தாய் ஊட்டிய நிலாச்சோறு

சில மாதங்களாக களவுபோயிருந்த என் கற்பனைக் குதிரையை

மீட்டெடுக்க முடியாமல்,

ஒரு பொம்மைக் குதிரை செய்து பயணிக்கிறேன் என் படைப்பாற்றலை இழக்காமலிருக்க.

ஆயிரம்தான் கற்பனைப் பொய் சொல்லி, கவிதை சொல்லி

கவிதை உலகில் முடிசூடினாலும்,

பெற்றவளைப் பற்றிய கவியில்,
ஓருண்மை சொல்லி காலத்தை வெல்லும் தாய்மைக்கு

கைம்மாறு செய்ய முயற்ச்சிப்பதை தான் உலகம் முதலில் ஏற்கும்.

thaay oottiya nila soru

“தாயே,

ஆயிரம் காதலிகள்,

ஏன் ஆயிரம் மனைவிகள்,

தன்னை சூழ்ந்து அமிர்தமே ஊட்டினாலும்

நீ ஊட்டும் ஓர் உருண்டை நிலச்சோற்றுக்கு

ஈடாகுமா” ?

 

 – நீரோடை மகேஷ்

You may also like...

3 Responses

 1. Anonymous says:

  Nice Sir

  – Kavi

 2. தாய் அன்பிற்கு எதுவுமே ஈடில்லை…

  வாழ்த்துக்கள்…

 3. 2008rupan says:

  வணக்கம்
  தாய்ப்பாசம் என்றால் சும்மாவா.. வரிகள் அருமை வாழத்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *