வெற்றிச் சூரியனே

உன் பார்வை பட்டதும்
அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை
விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும்
தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும்
நுரை கூட அதன் பிரதிபலிக்கும்
கடமையிலிருந்து தவறாத போது !
நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை
மற(றை )க்கலாமா ?.

sooriyan kavithai nanban kavithai amma

ஒரு சூரியனைக் காணவே தயங்கி
தினமும் சோம்பல் முறிக்கிறாய். !
உன்னுள் ஆயிரம் சூரியனின்
சக்தி உள்ளதை மறந்துவிட்டு.

சிறகுகள் உள்ள பறவைகள் எல்லாம்
சிகரம் தொட்டுவிட முடியாது!
சிரமில்லா புழு முயற்சி செய்தால் போதும்.

சூரியனாய் உன்னை வருணிக்கிறேன்,
நீ வெறும் புழுவாய் இருந்தாலும்
நீ முயற்சித்தால் போதும் சிகரம் உன் காலடியில்.

கடும் பாலைவனத்தில் புற்கள் வளரும்,
சூரியனில் காகங்கள் கூடு கட்டும்
பனி மலையில் கற்பூரம் சுடர்விடும்.
அசாத்திய நாட்களையும் சாத்தியமாக்கும்
வல்லமை கொண்டவன் நீ !

உன்னை அறிஞனாக பார்க்க தொடங்கு
சாதனை வெகு தூரம் இல்லை.

– நீரோடை மகேஷ்

You may also like...

1 Response

  1. S.SYED says:

    superb lines ji go ahead God always belong with you ji