கவிதைப் போட்டி 2021_10
சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 10
தலைப்புகள்
- தேசப்பிதா காந்தி
- லால்பகதூர் சாஸ்திரி
- சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா
- நடிகர் திலகம் சிவாஜி
- பெண் சுதந்திரம்
மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 10. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு:
1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
பெண் சுதந்திரம். மகளிர் படித்தால் அந்த குடும்பம் நன்றாக செல்ல வழி நடத்துவாள் நாட்டை ஆள்வதும் வீட்டை ஆள்வதும மகளிரே ஆனாலும் அவர்களின் எல்லார் நிலையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
*மகாத்மாவின் மௌன புரட்சி*
போர்பந்தரில் பிறந்ததால்
போராட்டம் பல கண்டாயோ!
தேச விடுதலை தந்து
தேசத்தந்தை ஆனாயோ!!
வழக்கறிஞர் என்றாலும்
நேர்மையே வாழ்க்கை
அரிச்சந்திரன் கதையால்
வாய்மையில் நம்பிக்கை
தாயிடம் சத்தியம் செய்து
வெளிநாட்டு பயணம்
தென்னாப்பிரிக்கா இனவெறி கண்டு
சோகத்தில் வாடல்
ஆங்கில ஆட்சி மீது வெறுப்பு
தாங்கினார் தலைமை பொறுப்பு
உப்புக்கு வரி எதிர்ப்பு
தண்டி யாத்திரை நடப்பு
தலைவர்கள் இணைந்து எழுச்சி
கத்தியின்றி ரத்தமின்றி புரட்சி
சத்தியாக்கிரகம் எனும் ஆயுதம்
பரங்கியர் பணிந்தது சரித்திரம்
மதுரை உழவனை கண்டு
மேலாடை துறந்த மகாத்மா
பிறந்தநாள் வாழ்த்து சொல்லி
கை குவித்து வணங்குகிறேன்
எஸ் வீ ராகவன் சென்னை
நடிகர் திலகம் சிவாஜி சிறப்பு
இருவரும் கூண்டு கிளியாய் ஒற்றுமை
ரசிகர்கள் சண்டை கோழியாய் வேற்றுமை
ஒருவர் நவராத்திரி
ஒருவர் நவரத்தினம்
ஒருவர் நடிகர் திலகம்
ஒருவர் மக்கள் திலகம்
ஒருவர் பாசத்தில் உருகுவார்
ஒருவர் ரசிகர்களை கவர்ந்தார்
ஒருவர் அண்ணன் ஒரு கோவில்
ஒருவர் கண்ணன் என் காதலன்
சிவாஜி நடிப்பு சிறப்பு
எம்ஜிஆர் தத்துவம் மலைப்பு
இருவரும் காலத்தை கடந்து
அனைவர் மனங்களில் வாழ்வார்கள்
எஸ் வீ ராகவன்
பெண் சுதந்திரம்
—————————-
இரவு பன்னிரெண்டு மணிக்கு
பொன்நகையுடன் பெண் தனியே செல்ல
தேவையில்லை….
இரவு பணிக்கு சென்ற பெண்
பாதுகாப்பாய் வீடு திரும்ப
பிறக்க வேண்டும் ஓர் சுதந்திரம்……
பறந்து செல்ல சிறகுகள் தேவையில்லை….
பேருந்தில் பயணிக்கையில்
சீண்டும் சில கொடூர கரங்களில் இருந்து
சிறகடிக்க வேண்டும் ஓர் சுதந்திரம்……
விண்ணில் சீறிப் பாயும்
ஏவுகனையில் செல்லத் தேவையில்லை….
வேலை செய்யும் இடத்தில்
பெண் திறமைக்காக மட்டும்
கிடைக்க வேண்டும் ஓர் சுதந்திரம்……
வண்ண உடை அணிந்தே
வீதியில் செல்கையில்….
விதவை பெண்ணை
புறம் பேசும் சமூகத்தின்
கொட்டும் வார்த்தைகளில் இருந்து
விட்டு விலக வேண்டும் ஓர் சுதந்திரம்….
ஐந்து வயது சிறுமி என்றாலும்
அவள் அங்கம் நோக்கும்
அரக்கர்களின் பார்வையை
எரிக்க வேண்டும் ஓர் சுதந்திரம்….
சிறகு முளைத்த பெண் பறவைகள்
சிலர் இருந்தாலும்…
இன்னமும் ஒடித்த சிறகுகளுடன்
ஒதுக்கப்பட்டுள்ள பெண்களை
உயர்த்திவிட வேண்டும் ஓர் சுதந்திரம் …..
பெண் என்றாலே
பிறக்க கூட சுதந்திரம் இல்லை…..
நிரந்தர சுதந்திரம் எதுவோ உனக்கு????
பெண்ணே…
விடை கூறுவாய் நீயே அதற்கு!!!!
-லோகநாயகி
கவிதைப் போட்டி 2021 _ 10
#தேசப்பிதா_காந்தி!
‘அக்டோபர் மாதத்தில் அவதரித்தவராம்! இந்திய
விடுதலைப்போரை வெற்றிகரமாய் நடத்திக் காட்டியவராம்!
சத்தியா கிரகத்தையும் கொடுத்தவராம் நாட்டில்
சாத்வீக வழியில் சாதனை படைத்தவராம்!
தொடர்வண்டிப் பயணத்திலே தூக்கிஎறிந்தாரைத் துரத்தி
தேசத்தைவிட்டே விரட்டினாரே அந்தப் பரங்கியரை!
சுதேசி இயக்கத்தையும் தொடங்கிவைத்தார் தம்
சொந்தநாட்டின் துணிகளையே வாங்க வைத்தார்!
உப்புக்கும் வரிவிதித்த அக்கிரமத்தை உடன்நடந்து
தப்பென்று திருத்தி வைத்த தவப்புதல்வர்!
தடியெடுத்துப் போராட்டம் நடத்தியதில்லை முடிவெடுத்து
உண்ணாது உடல்வருத்தும் அறவழி தந்தார்!
எளிமை என்பது ஏழைக்கல்ல! அது
ஏற்றுக் கொள்ள வேண்டிய மாற்றமென்றார்!
மகத்தான மனிதராய் மலர்ந்ததாலே மதுரையில்
மகாத்மா எனவே உயர்ந்து நின்றார்!
அன்பையும் அகிம்சையும் இரண்டுகண்ணாய்த் தமது
பண்பெனும் மேனியில் படைத்து நின்றார்!
கடல்நீரை உப்பாக்கி உணவுசமைத்தவரே! உன்னைக்
கயவர்தாம் துப்பாக்கியில் சுட்டுத் துளைத்தனரே!
குழந்தையாம் அண்ணலும் மண்ணில் விழுந்தாரே!
இழந்திட்டோம் நம்மகானும் விண்ணில் எழுந்தாரே!’
தேசபிதா காந்தி
எளிமையின் பிறப்பிடமே காந்தி….!
அகிம்சையின் வாா்த்தையே காந்தி…..!
தேசத்தின் பாதுகாவலரே காந்தி…..!
ஏழை மக்களின் சொத்தே காந்தி….!
உண்மை சித்தாந்தமே காந்தி….!
நடைபாதையின் நாயகரே காந்தி…..!
போராட்டத்தின் சகாப்தமே காந்தி….!
சிந்தனைகளின் சிற்பியே காந்தி……!
சிக்கனத்தின் சிகரமே காந்தி…..!
சுதந்திர தந்தையே காந்தி…!
செய் அல்லது செத்து மடி புகழனின்
சொந்தகாரரே காந்தி…..!
சுந்திர பிதாமகனே காந்தி….!
சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா!!
சிவகாமி சிந்திக்கவில்லை…
வையம் போற்றும் வானகச் சொத்து,
என் வயிற்றில் தவழும் முத்துத் தானென!!
விருதுநகரின் விண்மீனே!!
மறக்கமுடியா மன்னவனே!!
வானேறினாலும் வையகத்தின் வாடாமாலையானவரே!!
பலரின் விதியை விரட்ட,
கல்வியை கண்ணுக்குள் திணித்தாயே…
தான் கல்வியில் விரியாவிடிலும் கூட!!!
அரசியல் ஆன்மிகத்தின் திங்கள் நீர்!!
ஓர் நிலவைப் போல் வேறோர் நிலவு இருந்திட முடியுமோ??
முடியா மக்களின் விடிவெள்ளி ஆனீரே!!
ஆதங்கத்தை ஆராயும் அறிஞன் ஆனீரே!!
மக்களை மனதார காத்தீர்….
மக்களால் மனதார கவரப்பட்டீர்….
காசு சேர்க்க செல்வந்தனாக!!!
தாயை தரிசிப்பீர்….
தரிசனமோ,,
சிவகாமி ஈன்ற காமராசனாகவே தான்….
காமராசர் களம் கண்ட அரசியல்வாதியாக அல்ல!!!
சாணக்கியனானாலும் சாதி பார்க்கா,
புனிதன் நீர்!!
நீதி திணரவில்லை உமதாட்சியில்!!!
தழைத்திருந்த தமிழகத்தை தூக்கினீர்!!
தாய்க்காக வைத்த தண்ணீர்க் குழாயை
தகர்த்திட்டீர்…..
தாயும், தமிழக மக்களும் எனது ஒருங்கிணைந்த சொத்தே என!!!
தளைத்தோங்கிய ஆட்சியில்,
உம் புகழ் மலைத்தோங்கியது!!!
உம் மனம் மட்டும் மாறவில்லை….
சிவகாமி மைந்தன் காமராசனாகவே
களம் கண்டது!!
அரசியல் ஆணவம் அறவே ஒளிரவில்லை!!!!
சிவகாமி செதுக்கிய முத்தும் ஒளிர்ந்தது இப்பாரினில்….
சிவகாமி அம்மையாரின் பெயரும் பெருமையானது…..
இவ்வாழியினில்!!!
– தே.லூவியா வின்சி.
சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா!!
சிவகாமி சிந்திக்கவில்லை…
வையம் போற்றும் வானகச் சொத்து,
என் வயிற்றில் தவழும் முத்துத் தானென!!
விருதுநகரின் விண்மீனே!!
மறக்கமுடியா மன்னவனே!!
வானேறினாலும் வையகத்தின் வாடாமாலையானவரே!!
பலரின் விதியை விரட்ட,
கல்வியை கண்ணுக்குள் திணித்தாயே…
தான் கல்வியில் விரியாவிடிலும் கூட!!!
அரசியல் ஆன்மிகத்தின் திங்கள் நீர்!!
நிலவைப் போல் வேறோர் நிலவு இருந்திட முடியுமோ??
முடியா மக்களின் விடிவெள்ளி ஆனிரே!!
ஆதங்கத்தை ஆராயும் அறிஞன் ஆனிரே!!
மக்களை மனதார காத்தீர்….
மக்களால் மனதார கவரப்பட்டீர்….
காசு சேர்க்க செல்வந்தனாக!!!
தாயை தரிசிப்பீர்….
தரிசனமோ,,
சிவகாமி ஈன்ற காமராசனாகவே!!
காமராசர் களம் கண்ட அரசியல்வாதியாக அல்ல!!!
சாணக்கியனானாலும் சாதி பார்க்கா,
புனிதன் நீர்!!
நீதி திணரவில்லை உமதாட்சியில்!!!
தழைத்திருந்த தமிழகத்தை தூக்கினீர்….
தாய்க்காக வைத்த தண்ணீர்க் குழாயை
தகர்த்திட்டீர்…..
தாயும், தமிழக மக்களும் எனது ஒருங்கிணைந்த சொத்தே என!!!
தழைத்தோங்கிய ஆட்சியில்,
உம் புகழ் மலைத்தோங்கியது!!!
மனம் மட்டும் மாறவில்லை….
காமராசனாகவே களம் கண்டது!!
அரசியல் ஆணவம் அறவே ஒளிரவில்லை!!!!
சிவகாமி செதுக்கிய முத்தும் ஒளிர்ந்தது இப்பாரினில்….
சிவகாமி அம்மையாரின் பெயரும் பெருமையானது…..
இவ்வாழியினில்!!!
– தே.லூவியா வின்சி.
தேசபிதா காந்தி எளிமையின்
பிறப்பிடமே காந்தி….!
அகிம்சையின் வாா்த்தையே காந்தி…..! தேசத்தின் பாதுகாவலரே காந்தி…..!
ஏழை மக்களின் சொத்தே காந்தி….! உண்மை சித்தாந்தமே காந்தி….! நடைபாதையின் நாயகரே காந்தி…..! போராட்டத்தின் சகாப்தமே காந்தி….! சிந்தனைகளின் சிற்பியே காந்தி……! சிக்கனத்தின் சிகரமே காந்தி…..!
சுதந்திர தந்தையே காந்தி…!
செய் அல்லது செத்து மடி புகழனின் சொந்தகாரரே காந்தி…..!
சுந்திர பிதாமகனே காந்தி….!
தேசப்பிதா காந்தி
காந்தி மகானே நீ பாடுப்பட்டு
வாங்கி கொடுத்த சுதந்திரம்
இன்று நாட்டில் ஒரு சிலரின்
கையில் மட்டுமே உள்ளது..!!
காந்தி மகானே
உன்னுடைய பிறந்தநாளிலும்
உன்னுடைய நினைவு நாளிலும்
உன்னை வணங்கி நாங்கள்
வேண்டி கொள்வது
உன் முகத்தில் தவழும் புன்னகை
எங்கள் எல்லோர் முகத்திலும்
தவழ அருள் புரிய வேண்டும்
உன் தவழும் புன்னகையுடன்
அச்சடித்த பணம் இந்த நாட்டில்
ஒரு சிலரின் கைகளிலும்
பைகளிலும் மட்டுமே இருக்கு
இந்த நிலை மாறி
எங்கள் கைகளிலும் பணம்
இருக்க அருள் புரிய வேண்டும்..!!
காந்தி மகானே நீ கனவு கண்ட
கிராம சுயராஜ்யம் என்பது
இன்னும் இந்திய திருநாட்டில்
கனவாகவேதான் இருக்கு…!!
நீ மீண்டும் பிறந்து வந்தாலும்
நான் மகான் அல்ல என்று சொல்லி
உன்னுடைய அகிம்சா தர்மத்தை
விட்டுவிடும் நிலை வந்துவிடும்…!!
–கோவை சுபா
தேசப்பிதா காந்தி கவிதை:
அகதியாய் கொந்தளித்தோம்
“அ” அகிம்சை என
கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது
காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை
அதனால் இயற்றப்பட்ட சாதனை
“சத்திய சோதனை ”
விடுதலை கேட்டபோது
விடுகதையாய் அமைந்தாய்
வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால்
மறு கன்னத்தை காண்பி
என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான்
வெள்ளையன்
தேசப்பிதாவாய்
உன் மகன்களுக்கும் மகள்களுக்கும்
சுதந்திரம் என்னும் சொத்தை
தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை
“மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு
என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே
உன் புகழை பாடும் தேசிய கீதம்
தேசப்பிதா காந்தி கவிதை:
அகதியாய் கொந்தளித்தோம் “அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ” விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன்
தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே
உன் புகழை பாடும் “தேசிய கீதம்”
– Written By Srikanth Lawrence
தேசப்பிதா காந்தி கவிதை:
அகதியாய் கொந்தளித்தோம்
“அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய் ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ” விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன்
தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு
என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே உன் புகழை பாடும் “தேசிய கீதம்”
தேசப்பிதா காந்தி கவிதை:
அகதியாய் கொந்தளித்தோம்
“அ” அகிம்சை என கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது சத்தியம் உயிர் பெற்ற போது காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை
அதனால் இயற்றப்பட்ட சாதனை “சத்திய சோதனை ”
விடுதலை கேட்டபோது விடுகதையாய் அமைந்தாய் வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பி
என புதிர் போட்டாய் விடை தெரியாமல் தடுமாறினான் வெள்ளையன் தேசப்பிதாவாய் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் சுதந்திரம் என்னும் சொத்தை தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை “மகாத்மா” வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு என் சுதந்திர மூச்சை சுவாசிப்பதே உன் புகழை பாடும் “தேசிய கீதம்”
கவிதைப் போட்டி 2021 _ 10
#சிவகாமி_மைந்தன் #காமராசர்_ஐயா!
‘சிவகாமி ஈன்றெடுத்த தவப்புதல்வரே! தமிழகம்
சிறந்திடவே பிறந்திட்ட பெருந்தலைவரே!
படிக்காத மேதையாம் நீதானே!
பதி னேழாயிரம் பள்ளிகளைத் திறந்து வைத்தாய்!
மாணவர்க்கு மதிய உணவு இலவசமாய் வழங்கிட
மாநிலத்தில் இருந்திட்டாய்முதல் முதல்வனுமாய்!
ஏழுசதம் இருந்த கற்போர் எண்ணிக்கையும் முப்பத்து
ஏழுசதம் உயர்ந்ததுவும் உன்மாட்சிதான்!
கல்வித்துறை மட்டுமே கருதாது கனிவுடனே
தொழில்துறை நீர்ப்பாசனமின் திட்டங்களை
மாநிலத்தில் தொடங்கிவைத்து மனம்மகிழ
மகத்தான சாதனைகள் புரிந்தவரே!
ஒன்பது ஆண்டுகள் நீ முதல்வரானாய்!
ஒன்பது ஆண்டுகள்சிறைப் பறவையானாய்!
இரண்டு பிரதமர் உருவாக்கிய சாணக்கியரே!
இருந்ததில்லை அப்பதவியில் காணக்கிடைக்கலையே!
இருந்த முதல்வர் பணிதுறந்தும் விலகினீரே! கட்சி
சிறந்து விளங்க சீர்திருத்தத் தொண்டு செய்தீரே!
இறுதிவரை வாடகை வீட்டில் இருந்தாயே!
இருந்ததுண்டா எம்முதல்வரும் இந்தியாவில்!
உன்னைப்போல் அரசியல்வாதி உலகிலில்லை! நிச்சயமாய்
உன்னைத்தவிர உனக்குநிகர் ஒருவரில்லை!
தர்மத்தின் தலைவரே! தென்னாட்டு காந்தியே!
கர்மத்தின் வீரரே! ஏழைக் கமராசரே!
ஊரையே வாரிசாக எண்ணித்தான் உறங்கியவரே! நாங்கள்
ஒருவரும் தந்தையாய் உன்னையை ஏற்கலையே!’
கவிதைப் போட்டி 2021 _ 10
#நடிகர்_திலகம்_சிவாஜி!
‘விழுப்புரம் சின்னையா ராஜாமணி வாரிசாய்
விழுமிய புகழுடன் பிறந்திட்டார் கணேசன்!
முந்நூறு படங்களுக்கு மேலாக நடித்து
இந்தியாவில் தடம்பதித்த ஒப்பற்ற நடிகன்!
நாடகத்தில் நடிப்பதற்கு ஒன்பது வயதிலே
வீட்டைவிட்டு ஓடியே வந்தவரைத் தாயார்
தகுதியான கம்பெனியில் தானே சேர்த்துவிட்டார்
ஆகுதியாய்த் தன்னையே கணேசனங்கு ஒப்படைத்தார்!
பேரரசர் சிவாஜியாக பேசியநல் வசனம்பார்த்து
பெரியாரே வியந்துவைத்த பெயர்தானே சிவாஜிகணேசன்!
பராசக்தி படம்மூலம் திரையினிலே தோன்றினாரே!
பாராதிருந்த சமூகத்தையும் படம்பார்க்க வைத்தாரே!
உணர்ச்சிதமிழ் உச்சரிப்பும் நலமான குரல்வளமும்
கிளர்ச்சியூட்டும் நடிப்புத்திறன் கொண்டவரை நம்சமூகம்
நடிகர்களில் திலகமாக நயந்தனரே பற்றுடனே
நெற்றியில்தான் சூடினரே நெஞ்சினிக்கப் பாடினரே!
ராஜராஜ சோழனையும் கப்பலோட்டிய தமிழனையும்
வீரபாண்டி கட்டபொம்மன் வீரமனோஓ கரனையும்
வசனம்பேசி வெள்ளித் திரையில் வளமாய்
வாழ்ந்து காட்டி னாரே! கடவுள்
கந்தன் கருணையிலும் தருமிதிரு விளையாடலிலும்
தந்தாரே பிழிந்து நமக்குப் பக்திப்பழரசத்தை!
பாசமலர் படைத்துவாழ்ந்த வசந்த மாளிகையில்
வாசமலராய்த் தொட்டார்நம் நேசத்தின் உள்ளங்களை!
பத்மஸ்ரீ பத்மபூஷன் செவாலியே சிவாஜியே!
பால்கே விருதுகள் பத்துமோ வுன்திறமைக்கே!
முகமும் மட்டுமல்ல அய்யனே உந்தன்நவ
நகமும் அல்லவோ நயமாய் நடிக்குமே!’
சிவகாமியின் மகன் காமராசர் ஐயா
கருப்பு காந்தியே….!
எளிமையின் பிறப்பிடமே…..!
ஏழைகளின் தந்தையே….!
அன்பின் மறு உருவமே……!
சகாப்தத்தின் உருவாக்கமே…..!
கிங் மேக்கரே…..!
காமராஜர் ஐயா….!
பள்ளிகளை உருவாக்கி பிஞ்சு
குழந்தைகளின் எதிர்காலத்தை
பாதுகாத்த பாதுகாவலரே….!
தமிழ்நாட்டின் தங்க மகனே……!
சரித்திரத்தின் மறு பிறவியே…..!
மீண்டும் வா எங்கள் தலைவா…..!
கவிதைப் போட்டி 2021 _ 10
#பெண்_சுதந்திரம்!
‘எது பெண் சுதந்திரம்?
குடும்பவரையறை, சமூகவரையறை கட்டுக்குள்ளடங்கித் தாங்கள்
கொடுத்துத் தொலைத்த சுயத்திற்கானதே பெண்சுதந்திரம்!
படிக்கும் படிப்பிலிருந்து கணவனைத் திருமணம்
முடிக்கும்வரைத் தன்னாசையைப் பெண்கள் தீயிட்டெரிக்கும்
சூட்டிற்கு எதிரானதே பெண் சுதந்திரம்!
கணவர் மாமனார் நாத்தனார் மகனென்று
ஆண்களால் வீட்டில் அடங்கிக் கிடக்கும்
அதிகாரத்திற்கு எதிரானது பெண் சுதந்திரம்!
பெண்களின்மீது ஆண்களின் அக்கறை யென்றேதினமும்
கனவுகள்சிதையும் கருத்திற்கு எதிரானது பெண்சுதந்திரம்!
பிரசவ வலியையும் தாங்கிடும் பெண்ணிடம்
பலவீன மானவளென்று புனைந்துரைத்த பொய்மைக்கு
எதிரானது தானே பெண் சுதந்திரம்!
ஒரேபடிப்பு! ஒரேவேலை! ஊதியம் மட்டும்
ஆணைவிடக் குறைவு! பாலின பேதத்துக்கு
எதிரானதும்தான் இந்த பெண் சுதந்திரம்!
அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுதலைதானே
ஆண்களிடமிருந்து பெண்குலம் வேண்டிடும் பெண்சுதந்திரம்!’
பாரதத் தாயின் அடிமை விலங்கை
அவிழ்த்தெரியும் மந்திர சாவியொன்று
உயிரை உருக்கி ….
கருவிலே வார்க்கப்பட்டதோ!!!!
அதுவே “அண்ணல் காந்தி ” என்றே ஆனதோ!!!
குஜராத்தின் போர்பந்தரிலே….
சுதந்திரப் போர்க் கொடியொன்று
ஆலமர விதையென ….
குழந்தையாய் அது பிறந்ததோ!!!
கரம்சந்தாய் அது வளர்ந்ததோ!!!!
பதின்மூன்று அகவையிலே….
பக்குவமில்லா பருவத்திலே….
அலங்கார ஆடையினிலே…
விளையாட்டாய் அரங்கேரியதோ…
அண்ணல் அவரின் திருமணமோ…
புத்திலி பாயின் புதல்வனோ….
அன்று முதல்
கஸ்தூரி பாயின் கணவனோ….
அன்னை அவள் ஆசியுடன்….
அயல்நாடும் அவர் சென்றே…
பொறுப்புடன் படித்தாரே…
பாரீஸ்டர் பட்டமும் பெற்றாரே….
தென்னாப்பிரிக்கா நாட்டினிலே…
தொடர் வண்டி சம்பவமொன்றால்….
அந்நாட்டு அடிமைகளுக்கு
விடுதலை பெற்றுத் தந்ததினால்…
பாரதம் எங்கும் பரவியதே…
காந்தியவரின் புகழ் தானே….
தாயகம் திரும்பிய காந்திக்கு
உதித்தது ஓர் எண்ணமே…
நம் நாட்டு விடுதலைக்கும் உழைத்திட
அவரும் துணிந்தாரே….
உணவளிக்கும் உழவன் அவன்
கந்தல் ஆடையிலே நடுங்கக் கண்டு…
பகட்டான ஆடை துறந்தே..
கதர் ஆடை அணிந்தவரே….
சுடர் போல வாழ்ந்தவரே…
ஆங்கிலேயரின் அட்டூழியம் அடக்க…
அந்நியப் பொருட்களை
தீயிட்டுப் பொசுக்கியவரே….
பாரதம் எங்கும் போர் முரசு கொட்டியவரே….
ஒற்றுமையுடன் ஒத்துழையாமையாம்….
தளர்ந்த வயதிலே தண்டியாத்திரையாம்….
சாத்தியம் தானா என்றெண்ணிய
சத்தியப் போர் அதனை
சாந்தமாய் வழி நடத்தினாய்….
சுதந்திரமும் பெற்றுத் தந்தாய்….
நூல் பல கற்றவரே….
இராட்டையில் நூல் நூற்றவரே…
சிறைவாசம் நீ பெற்றே….
எமக்கு
சுதந்திர சுவாசம் அளித்தவரே….
உடல் அது மறைந்தாலும்…
உயிரது பிரிந்தாலும்….
தேசப்பிதாவாய்….அண்ணல் காந்தியாய்….
மகாத்மாவாய்….
குழந்தைகளின் அன்புத் தாத்தாவாய்….
என்றும் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்…
இந்தியர்களின் இதயங்களில்….
-loganayagi mohan kumar
“தேசப்பிதா காந்தி”
போர்பந்தரில் பிறந்தவர்/
பார்போற்ற வாழ்ந்தவர்/
சட்டங்கள் படித்தவர்/
சரித்திரம் படைத்தவர்.
கதராடையை அணிந்தவர்/
கைராட்டையை சுற்றியவர்/
கத்தியின்றி இரத்தமின்றி/
காத்துதந்தார் மண்ணையவர்.
ஆடம்பரத்தை துறந்தவர்/
அன்புக்கு அடிமையானவர்/
அறம் போராட்டவாதியவர்/
அகிம்சையே ஆயுதமென்றவர்.
அழியாது வாய்மையேவெல்லும்/
அகிம்சையே அகிலத்தையாலும்/
அதனை உணர்ந்தவர்தான்/
அண்ணல் காந்திமகான்.
ஏழைகளுக்காகவே உழைத்தவர்/
எளிமையாகவே வாழ்ந்தவர்/
ஏற்றத்தாழ்வு காணாதவர்/
என்றும்உண்மையே பேசியவர்.
தாய்ச்சொல்லை தட்டாதவர்/
தேசத்தைகாக்கவே பிறந்தவர்/
தன்னலம்கருதா பெருந்தலைவர்/
தேசப்பிதா நம்காந்தியவர்.
-வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி.