காலம் விரைகிறது

நீயும் பிரம்மன் தான்

காலக்கண்ணாடிக்கு வெளிச்சம் விளம்பரம் அல்ல,
அது தானாக உணர வைக்கும் kaalam viraikirathu tamil kavithai.
நொடிகளில் நகர்வுகளை நோக்கி பயனுண்டோ?
காற்றில் கரையும் கர்ப்பூரம் ஆகிறது உன் விஞ்ஞானம்,
கவலைத்திரை மறைத்த சூரியனே ! காற்றடித்தால்
மேகச்சோம்பல் கரைந்தோடும்.

kaalam viraikirathu tamil kavithai
கடிகார முற்களுக்குள் காதல் இல்லாமல்
அதன் வேலை நடந்திராது.
பிரம்மனால் படைக்கப்பாய் என்பதைவிட
மானுடப் பிரம்மாக்களில் நீயும் ஒருவன்.

 – நீரோடை மகேஸ்

– – – – – – – – – – – – – – – – – – – – – –

காலம் விரைகிறது

அவர் வளர்ந்தவர்

நான் சிறியவள்

எங்களிலும் வளர்ந்தவர் இன்னொருவர்

மிக உயரமனவர் வேகமாக அசைகிறார்

அவரை விட வளர்ந்தவரின் வேகம் குறைவு

சிறியவள் நான் அசைகிறேன் மெதுவாக

என்னை  அணைத்து முத்தமிட

ஒரு மணி நேரம்

என்னைத் துரத்துகிறார் வளர்ந்தவர்

எங்கள் இருவரையும் அடிக்கடி

முத்தமிடுகிறார் மிக வளர்ந்தவர் .

மூவரும் ஓன்று சேர்ந்து,

உங்கள் முடிவை நோக்கி!

காலம் விரைகிறதைக் காட்டுகிறோம்.

எனக்கு நேரம் இல்லை

என்ற பேச்சு வேண்டாம்.

உனக்கு  இறைவன் தந்த காலத்துக்குள்

நல்லதைச் சிந்தி,

நல்லதைப் பேசு,

நல்லதைச் செய்.

– பொன் குலேந்திரன் – கனடா

 

பொறுப்பாகாமை

You may also like...