கானல் நீராய்ப்போன உயிர்நீர்

நிஜத்தில் கண்மூடி, கனவில் கண்விழித்த என்னை

மிகக்கொடிய மிருகம் ஒன்று துரத்த,

ஆயுளை நீடிக்கும் போராட்டத்தின் பாதை

நீடித்து பாலைவன மணலில் முடிந்தது.
kaanal neeraai pona uyir neer
இரத்தம் குடிக்கத் துடிக்கும் மிருகம்
கண்களின் பிம்பத்தில் பதிந்தபடி,
தாகத்தின் தடம் தேடி உதடுகள்.
மேகத்தாய் கடன்கொடுத்த
ஒரு சொட்டு நீர் என்னை நோக்கி பயணிக்க
உதடுகளால் அதை உயிர் நீராக்கத் துடித்த கணம்,
பாலைவன வெப்பத்தில் கானல் நீரானது அத்துளி.
கொத்திக்கும் இரத்தத்தை குடிக்க மிருகம் பாய்ந்த கணம்
கண்விழித்தேன்.

 

 – நீரோடைமகேஸ்

You may also like...

2 Responses

  1. பயணித்தது பயமுறுத்தியது…!

  2. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியின் விளக்கம்.. நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன்… நன்றி..