நா மணக்கும் காஞ்சிபுரம் இட்லி
Kanjipuram idly
இட்லி !! எல்லோருக்கும் பிடித்தது, குழந்தைகள் முதல் வயதானவர் வரை மற்றும் நோயாளிகளுக்கும் மிகவும் ஏற்ற ஒரு உணவு.இட்லிக்கு பெயர்போனது காஞ்சிபுரம். இப்போது அந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி எவ்வாறு தயாரிப்பது என்பதை பாப்போம் kanjipuram idly.
செய்ய தேவையானவை:
பச்சரிசி – 1 கப்
புழுங்கலரிசி – 1 கப்
உளுந்து – 1 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
சுக்கு பொடி – 1/4 தேக்கரண்டி
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க;
கடுகு -1/2 தேக்கரண்டி
வெள்ள உளுந்து – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 2 தேக்கரண்டி
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை;
அரிசி வகை மற்றும் உளுந்தை 1 மணி நேரம் ஊறவையுங்கள் . ஊறிய பின்னர் , நன்கு கழுவி சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்கு பொடி, ஆப்பசோடா சேர்த்துக்கொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.வணெலியில் எண்ணையைக் காயவைத்து, கடுகு,வெள்ள உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்று ரெண்டாக உடைத்து அதனுடன் சேருங்கள். இஞ்சி துருவியது, கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத் தெடுங்கள். கம கமக்கும் காஞ்சிபுரம் இட்லி ரெடி.