கவிதை தொகுப்பு 51 – அன்னையர் தினம்

நடந்து வரும் கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் அன்னையர் தின சிறப்பு கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகிறோம் – annaiyar thina kavithai thoguppu

amma kavithai thaayullam

என்னில் முதல் கவிதை ..

நான் எழுதும்
கவிதையை
என்னை எழுதிய அன்னைக்கு
சமர்ப்பிக்கிறேன்.

ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மா
உன் முன்னே!!

ஆகட்டும்.
கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்
அதன் கைப்பிடி என்னவோ
உன் நினைவில்.

உனை தாண்டி நான் யார்,
உன்னிலும்
மேலானதை தேட.

கடலும்
சிறுக்க தானே செய்யும்
உன் முன்.

நவீன
அறிவியலால் கூட அசைக்க முடியா
சிற்பம் நீ

கேள்விகளாலே
சுருக்க முடியா உன்னை
எதை
கொண்டு நிரப்புவேன்.

அன்னை இருக்குமளவும்
அன்னையர் தினம் தான்.

பெற்றவள் மட்டுமே அன்னை அல்லவே,
பெண்மையே
அன்னை தான்..

– ஸ்டாலின் ஆண்டனி


கருவறைப் பெட்டகத்தில்
பத்திரமாக பாதுகாத்து
பக்குவமாய் பத்தியமிருந்து
என்னைப் பெற்றெடுத்தவளே!

உணவிற்கு உதிரப்பாலையும்
உறக்கத்திற்கு உன் நெஞ்ச
மஞ்சத்தையும் கொடுத்து
வளர்த்தவளே!

நிழலாய் இருந்து ,இமைகள்
கண்களை காப்பது போல்
காத்தவளே!

நான் தாயானபோது உணர்ந்தேன்
தாய்மையின் உன்னதத்தை….
அர்த்தங்களுக்கு அடங்காத
அகராதியை…
இறைவனுக்கே இணையில்லாத
வார்த்தையை….

அன்னையர்கள்தினமும்
உதித்துக்கொண்டேதான்
இருக்கிறார்கள்
கண்ணனின் யசோதைகளாய்
ராமனின் கோசலைகளாய்!

– ரோகிணி


அன்பில் கலந்த உயிரான உறவு !

அடிமனதில் ஏக்கம் கொண்டு !
ஆயிரம் கனவுகள் மெய்ப்பட்டு பலன்
அளித்திடுமே !
சந்தோச சாரலில் மிதக்கும் வாழ்வு !
ஆர்பரிக்க்கும் எண்ணத்தின் விடியலோ!
உறுதி செய்த பின்பு தன்னை
ஊக்கம் படுத்திய விடிவெள்ளியே !
மாதம் கடந்து செல்ல செல்ல
மகிழ்ச்சியில் அரவணைத்திடுவாள்!
தன்னுள்…
கண்ணில் பட்ட பாசம் எல்லாம் !
கனவின் வழியாய் மனதை! ஆர்ப்பரிக்கின்றதே …
பெற்றெடுக்கும் நாளில் தான் !
பட்டபாடு பெரும் துயரத்தின் வேதனை
முதல் அழுகுரலிடம் சரணடையுமே !
தன் கவலைகளை மறந்து குழந்தையை
புன்னகை சிந்தும் விதத்தில் ஆனந்த படும் மனமே !
தவமாய் தவமிருந்து கிடைத்த வரம் !
காணகிடைக்கும் போது பேரின்பம் !
சொல்ல துடிக்கும் வார்த்தைகள் !
சந்தோசத்தின் உச்சியில் உற்சாகமாக
சிறகடிக்கின்றது !
வளர்ச்சியின் போது கண்ட கனவுகள் !
வளமான எதிர்காலம் நோக்கி பயணம்
செய்யும் ! – annaiyar thina kavithai thoguppu
பார்த்து பார்த்து பாசம் காட்டும் !
அன்பில் கலந்த அன்னையே !
என்றென்றும் உன் அன்புடன் தமிழகமே….!
ஆனந்தமான தருணத்தில் அன்பின் பயணியாய்!
அன்னையர் தினத்தில் பாசத்தை
பகிர்ந்திடுவோம்!

– வேல்


அவள் மனவலிமையை எடை போடும் படிகற்கள் அவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி சொல்லியாக வேண்டிய கட்டாயம் …

அனல் பறக்க வறண்டு வரும் காற்று
வியர்வை வட்டத்தில் ஒளியாய் விழும் சூரியன்
நெருநெருவென முகத்தில் ஒட்டிய புழுதி
கால்நடையாய் பாதை உணர்வு இல்லாமல்
சிந்தைக்குள் ஒலிப்பது என்னவாக இருக்கும்.

பொறுப்பற்று சுற்றித்திரியும் இரண்டு மகன்களை
பற்றிய கவலைகள் ஒருபுறமிருக்க
உழைப்பிற்கேற்ற கூலியில்லாது
கையாளும் தன்மையற்று கஷ்டப்படும் கணவன்
பற்றிய கவலைகள் மறுபுறமழுத்த
கல்யாண வயதில் இருக்கும் பெண்
பற்றிய பெருஞ்சுமைகளுக்கு மத்தியில்
தலையில் இருக்கும் பழக்கூடையின் பாரம்
என்ன பெரிதான சுமைகளை தந்து விடும்

– மணிகண்டன். சி

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    அன்னையின் உன்னதத்தை அருமையாய் கூறின அனைத்துக் கவிதைகளும் …கவிகளுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ..💐💐💐💐