வெற்றி விளைச்சல் – போராடு தோழமையே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால்பதித்து உறங்குவதும் வழக்கம் தானே !பார்வை படும் தூரம்வரை உழைப்பின்
வியர்வைச் சாரலை தூவச்செய்..

vetri vilaichal poraadu thozhane

கையில் எடுக்கும் சிறு துகளையும்
துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு !

அகிலம் ஆளப்பிறந்தவன் நீ,
ஆழம் கண்டு அஞ்சாதே.

கைவிரல் நகத்தின் படிவுகூட
நீ செய்யும் விளைச்சலுக்கு
விருந்தாக, உரமாகட்டும்.

காலத்தையும் கனியவைக்கும்
கனிவு கொண்டவன் நீ

போராடு தோழமையே !

கவிதைகளில் உனைச் சந்தித்து
கொண்டே இருப்பேன்.

 – நீரோடை மகேஷ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *