கோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1
முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal.
வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில் அரைத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பயத்தமாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்தவடன் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
பாட்டி வைத்தியம்
இஞ்சி சாறு எடுத்து வைத்து கொண்டு, வயிற்றில் கோளாறு ஏற்பட்டால் இந்த சாறுடன் எலுமிச்சை சாறு தேன் கலந்து இளம் சூடாக குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் நான்கு உரித்த பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.வெந்தயம், வால் மிள்கு சரிசமமாக எடுத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை போய்விடும். உப்பு, சர்க்கரை மழை காலத்தில் நீர் கோர்த்த மாதிரி ஆகி விடுகிறதா…அரிசி சிறிது அதில் போட்டு வைத்தால் நீர் கோர்க்காது
உடல்நல ரகசியங்கள்
வயிற்றில் பூச்சி இருந்தால் கெட்டியான தயிரில் வேப்பிலையை சாறு எடுத்து கலந்து சாப்பிட்டால், பூச்சிகள் இறந்து வெளியே வந்துவிடும்.வாயில் சிறிதளவு அதிமதுரத்தை அடக்கிக் கொண்டால் எப்படிப்பட்ட இருமலும் சரியாகி விடும் – patti vaithiyam azhagu kurippugal.
வெண்டைக்காய். காம்புகளை இரவில் கால் டம்பளர் நீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் இந்த நீரை வடிகட்டி குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
முளைவிட்ட (முளைக்கட்டிய) வெந்தயம் ஒரு ஸபூன் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்க உதவும்.நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotic Medicines) அச்சுறுத்தும் இக்காலகட்டத்தில் இருமல் மற்றும் சளிக்கான சிறந்த மருந்து
வெற்றிலை, தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி இலை, மிளகு, வெங்காயம் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர சளி நீங்கும். பனங்கற்கண்டு கலந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பர்.
சமையல் ரகசியங்கள்
மோர்க்குழம்பு செய்யும்போது தயிர்க்கலவை விட்டவுடன் அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிச் செய்தால் திரிந்தது போல் ஆகி விடும்.
வாழைப்பூவை நறுக்கியவுடன் மோர்/ சுண்ணாம்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும். கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவைகளை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்
சமையலுக்கு வெள்ளைப்பூசணிக்காய் வாங்குவோம். அதன் தோலைத் தூக்கிப் போடாமல் நன்கு காய வைத்து எடுத்து வைக்கவும். இட்லி மிளகாய்ப்பொடிக்கு வறுக்கும்போது இந்தத் தோலையும் போட்டு எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து, திரித்தால் மிளகாய்ப்பொடியும் சுவையாக இருக்கும். உடல் நலனிற்கும் நல்லது – patti vaithiyam azhagu kurippugal.
வெண்பொங்கல் செய்யும்போது தாளிக்கத் தனி நெய்யைப் பயன்படுத்தாமல், கொஞ்சம் நெய், கொஞ்சம் நல்லெண்ணெய் என்று கலந்து பயன்படுத்தினால் சாப்பிடும்போது திகட்டாமல் இருக்கும்.
சமையல் தந்திரங்கள்
வெண்டைக்காயைச் சமையலுக்கு நறுக்கும்போது, அதன் காம்புப் பகுதிகளைத் தூக்கிக் குப்பையில் போடாமல் தோசைக்கு அரைக்கும்போது சேர்த்துக் கொண்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். வழக்கமாகப் போடும் அளவை விட உளுந்தம்பருப்பின் அளவைக் குறைத்துப் போட்டால் போதும்.
நாம் சமையலுக்குப் பருப்பு வேக விடுவதற்கு முன் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு வேக விட்டால் சீக்கிரம் வெந்து விடும்.
தேங்காயைத் துருவும்போது அதன் உட்புறம் ஓடு வரை துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத் தூள் உணவுடன் உள்ளே சென்றால், குடல்களில் புண்களை உண்டாக்கி விடும்.