மகளிர் தின வரலாறு மற்றும் கவிதை

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day poem.

மகளிர் போற்றும் வாழ்வு

பெண்ணை. நீ வெற்றிவாகை சூடினால்
பற்றி வருவர் உறவுக் கூட்டம் !
வெற்றி செய்தி உண்மையா எள
சோதித்தாலும் தயங்காதே!
குறை சொல்ல காரணம் தேடும் மன
நிறையில்லா மானிட கூட்டத்தை
திரை போட்டு மூடி விடு!
உலகம் படைத்து அதில்
திலகம் போன்று பெண்ணையும்
படைத்த இறைவனுக்கு சொல்லு
உன் நன்றியை!
உன் உறவுகளும் தட்புகளும்
பணத்தை மட்டுமே நாடித் தேடுவதால்
எது நிஜமான உலகம்
என்று குழம்பும் மனதை தேற்றிக்
கொண்டால்., பெண்ணே
போற்றும் வாழ்வு தேடி ஓடி வருமே!

women day poem

உஷாமுத்துராமன், திருநகர்


பெண்மை கொள்வீர்

பெண்மை கொள்வீர் அதில் ஆண்மை கொள்வீர்

நிலவென்பீர் முழுமதியை விடுத்து
நிதமும் தெரிசமாய் இருக்க செய்வீர்
பூவென்பீர் மாலையாய் மலர்தலை விடுத்து
புண்ணாக்கி வாசம் கொள்வீர் – happy womens day

தென்றலென்பீர் உணர்வதை விடுத்து
தீ தூசால் புகைத்து கெடுபீர்
காளியென்பீர் வணங்குவதை விடுத்து
கருவறையில் பிஞ்சை கசக்கி கெடுபீர்

மானென்பீர் கலை பார்வை விடுத்து
மா புலிப்பார்வையில் நோக்குவீர்
மயிலென்பீர் தோகை விரிப்பதை விடுத்து
மடியில் கடத்தி இறக்கை இழுப்பீர்..

அஃறிணையில் அளப்பீரோ?
நின்னை நான் மந்தியென்பேன்
பேதையின்றி பெருமகிழ்ச்சியுண்டா
பெதும்பையின்றி பெருஞ்செல்வமுண்டா

மங்கையின்றி பெருமையுண்டா
மடந்தையின்றி மாதவமுண்டா
அரிவை நிகர் காதலுண்டா
தெரிவையின்றி ஆதலுண்டா women day poem

பேரிளம் பெண்யின்றி தாய்மையுண்டா
பெண்மையின்றி பெருமையுண்டா
தாயென்றும் தாரமென்றும்
மகளென்றும் சோதரியென்றும்
தோழியென்றும்…
உயர்தினையில் பெண்மை கொள்வீர்
அதிலே நீரும் ஆண்மை கொள்வீர்….

இத்துணை காலம் என்னுடன் பயணிக்கும்
மாண்புமிக்கு மகளிர் அனைவருக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துக்களுடன்

அந்தியூரான் ஸ்ரீராம் பழனிசாமி

You may also like...