குழந்தைகளுக்கான உணவுகள்
இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் விரும்பி உணபதற்கான சில எளிய உணவு பதார்த்தங்களைப் பற்றியும் அவற்றின் செய்முறைகள் பற்றியும் காண்போம் – குழந்தைகளுக்கு சத்தான உணவுகள்.
1. தேங்காய் இனிப்பு சப்பாத்தி
வழக்கமாக சப்பாத்திகளை தேய்த்து, சுட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு தேங்காயை துருவி அதனுடன் வெல்லமோ சீனியோ சேர்த்து ஒரு துளி நெய் விட்டு இளம் சூட்டில் ஒரு நிமிடம் வதக்கி வைக்கவும். தேவைப்பட்டால் முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம் பழம் (நறுக்கியது) சேர்த்து சப்பாத்திகளின் நடுவில் வைத்து சப்பாத்திகளை உருட்டி ஒரு சிறு கிராம்பை வைத்து கொடுக்கவும். இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, புரதம் என அனைத்தும் இருப்பதால், நல்ல
சத்தான உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள் (- குழந்தைகளுக்கு சத்தான உணவுகள்).
2. பப்பாளி பனிக்கூழ்
பப்பாளி பழம் வைட்டமின் ஏ நிறைந்த ஒன்று. ஆனால் சில குழந்தைகள் அதைக் கண்டாலே முகம் சுளிப்பா். => இதோ அவர்களை கவரும் வகையில் சிறு முயற்சி.
பப்பாளி பழத்தை நறுக்கி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். கலவை இயந்திரத்தில் அரைத்து கூழ் பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆற வைத்த ஒரு குவளை பாலை அதனோடு சேர்த்து தேவைப்பட்டால் இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். பால், பப்பாளி கூழ் ஆகியவற்றை மீண்டும் கலவை இயந்திரத்தில் சேர்த்து ஒரு சுற்று எடுக்கவும். சின்ன சின்ன குவளைகள், கிண்ணங்கள் ஆகியவற்றில் ஊற்றி குளிர் பதனப் பெட்டியில் வைத்து 4மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும். பனிக்கூழ் கண்டவுடன் பப்பாளி மறந்து போய் விடும். பணம் மிச்சமும் பாதுகாப்பும் கிடைக்கும்.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
இரண்டடும் மிக அருமை பாராட்டுகள்
இரண்டுமே குழந்தைகளுக்கேற்ற நல்ல சத்தான உணவு.
குழந்தைகளை கவரும் …அதே சமயம் சத்துணவும் கூட..எளிமையான செய்முறையும் கூட…ஏஞ்சலின் கமலா அவர்களுக்கு பாராட்டுகள்.
அருமையான ரெசிபி
பப்பாளி பனிக்கூழ் சூப்பராக இருந்தது