கவிதை போட்டி 12 (2021_12) | மற்றும் போட்டி 11 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 12

kavithai potti

கவிதை போட்டி 11 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
லோகநாயகி சுரேஷ்
சௌந்தர்ய தமிழ்

அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.


கவிதை போட்டி 12 அறிவிப்பு

  • பெண்ணுரிமை
  • வன்கொடுமை
  • விருப்பமான தலைப்பு
  • கார்த்திகை தீபம்
  • மார்கழியை வரவேற்போம்
  • பாரதி பிறந்த நாள்
  • சிட்டுக்குருவி

தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 12. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

25 Responses

  1. லோகநாயகி.சு says:

    கவிதை போட்டி: 12

    வன்கொடுமை

    பிணம் தின்னும் கழுகுகளும், வெறிகொண்ட மிருகங்களும்
    மனிதன் என்ற பெயரில் இங்கு நடமாடுது…!!
    அது பூத்துக்குலுங்க வேண்டிய பிஞ்சு மொட்டுக்களை,
    நசுக்கி கசக்கி எரிகின்றது!!!
    மூன்று வயது குழந்தையும் ,ஆறு வயது சிறுமியும் ..
    தனக்கு நடப்பது என்னவென்று தெரியாமல் தவிக்கின்றது …!!!!
    வேட்டையாடும் மிருகங்களின்,
    கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு,
    தப்பிக்க வழியின்றி திகைக்கின்றது….!!!

    காக்கவேண்டிய கடவுளும் கல்லாகி போனதால் ..
    மீட்க வேண்டியவர்களும் முடமாகி போனதால் ..
    சாதிக்கப் பிறந்த சாதனை செல்வங்கள்
    மண்ணாகி போகின்றன ..!!!!!

    எப்போ தீரும் இந்த கொடுமை…..

    லோகநாயகி சுரேஷ்…

  2. லோகநாயகி.சு says:

    விரும்பிய தலைப்பு

    கவிதை போட்டி: 12

    விவசாயம் காப்போம்….

    கழனியில் முளைத்த
    களைய வேண்டிய
    களைகளாய் கட்டிடங்கள்….
    களைய முடியாமல்
    இன்றைய விவசாயி!!!!

    சேறை சோறாக மாற்றும்
    வித்தை தெரிந்து
    விவசாயத்தில்
    பாதம் பதிக்க முடியாமல்
    இன்றைய விவசாயி!

    தன்னிலை மறந்து
    நண்பகல் வெயிலில்
    கழனியின் நடுவில்
    கலப்பைப் பிடிக்கும்
    துணிவு இருந்தும்
    துணிச்சல் இல்லாமல்
    இன்றைய விவசாயி!

    கழனியின் மகள்
    நாற்று வளர்ந்து
    பருவப் பெண்ணாய்
    தலை சாய்க்கும்
    நெற்கதிரை காண முடியாமல்
    இன்றைய விவசாயி!

    காலனின் குறிப்பறிந்து
    விளைச்சல் கண்டவன்
    மாறி வரும் கலியுகத்தால்
    விவசாய வளர்ச்சி காணாமல்
    இன்றைய விவசாயி!

    மலடியின் கனவில்
    ஒரு சுகப் பிரசவமாய்
    விவசாயின் கனவில்
    அமோக விளைச்சலாம்!!!!

    கானல் நீரில் தாகம்
    தணித்துக் கொண்டு
    விளை நிலத்தின் அருமை
    விலை போகும் நிலமாய்
    விளைச்சல் தெரியாமல்
    விவசாயத்தை வீழச் செய்த
    வியாபாரப் பைத்தியங்கள்
    மானுடப் பணப் பைத்தியங்கள்…..

    பைத்தியங்களை
    திருத்த முடியாமல்
    இன்றைய விவசாயி!!!

    லோகநாயகிசுரேஷ்….

  3. தீபங்கள் ஒளிரட்டும்
    இருள் விலகட்டும்
    நல்லவை மிளிரட்டும்
    தீயவை ஒழியட்டும்
    அகஇருள் மறையட்டும்
    புத்தொளி பிறக்கட்டும்
    இறை அருள் புரியட்டும்
    சாதனைகள் ஆரம்பம்
    நல்லதை நினையுங்கள்
    நல்லதை செய்யுங்கள்
    புத்தகங்கள் படியுங்கள்
    மற்றவருக்கு உதவுங்கள்
    பெரியோர்களை மதியுங்கள்
    உறவுகளை அரவணையுங்கள்
    புதுக்கணக்கை துவங்குங்கள்
    வெற்றிகள் குவியட்டும்

    எஸ் வீ ராகவன் சென்னை

  4. *வன்கொடுமை*
    பள்ளி கல்லூரி ராகிங் பிரச்சினை
    கேலி கிண்டல் அவமானம் படுத்தல்
    தேர்வில் வெற்றி பெறவில்லை
    கவலை சோகம் வேண்டாம்
    அடுத்தமுறை முயற்சி செய்

    காதல் தோல்வி எதிரொலி
    பாலியல் வன்முறை
    தைரியமாக போராடு
    பெற்றோர் மற்றும் மற்றோர்
    உதவியோடு தீர்வு காணுங்கள்

    திருமண வாழ்க்கை பிரச்சினை
    அவமானங்கள் மாற்றம் செய்
    வரும் தடைகளை உடை
    எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு

    வாழ்க்கை ஒருமுறை
    உன கையில் கிடைத்த
    பொன்னான வாய்ப்பு
    இறைவன் கொடுத்த வரம்
    தைரியமாக பேசுங்கள்
    உயிரை அழித்து கொள்வது மடத்தனம்

    எஸ் வீ ராகவன் சென்னை

  5. *பாரதி பிறந்த நாள் விழா*
    *தலைப்பு ரௌத்திரம் பழகு*

    பாரதி கவிதைகளில் தேன் சொட்டும்
    கதை உரைநடை மனதை அள்ளும்

    கண்ணம்மா காதலில் உருகியவர்
    விடுதலை வேள்வித்தீ மூட்டியவர்

    குழந்தைகள் பாடல்கள் அறிவூட்டும்
    தெய்வீக பாடல்கள் பக்தியூட்டும்

    தத்துவ பாடல்கள் தெளிவூட்டும்
    சுதந்திர பாடல்கள் எழுச்சியூட்டும்

    பெண் விடுதலை புரட்சியூட்டும்
    பறவை விலங்குகள் நேசமாக்கும்

    அவர் வறுமையில் வாடினாலும்
    கவிதைகளில் செழுமை சேர்த்தார்

    வாழ்வில் எளிமையாக இருந்தாலும்
    வார்த்தைகளில் பெருமை செய்தார்

    ரௌத்திரம் கொள்ள சொன்னாலும்
    அன்புடன் பழக சொன்னார்

    மனதில் உறுதி வேண்டும்
    எடுத்த காரியத்தில் வெற்றி வேண்டும்

    நினைவு நல்லது வேண்டும்
    பெரிய கடவுள் கருணை வேண்டும்

    பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போட்டு
    பல கவிஞர்களுக்கு வழிகாட்டி

    இந்த மண்ணும் விண்ணும் சிறக்க
    பரணி பாடிய மகாகவி பாரதி வாழ்க

    எஸ் வீ ராகவன் சென்னை

  6. S. V. Rangarajan says:

    பாரதி பிறந்த நாள். கார்த்திகை மூலத்தில் அவதரித்த சுப்பிரமணிய பாரதி சுதந்திர தாகம் தீர்க்கும் முறையில் எழுதிய பாடல்கள் எண்ணிலடங்கா கட்டுரை அதற்கு மேல் பெண் அடிமை ஒழிய பாடுபட்டதை மறக்க முடியாத ஒன்று சுதந்திர த்திற்காக பாடுபட்ட பாரதி சுதந்திரம் வந்ததை இம்மண்ணில் இருந்து பார்க்காமல் விண்ணிலிருந்து பார்த்தான் என்பதே சரி

  7. அ.கலையரசன் says:

    *பார தீ வழி*

    பாரதி கணா
    கண்ட
    புதுமைப் பெண்ணே உம்மை அழகு பதுமையாக்கி
    அடிமையாக்கியது போதும்…
    அத்துமீறும் பித்தர்களை
    சத்தியத்தின் வழியில் பிய்த்துப் போட
    ரௌத்திரம் பழகு!

    தனி ஒருவனுக்கு மட்டுமில்லை தரணியெங்கும் ஒருவாய் கூட உணவில்லாமல்
    அல்லல்படும் ஏழை வள்ளல்களின்
    பூரா வளத்தையும் புகுந்து திருடும் ஏகாதிபத்தியர்களை
    கொத்தியெரிய ரௌத்திரம் பழகு!

    சாதி இரண்டொழிய வேறில்லை தான் ஆனால் இங்கோ சந்து பொந்துக்கொரு சாதி
    பள்ளம் மேட்டிற்கொரு சாதி
    பள்ளியிலும் சாதி கொல்லி வைப்பதிலும் சாதி
    என்று சமாதியாகுமோ எச் சாதி?…
    சாதிகள் இல்லையடி பாப்பாதான் ஆனால்
    பள்ளி சேர்க்கையிலே சாதிச் சான்று இல்லாமல்
    கல்வி பயில வாய்ப்பு
    வரம் வாங்கி தர
    ரௌத்திரம் பழகடி பாப்பா!

    ஆங்கோர் ஏழைக்கு
    எழுத்தறிவித்தாலும்
    புழுத்த புழுக்களின்
    கழுத்தை நெறிக்கும்
    நுழைவுத் தடையால்
    குரலற்றவர்களின்
    விரல் விண்ணைத் தொட
    ரெளத்திரம் பழகு!

  8. Nithyanaresh says:

    விரும்பிய தலைப்பு

    தாயின் கனவு

    ஒழிந்து கொள்ள நான்
    கண்டுபிடிக்க நீ

    சோகமாய் நான்
    ஆறுதலாய் நீ

    துடிப்பது நான்
    சுழிப்பது நீ

    தூக்கத்தில் நான்
    மடியில் நீ

    உணவுடன் நான்
    உண்பது நீ

    குளிர்வது நான்
    குளிப்பது நீ

    சிங்காரிப்பது நான்
    சிங்கமாக நீ

    அயர்வது நான்
    ஓடுவது நீ

    நடப்பது நான்
    இடுப்பில் நீ

    கற்பது நான்
    கற்பிக்க நீ

    கண்ணீருடன் நான்
    வலியில் நீ

    கர்வத்துடன் நான்
    கவர்னருடன் நீ

    கனவில் நான்
    இன்னும் கருவறையில் நீ…

    எப்போது வருவாயோ
    என் ஏக்கம் தீர்க்க…

  9. Nithyanaresh says:

    தலைப்பு: மார்கழியை வரவேற்போம்
    குளிர்ந்த நீரில் நீராடி
    வாசலில் சாணமிட்டு
    அரிசி மாவு கோலமிட்டு
    நித்தமொரு வண்ணமிட்டு
    பிள்ளையாரை நடுவில் வைத்து
    மகிமை மிக்க மார்கழியே
    உன்னை வரவேற்கிறேன்
    திருப்பாவை பாடிகிட்டு
    மணக்கும் மல்லி சூடிகிட்டு
    பனிப்போர்வை போத்திகிட்டு
    தேவர்களையும் கூட்டிக்கிட்டு
    மனமகிழ்ந்து வருவாயாக…
    சின்னஞ்சிறு உயிர்களுக்கு
    அன்னதானம் செய்து மகிழ்வோம்….
    வெண்பனி சூடிய விடியலை
    கண்டு மனம் குளிர்வோம்….
    சுத்தமான காற்றை சுவாசித்து
    சுபமாய் வேலை தொடங்கிடுவோம்…
    சொர்க வாசல் திறந்து
    புண்ணியம் சேர்ப்போம்…
    பீடைகள் ஒழித்து
    தேவர்களின் அருள் பெற்றிடுவோம்…
    மங்கள மார்கழியே வருக வருக….

  10. சிட்டுக்குருவி

    பிடித்துப்போன மழையில்
    நனைந்த போது
    சிட்டுக்குருவிக் கூட்டமொன்று..
    அங்குமிங்கும் பரபரப்போடு பறந்து கொண்டிருந்தன..
    குளிருக்கு
    நடுங்கவில்லை அவை…
    உற்று நோக்கினேன்…
    புலம்பெயர்ந்து கொண்டிருந்தன…
    மஞ்சள் மரத்திலிருந்து
    மஞ்சள் நிறம் பூசப்பட்ட
    என் வீட்டு முகப்புச்சுவரின் துவாரத்திற்கு…
    இதே பரபரப்பில்
    நானும் கூட..
    சில ஆண்டுகளுக்கு முன்…
    ஓர் வீட்டிலிருந்து
    இந்த வீட்டிற்கு
    புலம்பெயர்ந்து கொண்டிருந்த
    நினைவுகளை
    கண்முன்னே
    கொண்டு நிறுத்தின…
    சிட்டுக்குருவிகளின்
    மழையொலிக்கீற்றுகளில்
    வேற்றுமையற்ற
    அதே மழை இன்று!
    சின்னக் குருவிகளின் மழலை
    மழையும் கூட!

    ம.சக்திவேலாயுதம்
    திருநெல்வேலி

  11. Nithyanaresh says:

    போட்டி :12
    விருப்பமான தலைப்பு : விவசாய விக்ராமாதித்யன்

    இயந்திரம் கொண்டு ஏர் உழுது
    இறைவனை வணங்கி விதையிட்டு
    உணவு மறந்து உரமிட்டு
    உள்ளம் நீர் பாச்சி
    கடன் வாங்கி களையெடுத்து
    கண்ணிமை போல்
    கழனியை காத்து
    குத்தகைக்கு அறுவடை செய்து
    குதூகலமாய் வியாபாரம் செய்ய
    போனவனை வழிமறித்து வியாபாரிகள் விலை கேக்க…
    “இந்தவிலை தான் கட்டும்”என்ற
    வார்த்தையில் கட்டுப்பட்டு
    முதலீடு மிஞ்சினா போதும்
    என்று ஆறுதல் கொண்டு….
    விளைச்சலை விற்று
    வீடு திரும்பியதும்
    ஆவலோடு காத்திருந்த
    குடும்பத்துக்கு சொன்ன பதில்
    “எதுவும் வாங்கவில்லை”….
    குழப்பத்தில் தாறுமாறாக
    தாளம் போட்டது மூளை….
    கடன் கொடுத்தவன் கேட்பானே
    மானமில்லை….
    என எண்ணியவனுக்கு
    தீர்வு தந்தது அறலிவிதை….
    பறிக்க சென்றவன் காதில்
    மா மா என காதில் விழ….
    மறந்திட்டான் போலும்
    மாடுகளுக்கு புல்லிட…
    கண் கழங்கி
    கரிசனத்தோடு தடவியவன்
    பரபரப்பாக கிளம்பி
    மாடுகளைப் பிடித்துக்
    கொண்டே சொன்னான்
    “தலைக்கு மேல
    வேலை கிடக்கு என”.

  12. Nithyanaresh says:

    போட்டி :12
    விருப்பமான தலைப்பு : விவசாய விக்ராமாதித்யன்

    இயந்திரம் கொண்டு ஏர் உழுது
    இறைவனை வணங்கி விதையிட்டு
    உணவு மறந்து உரமிட்டு
    உள்ளம் குளிர நீர் பாச்சி
    கடன் வாங்கி களையெடுத்து
    கண்ணிமை போல்
    கழனியை காத்து
    குத்தகைக்கு அறுவடை செய்து
    குதூகலமாய் வியாபாரம் செய்ய
    போனவனை வழிமறித்து வியாபாரிகள் விலை கேக்க…
    “இந்தவிலை தான் கட்டும்”என்ற
    வார்த்தையில் கட்டுப்பட்டு
    முதலீடு மிஞ்சினா போதும்
    என்று ஆறுதல் கொண்டு….
    விளைச்சலை விற்று
    வீடு திரும்பியதும்
    ஆவலோடு காத்திருந்த
    குடும்பத்துக்கு சொன்ன பதில்
    “எதுவும் வாங்கவில்லை”….
    குழப்பத்தில் தாறுமாறாக
    தாளம் போட்டது மூளை….
    கடன் கொடுத்தவன் கேட்பானே
    மானமில்லை….
    என எண்ணியவனுக்கு
    தீர்வு தந்தது அறலிவிதை….
    பறிக்க சென்றவன் காதில்
    மா மா என காதில் விழ….
    மறந்திட்டான் போலும்
    மாடுகளுக்கு புல்லிட…
    கண் கழங்கி
    கரிசனத்தோடு தடவியவன்
    பரபரப்பாக கிளம்பி
    மாடுகளைப் பிடித்துக்
    கொண்டே சொன்னான்
    “தலைக்கு மேல
    வேலை கிடக்கு என”.

  13. அ.கலையரசன் says:

    #பெண்ணுரிமை

    வானளாவிய பெண்ணுரிமை
    பேசும் குடும்பமானாலும்
    சமச்சு போட்டு
    வீட்ட பாத்துகிட்டு
    வாரிச வளத்தேடுத்தா
    போதும்
    மணமகள் தேடும் போது!

  14. கவிஞர் ஆர் சோமு சாவித்திரி says:

    உறவுகள் தூரம்.
    ….
    சுழலும் உலகில் சுயநலம் எதுக்கு.
    வாழும் நிலையில்
    வம்புகள் வழக்கு.

    பணங்களை தேடும் பாசங்கள் உண்டு
    பழங்கள் இருந்தால் கிளிகள் உண்டு.

    ஓடும் பயணம்
    ஓய்வில்லை பாவம்
    கூடும் நெஞ்சங்கள் குழப்புவது உண்டு மனித இனம்.

    அவரவர் அழுகின்ற விழிகள்
    அடுத்தவரிடம் காட்டுவதில்லை
    துளிகள்..

    உறவுகள் தூரம்
    உயர்வு இருந்தால் நாடும்
    கஷ்டங்கள் என்றால்
    விழி திறந்தாள் கனவுகள் போலே மாயமாகும்.

    கல்வி இதுதான் பாடமாக
    தோல்விகள் எத்தனையோ வீணாக
    சிந்திக்க வேண்டும் சுயமாக
    எதையும் சந்திக்க வேண்டும் துணிவாக…

    நாளெல்லாம் கடந்திடுமே
    நடந்ததை நினைத்து வாழ்ந்திருந்தால்
    நாளை நடப்பதை
    சிந்தனை செய் வாழ்விலே

    உறவுகள் தூரம்.
    ….
    சுழலும் உலகில் சுயநலம் எதுக்கு.
    வாழும் நிலையில்
    வம்புகள் வழக்கு.

    பணங்களை தேடும் பாசங்கள் உண்டு
    பழங்கள் இருந்தால் கிளிகள் உண்டு.

    ஓடும் பயணம்
    ஓய்வில்லை பாவம்
    கூடும் நெஞ்சங்கள் குழப்புவது உண்டு மனித இனம்.

    அவரவர் அழுகின்ற விழிகள்
    அடுத்தவரிடம் காட்டுவதில்லை
    துளிகள்..

    உறவுகள் தூரம்
    உயர்வு இருந்தால் நாடும்
    கஷ்டங்கள் என்றால்
    விழி திறந்தாள் கனவுகள் போலே மாயமாகும்.

    கல்வி இதுதான் பாடமாக
    தோல்விகள் எத்தனையோ வீணாக
    சிந்திக்க வேண்டும் சுயமாக
    எதையும் சந்திக்க வேண்டும் துணிவாக…

    நாளெல்லாம் கடந்திடுமே
    நடந்ததை நினைத்து வாழ்ந்திருந்தால்
    நாளை நடப்பதை
    சிந்தனை செய் வாழ்விலே

  15. ஆர் சோமு சாவித்ரி says:

    மதுவா மனைவியா பிள்ளைகளா.
    ….
    கல்யாணம் முடிந்தால் குடும்பம் கண்டபடி திரிந்தால் நரகம்.
    நம்மை நம்பி வந்த உறவை நம்பிக்கையோடு நாம் வளர்க்கணும்
    நீ மதுவை விட்டுத்தள்ளு
    நீ உறவில் இணைந்து செல்லும்.

    பெண்ணாகப் பிறந்தவள் பூமியில்
    அடிமையாக நமக்குள் வாழ்வதற்கு அல்ல. நீயும்
    அப்படி வாழ்வதற்கு அல்ல.
    துணைவி ஆனால் அவளுக்கும் துணைவியாக நீ.
    மனைவி மக்கள் வேண்டுமா இல்லை மது தான் வேண்டுமா.

    கூட்டுக்குள் சின்னஞ்சிறு பிள்ளைகள்
    குழந்தைகளின் எண்ணங்கள் என்ன மன
    கூண்டுக்குள் புரிந்துகொள்ள நேரத்தை ஒதுக்காமல்
    மது தான் வேண்டுமா
    மாற்றம் இல்லறத்தில் இருக்குமா.

    அன்போடு நாடுகின்ற உறவுகள் நட்போடு காத்திருக்கின்றது என்னாளுமே உன்னோடு
    உயிருள்ளவரை உறவென்று உறுதிதான் வாழவேண்டுமா மண்ணோடு.
    மதுவின் என்னும் போதை வேண்டுமா
    இனியாவது மனைவி பிள்ளை என்று சிலருக்கு ஞானம் வருமா.

    மதுவை மறப்போம்
    வருங்காலத்துக்கு வசந்தத்தை தருவோம்..

  16. ஹெனி ஜெயசீலன் says:

    ஓட்டப்போட்டியில்
    வெற்றி பெற்ற விந்தொன்றால்
    கருவாகி வளர்ந்தேனே
    என் அம்மா…

    கருவறைக்குள் சாதி எதுவென்று
    உறவறியத் துடித்த போது
    சட்டம் தண்டிக்குமென்று தடுத்தாரே
    அவர் வாழ்க…

    என் சாதி உலகறியப் பத்து மாதம்
    கருவறையில் எனை வைத்து
    ரகசியமாய் உணவூட்டி
    எனை வளர்த்தாய்
    என் அம்மா…

    என் முதல் அழுகைக் கேட்டதுமே
    என் சாதி நீ அறிய முற்பட்ட நேரத்தில்
    பெண் சாதி எனச் சொன்ன
    செவிலிப் பெண் கை பிடித்து
    விழியோரம் நீ வடித்தாய்
    ஆனந்தக் கண்ணீர்…

    வலியென்று பலர் சொன்னார்
    நீ சிரித்தாய் எனைப் பார்த்து
    இல்லை இல்லை என்றெனக்குப் புரிந்ததடி
    என் மகள் பிறக்கையிலே…

    உன் கண்ணீர்
    வெண்ணிறமோ செந்நிறமோ
    எனக்கன்றுத் தெரியவில்லை
    இப்போது தெரியுதம்மா
    உன் கண்ணீர் நிறமெனக்கு…

    நான் பிறந்த நேரத்தில்
    உளம் மகிழ்ந்தோர் சிலர் மட்டும்
    பெண் பிள்ளை பெற்று விட்டாள்
    கேடு கெட்ட சிறுக்கி மக…

    அப்பவே சொன்னனேடா
    கருவிலே கலைச்சுரலாம்
    பொண்ணு ஒண்ணு பெற்றெடுத்தா
    என் சொத்து இடம் பெயரும்
    மூதேவி பேச்ச கேட்டு
    வாய மூடி நீ இருந்த!
    சகாரா கள்ளிச் செடி
    ஒண்ணு இப்போ முளைச்சிருக்கு…

    அம்மா உன் கைபிடித்து
    நான் இங்கு நடை பழகி
    பூலோகம் பார்த்ததுமே
    நான் கொஞ்சம் ஆடிப் போனேன்…

    சாதி ரெண்டு உண்டென்று
    பிறப்பு சான்றிதழ் சொல்லிடுச்சி
    வகுப்பறைக்குள் நுழைந்ததுமே
    இருக்கை எனக்கு உணர்த்திடுச்சு
    கல்வி கற்றோம் ஒன்றாய் அங்கே
    கேள்விகள் பலவுண்டு என்னிடத்தில்
    கேட்பதற்கு ஏனோ அச்சமுண்டு என்னிடத்தில்…

    பருவ வயது வந்தவுடன்
    போட்டார் தடை உத்தரவு
    பள்ளிப் படிப்பை இத்தோடே
    விட்டு நீ விலகிவிடு…
    கல்வி உரிமை எனக்குண்டென்று
    எதித்து நான் நின்றிட்டேன்…

    எப்படியோ போராடி
    கல்லூரிக்கு சென்றிட்டேன்
    வவ்வால் கூட்டம் வலை வீச
    வலையை அறுத்து எறிந்திட்டேன்
    என்னைப் பார்த்து பெருமைப் பட
    யாருக்கும் அங்கு மனமில்லை
    ‘அடங்காப்பிடாரி’ பட்டமொன்று
    என் முதுகில் குத்தி விட்டார்…

    பட்டம் பெற்ற கையுடனே
    வேலை ஒன்றும் கிடைச்சிடிச்சு
    நிகர் ஊதியம் எதிர்பார்த்தேன்
    ஆனால் குறைவாய் கொடுத்திட்டார்
    கேள்விகள் பலவுண்டு என்னிடத்தில்
    கேட்பதற்கு ஏனோ அச்சமுண்டு என்னிடத்தில்
    கவலையுடன் நான் வாங்கிய சம்பளமோ
    அப்பன் கையில் போயிடிச்சு
    இப்போ என் உழைப்பெல்லாம்
    மதுக்கடை கணக்கில் சேர்ந்திடிச்சு…

    பெண் பார்க்கும் படலம் பல வைத்து
    என்னை காட்சிப் பொருளாய் ஆக்கிட்டார்
    அதில் பேரழகி பட்டம் கிடைக்கவில்லை
    அறிவழகி என்றெனை சொன்னதாலே
    பல பேர் எனைப் பார்த்து பயந்திட்டார்

    மாப்பிள்ளை பேரம் அரங்கேற
    எங்கள் வட்டிக் கடன் சுமையேற
    என்னிடம் ஏதும் கேட்காமல்
    சுற்றமும் நட்பும் புடை சூழ
    கல்யாணம் எனக்கு பண்ணி வைத்தார்…

    மனைவி என்ற பட்டமொன்றும்
    அன்றே எனக்கு கொடுத்திட்டார்
    மாப்பிள்ளை பேச்சே மந்திரமாம்
    யாரோ எனக்கு ஓதிட்டார்
    சுமைகள் அனைத்தும் தாங்கிட்டேன்
    மறுபேச்சின்றி வாழ்ந்திட்டேன்
    கேள்விகள் பலவுண்டு என்னிடத்தில்
    கேட்பதற்கு ஏனோ அச்சமுண்டு என்னிடத்தில்…

    சமையலறை வேலைகளை
    எனக்கங்கு கொடுத்திட்டார்
    பட்டம் பல பெற்றேன்
    வேதியலில்
    சமையற்கலை பட்டமேதும்
    நான் இன்னும் பெறவில்லை
    என் சமையல் சுவை பற்றி
    கேவலமாய் பேசிட்டார்..

    எனக்குப் பிடித்த உணவொன்றும்
    கண் முன்னே பார்த்ததில்லை
    நான் அணியும் ஆடையெல்லாம்
    என் கணவன் ஆசைதானே!
    அறிவார்ந்த கருத்துக்கள்
    முன் வைக்கும் வேளையிலே
    கணவர் பேசும் பேச்சு இது
    ‘கழுதை ஒன்றை என் தலையில்
    தெரிந்து கொண்டே கட்டி வைத்தார்’
    கோலிக்குண்டு என் மனதில்
    அங்கும் இங்கும் உருண்டோட
    மௌனமாய் நானும் இருந்துடுவேன்…

    காலம் பல உருண்டோடி
    இப்போ ஓய்வு எடுக்கின்றேன்
    என் பழையப் புத்தகம் எடுத்திப்போ
    முதல் பக்கம் படிக்கின்றேன்…

    எனக்கொன்று புரியவில்லை
    என் பிறப்புரிமைக்கு சட்டமென்றால்
    இச்சமுதாயம் இயற்கைக்கு முரண்பட்டதோ?
    ஆணென்றும் பெண்ணென்றும்
    படைத்திட்டார் இறைவனிங்கு
    அனைத்துரிமை எங்களுக்கும்
    இருக்கிங்கு ஆணினமே!
    பெண்ணினம் வாழட்டும்!
    ஆணினம் பெருமையடையட்டும்!

  17. ஹெனி ஜெயசீலன் says:

    #பெண்ணுரிமை

    ஓட்டப்போட்டியில்
    வெற்றி பெற்ற விந்தொன்றால்
    கருவாகி வளர்ந்தேனே
    என் அம்மா…

    கருவறைக்குள் சாதி எதுவென்று
    உறவறியத் துடித்த போது
    சட்டம் தண்டிக்குமென்று தடுத்தாரே
    அவர் வாழ்க…

    என் சாதி உலகறியப் பத்து மாதம்
    கருவறையில் எனை வைத்து
    ரகசியமாய் உணவூட்டி
    எனை வளர்த்தாய்
    என் அம்மா…

    என் முதல் அழுகைக் கேட்டதுமே
    என் சாதி நீ அறிய முற்பட்ட நேரத்தில்
    பெண் சாதி எனச் சொன்ன
    செவிலிப் பெண் கை பிடித்து
    விழியோரம் நீ வடித்தாய்
    ஆனந்தக் கண்ணீர்…

    வலியென்று பலர் சொன்னார்
    நீ சிரித்தாய் எனைப் பார்த்து
    இல்லை இல்லை என்றெனக்குப் புரிந்ததடி
    என் மகள் பிறக்கையிலே…

    உன் கண்ணீர்
    வெண்ணிறமோ செந்நிறமோ
    எனக்கன்றுத் தெரியவில்லை
    இப்போது தெரியுதம்மா
    உன் கண்ணீர் நிறமெனக்கு…

    நான் பிறந்த நேரத்தில்
    உளம் மகிழ்ந்தோர் சிலர் மட்டும்
    பெண் பிள்ளை பெற்று விட்டாள்
    கேடு கெட்ட சிறுக்கி மக…

    அப்பவே சொன்னனேடா
    கருவிலே கலைச்சுரலாம்
    பொண்ணு ஒண்ணு பெற்றெடுத்தா
    என் சொத்து இடம் பெயரும்
    மூதேவி பேச்ச கேட்டு
    வாய மூடி நீ இருந்த!
    சகாரா கள்ளிச் செடி
    ஒண்ணு இப்போ முளைச்சிருக்கு…

    அம்மா உன் கைபிடித்து
    நான் இங்கு நடை பழகி
    பூலோகம் பார்த்ததுமே
    நான் கொஞ்சம் ஆடிப் போனேன்…

    சாதி ரெண்டு உண்டென்று
    பிறப்பு சான்றிதழ் சொல்லிடுச்சி
    வகுப்பறைக்குள் நுழைந்ததுமே
    இருக்கை எனக்கு உணர்த்திடுச்சு
    கல்வி கற்றோம் ஒன்றாய் அங்கே
    கேள்விகள் பலவுண்டு என்னிடத்தில்
    கேட்பதற்கு ஏனோ அச்சமுண்டு என்னிடத்தில்…

    பருவ வயது வந்தவுடன்
    போட்டார் தடை உத்தரவு
    பள்ளிப் படிப்பை இத்தோடே
    விட்டு நீ விலகிவிடு…
    கல்வி உரிமை எனக்குண்டென்று
    எதித்து நான் நின்றிட்டேன்…

    எப்படியோ போராடி
    கல்லூரிக்கு சென்றிட்டேன்
    வவ்வால் கூட்டம் வலை வீச
    வலையை அறுத்து எறிந்திட்டேன்
    என்னைப் பார்த்து பெருமைப் பட
    யாருக்கும் அங்கு மனமில்லை
    ‘அடங்காப்பிடாரி’ பட்டமொன்று
    என் முதுகில் குத்தி விட்டார்…

    பட்டம் பெற்ற கையுடனே
    வேலை ஒன்றும் கிடைச்சிடிச்சு
    நிகர் ஊதியம் எதிர்பார்த்தேன்
    ஆனால் குறைவாய் கொடுத்திட்டார்
    கேள்விகள் பலவுண்டு என்னிடத்தில்
    கேட்பதற்கு ஏனோ அச்சமுண்டு என்னிடத்தில்
    கவலையுடன் நான் வாங்கிய சம்பளமோ
    அப்பன் கையில் போயிடிச்சு
    இப்போ என் உழைப்பெல்லாம்
    மதுக்கடை கணக்கில் சேர்ந்திடிச்சு…

    பெண் பார்க்கும் படலம் பல வைத்து
    என்னை காட்சிப் பொருளாய் ஆக்கிட்டார்
    அதில் பேரழகி பட்டம் கிடைக்கவில்லை
    அறிவழகி என்றெனை சொன்னதாலே
    பல பேர் எனைப் பார்த்து பயந்திட்டார்

    மாப்பிள்ளை பேரம் அரங்கேற
    எங்கள் வட்டிக் கடன் சுமையேற
    என்னிடம் ஏதும் கேட்காமல்
    சுற்றமும் நட்பும் புடை சூழ
    கல்யாணம் எனக்கு பண்ணி வைத்தார்…

    மனைவி என்ற பட்டமொன்றும்
    அன்றே எனக்கு கொடுத்திட்டார்
    மாப்பிள்ளை பேச்சே மந்திரமாம்
    யாரோ எனக்கு ஓதிட்டார்
    சுமைகள் அனைத்தும் தாங்கிட்டேன்
    மறுபேச்சின்றி வாழ்ந்திட்டேன்
    கேள்விகள் பலவுண்டு என்னிடத்தில்
    கேட்பதற்கு ஏனோ அச்சமுண்டு என்னிடத்தில்…

    சமையலறை வேலைகளை
    எனக்கங்கு கொடுத்திட்டார்
    பட்டம் பல பெற்றேன்
    வேதியலில்
    சமையற்கலை பட்டமேதும்
    நான் இன்னும் பெறவில்லை
    என் சமையல் சுவை பற்றி
    கேவலமாய் பேசிட்டார்..

    எனக்குப் பிடித்த உணவொன்றும்
    கண் முன்னே பார்த்ததில்லை
    நான் அணியும் ஆடையெல்லாம்
    என் கணவன் ஆசைதானே!
    அறிவார்ந்த கருத்துக்கள்
    முன் வைக்கும் வேளையிலே
    கணவர் பேசும் பேச்சு இது
    ‘கழுதை ஒன்றை என் தலையில்
    தெரிந்து கொண்டே கட்டி வைத்தார்’
    கோலிக்குண்டு என் மனதில்
    அங்கும் இங்கும் உருண்டோட
    மௌனமாய் நானும் இருந்துடுவேன்…

    காலம் பல உருண்டோடி
    இப்போ ஓய்வு நான் எடுக்கின்றேன்
    என் பழையப் புத்தகம் எடுத்திப்போ
    முதல் பக்கம் படிக்கின்றேன்…

    எனக்கொன்று புரியவில்லை
    என் பிறப்புரிமைக்கு சட்டமென்றால்
    இச்சமுதாயம் இயற்கைக்கு முரண்பட்டதோ?
    ஆணென்றும் பெண்ணென்றும்
    படைத்திட்டார் இறைவனிங்கு
    அனைத்துரிமை எங்களுக்கும்
    இருக்கிங்கு ஆணினமே!
    பெண்ணினம் வாழட்டும்!
    ஆணினம் பெருமையடையட்டும்!

  18. Nithyanaresh says:

    தலைப்பு: வன்கொடுமை
    பிரம்மனே நீயும் சுயநலம்
    கொண்டவன் தான் போலும்
    இதுநாள் வரை…
    ஆணுக்கும் பெண்ணுக்கும்
    ஆறு அறிவு படைத்தாய்….
    ஆணுக்கு உடல் வலிமை
    பெண்ணுக்கு மனவலிமை
    வரமாக கொடுத்தாய்
    என்றே நினைத்தேன்….
    இப்போது தான் புரிந்தது
    ஆண்களை மட்டும்
    திருடனாகவும் சாவியாகவும்
    படைத்திருக்கிறாய் என்று….
    இரண்டும் அவரானால்
    திருட்டுப் போனால் யார் பொறுப்பு?
    பெண்ணாக பிறப்பெடுத்தால்
    இன்னொருவரின் இச்சைக்கு
    இறையாகத்தான் வேண்டுமா?
    இந்த பரந்த உலகின் அழகைக்
    காண பெண்ணுக்கு உரிமை இல்லையா!
    பாதுகாப்பு இல்லை என்பதால் தான்
    மக்கி மண்ணாகப் போகும்
    மன வலிமை தந்தாயா?
    ஒழிந்து வாழும் வாழ்க்கை தேவையில்லை….
    தலைநிமிர்ந்து வாழ வழி சொல்வாயா?
    ஆட்சி செய்யும் உரிமை தேவையில்லை….
    சுதந்திர வாழ்க்கையை
    கொடுப்பாயா…
    இல்லை எனில்
    கண்களால் எரிக்கும் சக்தி கொடுப்பாயா….
    பெண்ணின் பாதுகாப்பை
    பெண்ணே உருதி செய்யட்டும்…
    மீண்டும் பெண் என்ற
    பிறவியை படைத்து விடாதே…
    ஏனென்றால் இந்த வேதனையை வெறும் வார்த்தைகள் கொண்டு
    விளங்க வைக்க முடியாது…
    ஆண்களை மட்டும் படைத்து
    அழகு பார்….
    அப்போதாவது புரியட்டும்
    பெண்ணின் பெருமை
    ஐம்புலன்களை அடக்க தெரியாத பூதங்களுக்கு…

  19. Srikanth Lawrence says:

    நிலவுக்கு ஏற்பட்ட சோகம்:

    உன்னை காட்டி என் அம்மா எனக்கு சோறுட்டினாள்
    உன்னை கவனித்தேன் அன்று
    பிரகாசமாய் தெரிந்தாலும்
    உன் முகத்தில் உள்ள சிறு கரும்படலம்
    ஏனோ கலக்தை காட்டியது
    உன் குழந்தை பருவம் நினைவுக்கு வந்ததா
    இதுபோல அம்மா இல்லையே என ஏக்கம் கொண்டாயா
    நீ கவலை கொண்டால் கவிஞன் தாங்கமாட்டான்
    நான் தாங்கமாட்டேன்
    பகலில் தூங்கும் உன்னை
    கண்டிக்கும் தந்தையாகவும்
    இரவில் விழித்திருக்கும் உன் நலன் மேல் அக்கறை கொண்ட
    தாயாகவும்
    கவிஞன் இருக்கிறான்
    நான் இருக்கிறேன்
    உனக்கு பால் சோறு ஊட்ட

    – Written By Srikanth Lawrence

  20. ஹெனி ஜெயசீலன் says:

    சிட்டுக்குருவி
    காலைக் கதிரவன் கண்சிமிட்டும் முன்னே
    எழுந்திடுவாய் நீ என்னை பரவசப்படுத்த
    என் எண்ண ஓட்டங்களுக்கு
    நீ பின்னணி இசை வாசிப்பாய்
    அங்கும் இங்கும் பறந்தோடி ஒழிந்து
    என்னுடன் கண்ணாமூஞ்சி விளையாடுவாய்

    அம்மா காயப்போட்ட நெல்லை
    ஒவ்வொன்றாய் கொத்தி கொத்தி
    என் மீது கடைக்கண் பார்வை வீசுவாய்
    நானோ நம் கண்ணாமூச்சி ஆட்டத்தில
    நீ வெற்றி பெற்றதாய்ப் பெருமிதம் அடைவேன்

    என் வீட்டு முற்றத்தில் நீ மழையில்
    நனைந்து வரும் போதெல்லாம்
    உனக்கு குடை ஒன்று பரிசளிக்க ஆசை
    முல்லை மரக்கொடியில்
    நீ இருந்து இளைப்பாற
    ஆலம் இலை ஒன்றெடுத்து குடையொன்று
    செய்துனக்குப் பரிசளித்த போது
    குடையொன்றும் வேண்டாம்
    வீடொன்று கட்ட இடம் கொஞ்சம்
    தருவாயா என சிறகடித்து கேட்க
    உடைந்த என் நெஞ்சம்
    இன்னும் ஒட்டவே இல்லை

    அன்றே என் வீடு விட்டு சென்றவள் நீ
    இன்னும் வீடு திரும்பவே இல்லை
    உனக்காய் மண் பானை ஒன்று வாங்கி
    என் வீட்டு முன்சுவரில் மாட்டி வைத்திருக்கிறேன்
    என் வீட்டு முற்றத்தில் தினை தூவி
    என் தலைமுறைக்கு உன்னை அறிமுகப்படுத்த
    எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
    நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில்…

    என் வீட்டுத் தோட்டத்தில் புற்களும் புதர்களும்
    உனக்காய் வளர்த்திருக்கிறேன்
    புழுவுக்கும் பூச்சிக்கும் இப்போது
    பஞ்சமில்லை என் வீட்டுத் தோட்டத்தில்
    வெட்டுக்கிளிகள் வெட்டி விட்ட
    இலைகளெல்லாம் வியந்துனைப் பார்க்கும்
    நீ வந்து சேர்ந்தால்…

  21. கோவை சுபா says:

    சாதிகள் இல்லை

    சாதிகள்
    இல்லையடி பாப்பா…
    பாரதியாரின்
    இந்த கவி வரிகள்….!!

    பாட்டினிலும்
    ஏட்டினிலும்
    தேர்தல் திருவிழா
    காலங்களிலும்
    காது குளிர கேட்டு
    மகிழ்ச்சி கொள்ள
    முடியுமே தவிர….!!

    மத்தபடி…
    இந்த கவியின்
    வைர வரிகளின்
    மதிப்பு என்பது
    ஆண்டிகள் சேர்ந்து
    மடம் கட்டிய
    கதைப்போல்தான்…!”
    –கோவை சுபா

  22. ரொ.அந்தோணி says:

    முரட்டாட்டம் திளைத்து
    முரட்டுகழுத்து முன் பின்
    முரண் – யாவும்
    முரண்மொழி செழித்து
    முரண்டு கொண்டவள் – யாணம்
    சட்டியெடுத்து பற்று அன்றியும்
    மனகாய்ச்சல் ஆயினும்
    மனையோள் நேசம் – யான்
    புத்திமட்டு கோளின்நடைபேனும்
    மன்றாடி மனதார – யாம்
    மடிந்தாலும் மேன்மை கற்பேன்
    உரியபோதில் கால்வாயன்
    யாவரும் வரியவனே
    இல்வாழ்பேய் உரித்தது எனில்? நகைப்புக்கு யணது
    சொல்லாளி கொள்ளியில் மடி
    கமைப்பு மிளகு போதல்
    மனசஞ்சலம் உருவி முகத்தல்
    இல்லாது
    இட்டோடு இல்வாழ்க்கை
    காட்டோடு துறவுவாழ்க்கை
    தட்டோடு காலவாழ்க்கை
    இட்டபோகம் எவ்விடம்
    செல்வேன்? பொலிவான
    அறிவு இல்லாதவன் – மலிவான
    பற்று விலையில்லாமல்
    தீக்கரும்புகொண் வேள்வியில்
    தின்னத் தின்ன
    உதிரம் உமிழ்ம் கொள்ளும்படி
    எண்ணத்தை கைவிடு
    மூங்கில் பூவே!! எம் பூவேந்தி!!

    ரொ. அந்தோணி

  23. Shobha says:

    Kavithai potti_12 from :_shobha(trichy). படர்ந்த வானில் வரிசை பின் வரிசையாய் பரந்த சிட்டுக்குருவி குரலை கேட்ட கதிரவன் சற்றே தன்னை மறைத்து கொண்டது மேகங்களுக்கிடையே சிட்டுக்குருவி ஓசையை கேட்டு சிறு குட்டையாக இருந்தாலும் அந்தக் குழியில் உள்ள அந்தக் குழியில் உள்ள தண்ணீரில் தன் சிறகுகளை சிறகடித்து பக்கத்தில் உள்ள மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது

  24. கருப்புச்சாமி ராஜா says:

    பாரதி பிறந்த நாள்
    *பாரதியின் ஞான முழக்கம்*

    அச்சமில்லை அச்சமில்லை என்று அஞ்சாதவன்
    ஆண்மை தவறாத அக்னிக் குழம்பிவன்
    இன்பத் தமிழே இனிமை என்றவன்
    ஈடே ஏதுமில்லா வெற்றித் திலகம்
    உண்மையை உடைத்து உரைக்கும் கவிஞன்
    ஊக்க வரிகளின் உண்மை தலைவன்
    எழுத்தின் உன்னதம் உணர்த்திய கலைஞன்
    ஏழை வாழ்வின் எழுச்சி சுடரிவன்
    ஐயமே இல்லா மகாகவி இவன்
    ஒன்றோ இரண்டோ இவன் பெருமைகள்
    ஓடும் நீர்போல் வார்த்தை கொண்டவன்
    ஔடதம் போல் வரிகள் படைப்பவன்
    கவிதை உலகின் கடவுள் இவன்
    காணும் யாவையும் கவிதை ஆக்கியவன்
    காலம் கடந்தாலும் கரையாது நின்புகழ்
    வீர முழக்கமிட்டு அந்நியனை வென்றவன்
    வெற்றித் திலகமிடும் கவி சத்ரியன்
    முண்டா சிட்ட முத்தமிழ் கவியே
    முக்காலமும் வாழ்க உந்தன் புகழ்
    மகாகவி என்னும் பாரதியின் புகழ்
    என்றும் வாழிய வாழியவே..!

    – கருப்புச்சாமி ராஜா, பழனி

  25. விக்னேஷ்முருகன் says:

    படர்ந்திருந்த பனித்துளி மேல் தன் சின்னஞ்சிறு கனி இதழ் பட்டவுடன் சிறகடித்த சிட்டுக்குருவின் இன்னிசையில் தன் தாய் முகம் பார்த்து மெல்ல நகுத்த சிறு மழலையின் சிரிப்பே புதுக்கவிதையின் தலைப்பு…