ஆரோக்கிய நீரோடை (பதிவு 10)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 10

arogya neerodai wellness

தக்காளி தோசை

தேவையான பொருட்கள்

1) பச்சரிசி ஒரு கப் புழுங்கலரிசி ஒரு கப் …
2) உளுத்தம் பருப்பு கால் கப்
3) நன்கு பழுத்த தக்காளி 5
4) மிளகாய் வற்றல் 4
5) வெந்தயம் கால் ஸ்பூன்

செய்முறை

அரைக்க : அரிசி இரண்டும், உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.நன்றாகக் கழுவிய பின் நல்ல தண்ணீர் ஊற்றி அதில் மிளகாய் வற்றலையும் கிள்ளிப்போட்டு ஊறவிடவும்.

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து கொண்டு அரைந்ததும், அதற்கேற்ற உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி வழிக்கவும்.ரொம்ப மையாக அரைக்க வேண்டாம்.

இட்லி மாவு போல அதிகம் புளிக்க விடக்கூடாது.மூன்று மணி நேரம் வெளியில் இருந்தால் போதுமானது. சுவையான தக்காளி தோசைக்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன் .. – ஆரோக்கிய நீரோடை 10


தீபாவளி பாரம்பர்ய இனிப்பு (திரட்டுப்பால்)

தேவையானவை:

1) முற்றிய தேங்காய் ஒன்று பெரியது. …துருவி வைத்துக் கொள்ளவும்…
2)கெட்டியான பால் ஒரு லிட்டர் ..
3)சிறு பருப்பு 100 கிராம்
4)ஏலக்காய்த்தூள் அரை ஸ்பூன்
5) நெய் 100. -150 ml
6)வெல்லம் பொடித்தது அரை கிலோ ..
(வெல்லம் வாங்கும்போது நல்ல தேன் கலரில் உள்ள மண்டை வெல்லமாகப் பார்த்து வாங்கவும் ..வெள்ளை நிறம் ருசி தராது..)

செய்முறை :

சிறு பருப்பை லேசாக வறுத்துக் கொண்டு மிக்ஸியில் துருவிய தேங்காயுடன் போட்டு அரைக்கவும். ரொம்ப மையாக இல்லாமல், சற்று கொரகொரப்பாக அரைத்து வழித்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்திலோ, குக்கரிலோ பாலை ஊற்றி பால் நன்றாக காய்ந்து கொதிக்க ஆரம்பித்ததும்… அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொடுக்கவும் ..கைவிடாமல் தொடர்ச்சியாக கிளர வேண்டும்… இல்லையென்றால் அடி பிடித்து விடும். பருப்பு நன்கு வெந்து..சற்று இறுகி வரும்போது வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் சேர்க்கவும்..(வெல்லத்தை பாகு காய்ச்ச தேவையில்லை )சற்று இறுகி வர ஆரம்பிக்கும் போது… கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொண்டே வரவும்..நெய் சேர்த்தால்தான் அடிப்பிடிக்காமல், ஒட்டாமல் வரும் ..பூரணம் பதம் வந்ததும் ..ஏலக்காய் தூளை தூவி ..மணமான நெய்யை மேலே சிறிது சேர்த்து கிளறி விடவும்…
சுவையான திரட்டுப்பால் ரெடி ..

இது திருநெல்வேலியின் (100 ஆண்டு பழமை வாய்ந்த) பாரம்பரியமான ஒரு இனிப்பு வகையாகும்.இங்கு நடக்கும் திருமணங்களில் மாப்பிள்ளை…பெண் அழைப்பிற்கு.. திரட்டுப்பால் இல்லாமல் இருக்காது…

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *