் மொத்த சக்தியையும் திரட்டிஅந்த வேலை சக்தியின்அம்சமாக வழங்கியதாக வரலாறு கூறுகிறது.