கவிதை போட்டி 2022_11

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-11

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி 2022_11 அறிவிப்பு

இன்னா செய்தாரை ஒறுத்தல்
கலைந்த கால்பந்து கனவு
கார்த்திகை மாதம்
குழந்தைகளை கொண்டாடுவோம்
விரும்பிய தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-11. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

16 Responses

  1. தாரா says:

    விரும்பிய தலைப்பு: எங்க ஊர் சேலம்

    சேர நாடு என் செந்தமிழ் பேசும்

    என் தமிழ் நாடு நான் பிறந்து

    வளர்ந்த என் சொந்த ஊரு

    அதன் கதையை நீ கொஞ்சம் கேளு

    பார்க்கும் திசை எல்லாம் பரபரப்பாக

    போகும் ஆளு பார்த்ததும் வியந்து

    போகும் ஊர்ரு மல்கோவா என

    சொன்னதும் நினைவுக்கு வருவது

    எங்க ஊர்ரு மாங்கனி சாறு

    இரும்பு கோட்டை என அழைக்கப்படும்

    எங்க ஊர்ரு ஸ்டீல் பிளாண்டு

    எல்லை இல்ல வாணிகத்தின் பிறப்பு

    செவ்வாய்பேட்டை லீ பாஜர் அதன்

    சிறப்பு

    ஏற்காடு மலை இங்கு இருக்கு

    ஏர் பிடிக்கும் உழவு கூட இங்கு

    மிக சிறப்பு

    ஏழுமலையான் கோவிலுக்கு

    செல்லும் பூக்கள் பூக்கும் என்பது

    தனி மதிப்பு

    மலேசிய முருகன் சிறப்பு

    எங்க முத்து மலை முருகன் புதுசு

    பக்குவமாய் பார்க்கும் இடம் இருக்கு

    பக்தியில் சிறந்தது எங்க ஊரின்

    கோட்டை மாரியின் மதிப்பு ஆடி

    பிறந்தாலே அதிரும் எங்க ஊர்ரு

    சிறப்பு

    கோலகலமாக இருக்கும் ஊர்ரு எங்க

    சேலத்தை நீ வந்து பாரு

    குருவம்பட்டி பெயர்ரு உயிரியல்

    பூங்காவை நீ போய் பாரு

    அனுமின்நிலையம் எங்க ஊர்ரு

    மேட்டூர் அணையை நீ வந்து பாரு

    மெல்ல ஒடும் காவிரி ஆறு

    பலபேர் ஒன்றாய் வாழும் ஊர்ரு

    பாசமான மக்களை நீ வந்து பாரு

    சேலம்மே எங்க ஊரு

  2. தாரா says:

    விரும்பிய தலைப்பு:மழை

    பூக்கும் பூ வுக்கும் வலிக்கிறது

    அதன் புன்னகை மறைக்கிறது

    பல வண்ணம் இருக்கிறது

    இயற்கை ரசிக்கிறது

    வானம் பொழிகிறது

    மழை வாசல் வருகிறது

    பல உயிர்கள் தவிக்கிறது

    என் இதயம் துடிக்கிறது

    வெள்ளம் வருகிறது

    வெளியில் வராமல் மக்கள்

    இருக்கிறது

    கோபம் வருகிறது மேகம்

    பொழிகிறது

    காரணம் தெரிகிறது மழை நீர் போக

    வழியில்லாமல் மிதக்கிறது

    ஆறுகள் வீடுகளாக மாறுகிறது

    ஆற்று வெள்ளம் வீடுகளில்

    சேர்கிறது

    விஷஉயிர்கள் விருந்தாளியாய்

    வருகிறது

    விண்ணும் மண்ணும் இணைகிறது

    இடைவெளி குறைகிறது

    மழை வந்து பொழிகிறது

  3. தாரா says:

    தலைப்பு:கலைந்த கால்பந்து கனவு

    பூவின் சிரிப்பு மறைந்தது

    கனவு இங்கே கலைந்தது

    கண்ணீர் இங்கு வழிந்தது

    கால் பந்து அவளை அழைத்தது

    தோழிகளின் இதயம் துடித்தது

    வருவாள் என நினைத்தது

    அவள் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது

    குடும்பம் இங்கு தவித்தது

    மக்கள் குரல் ஒலித்தது

    மனம் கலங்கி போனது

    வீரபெண்மணியை இழந்தது

    விளையாட்டில் அவள் சிறந்தது

    பிரியமான பிரியாவின் கால் பந்து

    கனவு கலைந்தது காலம் மிக கொடியது .

  4. தாரா says:

    தலைப்பு: கார்த்திகை மாதம்

    மாதங்கள் பனிரெண்டு

    கார்த்திகை தீபம் இன்று

    கார் கால காலம் கார்த்திகை என்று

    காந்தள் பூ பிறப்பது உண்டு

    கஷ்டங்கள் போகும் மாதம் என்று

    கடவுளின் விரத காலம் ஆரம்பம்

    இன்று

    மலையில் வாழும் தெய்வம் என்று

    மணிகண்டனின் சரணம் பாடும்

    பொழுது

    பௌர்ணமியின் ஒளி நிலவு

    திருக்கார்த்திகை தீப நிலவு

    சிவபெருமான் ஜோதி வடிவு

    சிந்தையில் வாழும் பக்தி நிலவு

    கார்த்திகை பெண்களையாய் வாழும்

    நிலவு

    கந்தனை வளர்த்த நட்சத்திர மலர்ரு

    கார்த்திகை மாதம் என்னும் பொழுது

    கடவுளின் கீர்த்தனைகள் கேட்கும்

    மனது

    கார்த்திகை மாதம் வந்த பிறகு

  5. Shanav Gunasekaran says:

    அன்பு சகோதரியே!
    போய் வா…
    இந்தப் பொறுப்பில்லா
    பொய்யர் தேசத்தில்
    பொசுங்கிய உன்
    கனவுகளுக்கு
    என் கண்ணீர் அஞ்சலி!

    கயமையும்
    களவும்
    கைகோர்த்து விளையாடும்
    இங்கு உன்
    கால்களுக்கென்ன
    விளையாட்டென்று
    காலகற்றிய
    கயவர்கள் கூனிட
    சொர்க்கத்திலாவது
    உனதாக்கிக் கொள்…
    பூமியில் கலைந்து
    போன உன்
    கால்பந்து கனவை!

    இங்கே விதைக்கப்படும்
    கனவுகள் எல்லாம்
    பலிக்கும் முன்பே
    பலியாக்கப்படும்
    உன்னைப் போல…..
    கலைந்தது உன்
    கால்பந்து கனவு,
    இருந்தாலும்
    மூச்சுக் காற்றை
    நீ தந்து
    பூமியில் நிரந்தர
    முகவரியாகிவிட்டாய்!

    இனி உனக்கு பின்
    உதிக்கப் போகின்ற
    ஒவ்வொரு கனவும்,
    கலையாமல்
    நனவாய் மாற
    நீயே துணையிருப்பாய்
    எனும்
    நம்பிக்கையில்…..

    ஆயிரமாயிரம்
    பிரியாக்ககளின்
    மனக் குமுறலோடும்….
    மனசாட்சி அற்ற
    சில மனிதர்கள்
    மேல் கொண்ட
    வெறுப்பெனும்
    நெருப்பினோடும்….
    கலைந்த உன்
    கால்பந்து கனவுகளுக்காக
    கண்ணீரோடும்….
    இனி வரும்
    பிரியாக்களின்
    கனவுகள் மெய்ப்பட
    பிரார்த்தனையோடும் …
    என்றும்
    உன்னை
    நினைத்திருப்போம்
    உதிரத் தொடர்பில்லா
    உறவுகளாய்!

    !

  6. UMA KISHORE says:

    விரும்பிய தலைப்பு
    ***************

    மரம்
    ********
    யான் வாசித்த கவிதையிலே
    மிகச் சிறந்த கவிதை – நீ அல்லவா?‘
    வேர்கள்’ தாயாய் மாறி-உனை தாங்கி நிற்கின்றது!
    ‘கிளைகளோ’ சேயென கொஞ்சி – உனை முத்தமிட்டு தவழ்கின்றது!
    ‘கனிகள்’ நட்பாய் மாறி – உனை பெருமை கொள்ளச் செய்கின்றது!
    ‘காய்கள்’ கரங்களாய் நிறைந்து- உனை காதலித்து கணிகின்றது!
    நீதான் எத்தனை எத்தனை கொடுத்து வைத்தவள்?
    சுற்றத்தோடும் ,நட்போடும் கம்பீரமாய் நிற்கின்றாய்!
    இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாலும், பின் எழுகின்றாய்,
    வீறு கொண்டு முளைக்கின்றாய்,இளந் தளிராய், கிளையாய், காயாய், கனியாய் – பின் சருகெனும் வேராய் மாறி
    சிம்மாசனம் அமைக்கின்றாய்!
    ஆயிரம் முறை கூறுவேன் – உனைப்
    போன்ற கவிதை – இனிஎங்கும் இல்லை – மரமே !!

  7. வே. ஹேமலதா says:

    கலைந்த கால்பந்து கனவு
    ———————————————–
    பந்தய இலக்கை நோக்கி
    பலமுறை வலையினுள்
    வீசப்பட்ட பந்து முடிவில்
    படிப்புக்காக பரணில்
    வீசப்பட்ட போது..

    காலாண்டு தேர்வுக்காக
    கணக்கு வாத்தியார்
    விளையாட்டு நேரத்தை
    களவாண்ட போது..

    “மாண்புமிகு அமைச்சரால் நிறுவப்பட்டது ”
    என்ற கல்வெட்டுடன்
    தொடங்கப்பட்ட மைதானம்
    ஊழலால் பராமரிப்பின்றி
    மயானமாய் மாறிய போது..

    பணத்திற்கும்
    பரிட்சையத்திற்கும்
    விளையாட்டு அணியின்
    சேர்க்கை முடிவுகள்
    விலை போனபோது..

    விளிம்பு நிலையில் வாழும்
    விளையாட்டு வீரன்
    வீட்டிற்காக என்று
    விளையாட்டை விடுத்து
    கைக்கூலியாய் ஆனபோது..

    என்று பலமுறை
    கொல்லப்பட்ட கனவு
    இன்றைய விளையாட்டு
    செய்திகளில் வெறும்
    அசரீரியாய் ஒலித்தது
    “இந்தியாவின் கால்பந்து
    கனவு கலைந்தது” என்று.

    – வே. ஹேமலதா

  8. தாரா says:

    தலைப்பு:குழந்தைகளை

    கொண்டாடுவோம்

    குழந்தை பருவம் அழகானது

    பேசும் வார்த்தை இனிமையானது

    அன்பே உருவானது

    துணிச்சல் மிக அதிகமானது

    தவறுகளை திருத்திக் கொள்வது

    நன்மைகளை எடுத்து சொல்வது

    பெற்றோரின் கடமை எனப்படுவது

    உலகம் உன்னை போற்றுவது

    வாழ்க்கை பாடம் நீ கற்று கொள்வது

    நாளைய எதிர்காலம் உன்னிடம்

    இருப்பது

    உயர்ந்தோர் வழியில் நீ நடப்பது

    கல்வியில் நீ சிறப்பது

    குழந்தைகளை கொண்ட நினைப்பது

    வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது

    குழந்தையின் ஒழுக்கம் சிறந்தது

  9. சமீனா தாஜ் says:

    “கனவுக் காதல்”
    அன்பை ஆழமாக்கி
    ஆனந்தத்தை வானமாக்கி
    அருகருகே இருக்கும் விண்மீனாய் கைகோர்த்து
    நெகிழ்ந்திட்ட நடைப்பயணம்
    கண்விழித்ததும் காணாமல் போயிற்றே…..!!

  10. அரவிந்தன் says:

    வினாவே எப்படியோ கவலை இல்லை
    வினாவங்கி எதற்கும் கவலை இல்லை
    வினாவில் தேறுதல் சிக்கல் இல்லை
    வினாத்தாள் கசிவது நடப்பதே இல்லை

  11. சி.திவ்யா says:

    என் நிலவே!!!
    கவிதை: நான் நிலவை ரசிப்பதை விட
    உன்னை நித்தமும் ரசிக்கிறேன்!!!
    வேலை இல்லை எனக்கு!!!
    என் அழகிய நிலாமுகனே!!!
    உன்னை ரசிப்பதை தவிர
    வேறு வேலை இல்லை எனக்கு!!!
    கல்லூரி நாட்களில் ஒளிராத நட்சத்திரம் போல
    ஒளிந்து கொண்டேன் உன்னை கண்டதும்!!!
    இரவில் தோன்றும் விண்மீன்களில்
    நிலவை தேடுவது போல
    இடைவேளை நேரத்தில் உன்னை தேடும் என் விழிகள்!!!
    இருளில் ஒளி பூக்கும் மின்மினிப் பூச்சிகளாய்
    உன்னை கண்டதும் முகம் மலர்கிறேன்!!!
    வளர்பிறையாய் வளர்ந்து வந்த நம் காதலில்
    யார் கண் பட்டதோ தெரியவில்லை!!!
    நிலவும் சுடும் என்று உன் கோபத்தில் அறிந்தேன்!!!
    தேய்பிறை நிலவாய் சில நாட்களாக என்னைவிட்டு
    கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கின்றாயே!!!
    எப்பொழுது மீண்டும் பௌர்ணமி ஆவாயோ!!!
    என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறேன் நான்!!!
    நிலவு தோன்றாத அமாவாசை இரவில் ( நீ என்னுடன் பேசாத நாட்களில்)
    நம் நினைவுகளை கொண்டு மனதை தேற்றுகிறேன்!!!

  12. சுப்பிரமணிபாரத் says:

    சமய இருட்டில் தடுக்கி!
    ஜாதி சகதியில் எழுந்து
    வெள்ளையனின்
    “அதிகாரத்தை”மீட்டேடுத்து
    நமக்கான சட்டயுரிமையே நிலைநாட்டி!!
    குடிகள்ஒன்று சேர்ந்து குதுகளிக்கும்
    இன்ப திருநாள் குடியரசு தினம்!!!

    நாட்டின் நிலைமையே நினைத்து
    என்னோடு சேர்ந்து “மெழுகுவர்த்தியும்”
    கண்ணீர் வடிக்கும் இந்த மெல்லிய இரவில்
    என் கவிதையில் விழும் கண்ணீர் சொட்டு!!!

    பாறையின் மீது உருண்டுவிழும்
    பறவையின் “முட்டைப்போல”
    சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் மட்டும் தேசப்பற்று!!!

    மலராய் ஜனிக்காமல் கனியாய் பிறக்காமல் மரத்தை தாங்கி பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை
    நம் நாட்டை காக்கும் இராணுவவீரர்களும் அப்படியே!!!
    துப்பாக்கி கண்டதும்
    பயந்துநடுங்கும் கூட்டமில்லை!!
    வாழ்வு சாவு மத்தியில் உயிரேனும் தோட்டாவில்
    எதிர்த்து நிற்பவரை
    கலங்கசெய்யும் கூட்டம்!!

    மரணம் வரைக்கும் சென்றவிதை
    இன்னொரு “ஜனனம்” காண்பது போல
    நிலக்கரிக்குள் “உயிரூட்டி” எந்திரம் தள்ளும் நெருப்புதான் இராணுவம்!!
    தன்னினும் “வலியது” தாங்கி சுமக்கும் “தண்டவலமாய்” இராணுவவீரர்கள்!!

    நம்பிக்கையில் உயிரை ஊறவைத்து!!
    பேய் மழையிலும்!! கடும் குளிரிலும்!” உறைந்த பணியிலும்!!
    நத்தை சாகும் வரை தன்கூட்டை காயட்டாமல் இருப்பது போல!!உயிர் பிரியும் வரை எல்லைக்கோட்டில் எங்களுக்குகாக சீருடையை கயற்றதா நாட்டை
    பாதுகாக்கும்!! என் ராணுவ ரத்தமே!என்னமும் ஏக்கமும்
    நிறைவேற!! இந்தியனாய் வேற்றுமை கலைத்து ஒற்றுமையாய் வாழ
    உறுதிகொள்வோம்… ஜெய்ஹிந்த்

  13. அமிர்தராஜ் says:

    பாறையோடு பல நாள்
    போராடி முட்டி மோதி
    வெளி வரும்
    சிறு செடியின் வெற்றி
    ஆச்சரியத்துக்குரியதே!!
    பாராட்டப்படவேண்டியதே!!

    எனினும்!!!
    தன் இயல்புத் தன்மையை
    கொஞ்சம் இளக்கிக் கொண்டு
    செடியின் வெற்றிக்கு காரணமான
    அந்த பாறையின் ஒத்துழைப்பும்
    கவனத்துக்குரியதே!!
    பாராட்டுதலுக்குரியதே!!!

    – கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் !!!!

  14. வே. கீர்த்தி says:

    விதூஷகன்:
    கைத்தட்டலும், சிரிப்பும்,
    கூச்சலும் அரங்கமெங்கும்,
    எதிரொலித்து ஆர்ப்பரிக்க,
    முகம் நிறைய,
    மை குழைத்துப் பூசி,
    பல வண்ணங்களை ஆடையாய்,
    தைய்த்துப் பின்னி,
    ஆடியும், பாடியும்,
    வித்தை காட்டிக் கொண்டிருந்தான் அந்த விதூஷகன்…
    உதட்டில் புறப்பட்ட சிரிப்பு,
    காது வரை வளைந்தோட,
    கண்கள் மட்டும் ஈரமாய்,
    வலியைக் கடத்த,
    எல்லோருக்கும் கேலிக்கையை தெரிந்தவன்,
    கோதாவில் சின்னஞ்சிறு சந்தோஷங்களின்,
    நாயகனாய் கோமாளி உடையில்,
    காது கிழியும் கரகோஷத்தின் மத்தியில்,
    சிங்கத்தை சீண்டி சிரித்துக் கொண்டிருந்தான்…

  15. ஜா.பா.ரா says:

    சிவராத்திரி

    ஆட்டத்தில் ஜெயித்ததாய்
    நினைத்த சிவன்
    காலை இறக்கியபடியே
    காளியைத் தேடிக்கொண்டு
    நோட்டமிட்டான்

    தீயாய் காளி அமர்ந்திருந்தாள்
    மெல்ல நடந்த சிவன்
    கொஞ்சம் தீயை எடுத்து
    தன் நெற்றி நடுவில்
    அப்பிக்கொண்டான்
    தன் இரு கண்களையும்
    மூடியபடியே
    காளியை நோக்கி
    இரவு முழுதும்
    நின்ற சிவன்
    மெல்ல மெல்ல
    தன் கண்களைத்
    திறந்தான்

    அப்போது அனல்
    அம்பிகையாய்
    மாறியிருந்தது

  16. ANNAPSSUBBIAH says:

    துள்ளி திரிந்த “இளமையையும்”,
    கட்டி காத்த “அழகையும்”,
    கட்டு அவிழ்த்துவிட்டால்,
    கருவுற்ற நாளிலிருந்து,
    ஆம்!!
    சந்தோஷமாக கட்டு அவிழுத்துவிட்டு,
    கட்டை சாயுற வரைக்கும்,
    நம்மை கண்ணை போல்,
    காத்திருக்கும் ஒரு ஜீவன்,
    இவளன்றி யாரன்றோ!!!