கோலம் போடுவது எதற்க்காக ? – மார்கழி கோலப்போட்டி
கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti.
கோலமிடுவதன் நன்மைகள்
மார்கழி கோலத்திற்கு சிறப்பான மாதம், தெருவெங்கும் கோலமயமாக தென்படும். பொதுவாக வீட்டின் முன் கோலமிடுவது பூமித்தாய்க்கு செய்யும் மரியாதையாகும். சாணம் தெளிப்பது எதிர்ப்பு சக்தி உண்டாக அதே மாதிரி அரிசி மாவினால் கோலம் போடுதல் அன்ன தானத்திற்கு சமமாகும். கோலம் போடும்முன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள். சூரிய உதயத்திற்கு கோலம் போட வேண்டும். வீட்டில் மகாலக்ஷ்மி விஜயம் செய்வது ஐதீகம் எனவே புதிய தண்ணீரில் வாசல் தெளிக்கவேண்டும் மேலும் சாணம் கலந்து தெளிப்பது மேலும் சிறப்பு kola potti.
எப்படி கோலமிடுவது ?
இறந்தவர்கள் தொடர்பான எந்த விசேஷ நாட்களிலும் கோலம் போடா கூடாது. பெண்கள் உட்காராமல் குனிந்து நின்றே கோலமிடவேண்டும் குறிப்பாக தரையில் . மேலும் ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும் rangoli contest.
கோலம் போடுதலின் காரணங்கள்
வீடு கட்டி இருப்பிடம் அமைத்து வாழ ஆரமித்த நம் ஆதி மக்கள் விரல் எடுக்காமல் கோலமிடுவதும் ஒரு மிகச்சிறந்த யோகா காலை போன்ற பலன்களை தருவதாக உணர்ந்தவர்கள் சொன்னதுண்டு. நுண்ணுயிரிகள் தன்னால் அளிக்கப்பட்டதை உணர்ந்ததால் அரிசி மாவினால் கோலமிடுவதை தொடங்கினர் என்று சொல்லப்படுகிறது. கோலமிடுவது குறிப்பாக நமது பண்பாட்டின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. அரிசி கோலம் தற்காலத்தில் குறிப்பாக எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் உணவாக, வாழ்வாதாரமாக திகழ்கிறது rangoli contest.
மார்கழி கோலப்போட்டி
நமது நீரோடை வாசர்களுக்கு நாம் நடத்தும் கோலப்போட்டி நடைபெறவுள்ளது. கலந்துகொள்ள விரும்புவோர் info@neerodai.com விற்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கீழே கருத்துரையில் தங்களின் வாட்சாப் எண்ணை பதிவு செய்யலாம். பெறும் வாசகருக்கு “குழந்தைகள் புகைப்படப்போட்டியின் பரிசுகளை” போலவே ஆச்சரிய பரிசு வழங்கப்படும்.
கோலம் போடுறதால எவ்ளோ விசியம் இருக்கா ? நானும் இனி கோலம் போடா கத்துக்குற மற்றும் அத கடை புடிக்குற…