இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!

அடர்வனக்காடாம்..
அரும்பு துளிர்த்த செடிகளுக்கும்,
ஆகாயளவு வளர்ந்து நிற்க்கும் மரங்களுக்கும்,
அரவணைப்பை கொடுக்கும் தாய்வீடாம்.. – innum konja neram iruntha thaan enna

innum konja neram iruntha thaan enna

அழகுமலை தொடராம்..
இது மனித வாசம் பட்டிடாத ஒரு தேசமாம்,
அதில் தொட்டில் கட்டிடாத குழந்தையாய்
மனதை ஆட்டுவிக்கும் புது நேசமாம்..
உச்சாணிக் கொண்டையிலே..
மலைகள் யாவும் எதிரொலிக்க,
கூவுவது குயிலாம்..
வளைந்து நெளிந்து ஓடுவது
வருணனின் பார்வைபட்டதில் பெய்யும் அமிர்தமாம்..
சாடைகளில் பேசிக் கொள்வதெல்லாம்..
நரி கூட்டங்களின் தந்திர மொழியாம்..
ஓடையில் ஒற்றைக்காலில் தவம்,
கொக்கின் கூர்முனை ரகசியமாம்..
கருமேகம் சூழும் போது
ஆடும் மயில்.. – innum konja neram iruntha thaan enna
மாமன் மண்ணை தொடுவதற்க்கான
வெட்கமாம்..
உருமல் சத்தம் கேட்டதுமே..
ஊரடங்கு போட்டதுபோல்,
உறைந்து நிற்கும் நிலையோ..

தலைவன் வருகைக்கான குறியாம்..
வெயில் காய்ந்து தீஞ்சாலும்..
மழை சூழ்ந்து பாய்ந்தாலும்..
புத்துயிராய் புவி வருமாம்..
இந்த இயற்கை..!
ஒண்டிக்கட்டையாய் வந்தேன் நானாம்..
இங்கேயே ஒன்றினைந்து போனேன் காரணம் ஏனாம்..?
இயற்கை என்ற இந்த படைப்பினில் தானாம்..!
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!
ஆசைகளோடு

– மணிகண்டன் சுப்பிரமணியம்

You may also like...

6 Responses

  1. Rajakumari says:

    கவிதை இயற்கை ஆக நன்றாக இருக்கிறது

  2. Sreessugan says:

    I don’t know ur so creative like this ur so amazing in all the way i see u …. I like ur thoughts and everything see in short days ur unquie person so happy to find u wat ever its I like it all….The Best Kavithai All The Best For Great Success

  3. Sriram says:

    கானக வாழ்வை அழகாக மொழியாக்கிவிட்டார் கவிஞர்… வாழ்த்துகள்

  4. கலை வாணி says:

    Super….

  5. தி.வள்ளி says:

    இயற்கையெனும் இளையகன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி…கவிதை அருமை இளங்கவியே…

  6. Kavi devika says:

    கவி மிக அழகு. வாழ்த்துகள் கவிஞரே