நீ என்ற ஒற்றை சொல்லில் நான்
நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம்
பேருந்து நிலையத்தில் என் நிலவு.
என்னை பார்க்கமுயற்சித்த
அவள் கண்களை வெட்கம் தடுத்ததை
நான் ரசித்த கணம்,
ஓர் இனம் புரியாத இன்பம் என்னில்.
தோழிகளின் சங்கமத்தின் காரணத்தால்,
என்னை பார்க்க அவள் கடைவிழி துடித்து
முயற்சித்த கணம் என்னை இழந்தேன்.
அவள் கடைக்கண் படபடப்பை கண்ட
அந்த விநாடிகளிலே ஆசைகள்
என் ஆயுளை பற்றிக் கொண்டது.
மழை என்ற ஒற்றை சொல்லில் தான்
வானத்திடம் இந்த பூமி காதல் கொள்கிறது.
நீ என்ற ஒற்றை சொல்லில் தான்
என்னை இந்த உலகமே என்னை நேசிக்கிறது.
சுதாரித்துக்கொள்ள முடியாத அத்து மீறிய
காதல் கேட்டது கடவுள் முகவரி என்ன என்று
“கடவுளே உன் முகவரி என்ன” ?, நன்றி சொல்ல.!
– நீரோடைமகேஷ்.
அருமை ! நன்றி !
//நீ என்ற ஒற்றை சொல்லில் தான்
என்னை இந்த உலகமே என்னை நேசிக்கிறது.//
அருமையான கவி வரிகள் சகோதரா.எனக்கும் ஓர் காதல் வேண்டும்.
அடடா இங்கும் ஒரு நீரோடை அழகோ அழகு.
நீராடட்டும்
கவிகள்
நீந்திச்செல்ல வந்துச்செல்லும்
கவி படிக்க மீன்கள்..