என் படைப்புகள் சமர்ப்பணம்

உலகம் பார்க்க உருவம் தந்து
உயிர் கொடுத்த தாய்மைக்கு,

கண்கள் மறந்த உறக்கத்தில்
நினைவுகள் நிறைந்த கனவுக்கு,

தலை சாயும் நாற்காலியில் மட்டுமே
ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய்
ஜொலிக்கும் தந்தைக்கு,

padaippugal samarppanam kavithaineerodai mahes

என் கற்பனையை நிரந்தரமாக்கி
நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில்
நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு,

தினமும் என்னை கற்பனைக் குதிரையில்
ஏற்றி விடும் அந்த பேருந்து பயணத்துக்கு,

பிரம்மனின் படைப்பில் அதிசயப் பொருளான
அந்த நீரோடைப் பெண்ணுக்கு,

கற்பனை தேரோட்ட வைக்கும் என் ஆத்மாவுக்கு,

இந்த நீரோடை சமர்ப்பணம்.

–தொடரும்

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. சமர்ப்பணம் – கவிதை அருமை சார் ! பாராட்டுக்கள் ! நன்றி !