கவிதை போட்டி 2023_03

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-03

kavithai potti

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.

கவிதை போட்டி அறிவிப்பு

 • மகளிர் தினம்
 • நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
 • இயற்கை விவசாயம்
 • சிங்கப்பெண்
 • பசும்பொன்
 • விரும்பிய தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-03. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

7 Responses

 1. tamilselvi says:

  சிங்கப்பெண்

  கூரிய நகங்கள் இல்லை
  வலிய கரங்கள் இல்லை
  கர்ஜிக்கும் தன்மை இல்லை
  கிழித்தெறியும் பற்கள் இல்லை
  இருப்பினும் நித்தமும் போர் தான் இவள் வாழ்வு

  தூக்கம் என்பது கனவாய்
  துக்கம் மட்டுமே நனவாய்
  சிரிப்பு என்பது செயற்கையாய்
  கண்ணீர் மட்டுமே வாழ்வாய்
  துணை அற்ற போதிலும்
  துணிவு அற்றுப் போகாமல் வீரநடை போடுவாள் இவள்

  பால்வாடியோ பட்டப்படிப்போ
  பஞ்சாலையோ பாடசாலையோ
  நொய் கஞ்சியோ நெற்சோறோ
  கந்தல் துணியோ காஞ்சிப்பட்டோ
  எதுவாயினும்
  இவள் பிள்ளை வளர்ப்பின் முன் அரசனும் தோற்பான்
  இவளே சிங்கப்பெண்

 2. tamilselvi says:

  “சிங்கப்பெண்”

  கூரிய நகங்கள் இல்லை,
  வலிய கரங்கள் இல்லை,
  கர்ஜிக்கும் தன்மை இல்லை,
  கிழித்தெறியும் பற்கள் இல்லை,
  இருப்பினும் நித்தமும் போர் தான் இவள் வாழ்வு.

  தூக்கம் என்பது கனவாய்,
  துக்கம் மட்டுமே நனவாய்,
  சிரிப்பு என்பது செயற்கையாய்
  கண்ணீர் மட்டுமே வாழ்வாய்,
  துணை அற்ற போதிலும்,
  துணிவு அற்றுப் போகாமல் வீரநடை போடுவாள் இவள்.

  பால்வாடியோ பட்டப்படிப்போ,
  பஞ்சாலையோ பாடசாலையோ,
  நொய் கஞ்சியோ நெற்சோறோ,
  கந்தல் துணியோ காஞ்சிப்பட்டோ,
  எதுவாயினும்,
  இவள் பிள்ளை வளர்ப்பின் முன் அரசனும் தோற்பான்.
  இவளே சிங்கப்பெண்…..

 3. தாரா says:

  தலைப்பு: மகளிர் தினம்

  மண்ணின் மகத்துவம் பெண்னே நீ

  தனித்துவம்

  பேசும் சரித்திரம் பெண்மையின்

  மகத்துவம்

  வெற்றி உன்னிடம் சாதனை

  பெண்ணிடம்

  வேலுநாச்சியர் மண்ணிடம்

  வெள்ளையானே பயந்து ஓடியது

  வீர பெண்ணிடம்

  அன்பு உன்னிடம் அன்னைதெரசா

  வாழ்ந்ததும் இந்த மண் நிலம்

  சிறக்கடித்து பறந்த பெண் இனம்

  கல்பனாசாவ்லா விண் இடம்

  பல பெண்கள் உண்டு இந்த

  மண்ணிலும்

  பெருமையே அவள் புகழ் இடம்

  பாரதி கண்ட புதுமை பெண் இடம்

 4. தாரா says:

  தலைப்பு: மகளிர் தினம்

  மண்ணின் பெருமை நீ

  வாழ்வின் அர்த்தம் நீ

  சக்தியின் உருவம் நீ

  சாதனை பெண்ணும் நீ

  சரித்திரம் போற்றும் புகழும் நீ

  உன்னை வர்ணிக்க வார்த்தை

  இல்லை

  பொறுமையின் சிகரம் நீ

  கனவுகளின் தேடல் நீ

  வெற்றியின் மகளும் நீ

  தமிழ் நாட்டின் பெண்ணும் நீ தாய்

  நாட்டின் கண்ணும் நீ

 5. Karthika says:

  தலைப்பு :தோசைக் கனவுகள்
  வட்ட வட்டமாய்
  வழிய வழிய நெய்யூற்றி
  வாஞ்சையாய் நெய்யூற்றி
  வட்டமாய் சுட்ட தோசை
  வியூகத்தில் சரணடையப்பட்ட கனவுகள்!

  வாழ்க்கை முழுக்க
  வார்த்துக் கொடுத்த அவளுக்கோ
  வட்டத் தட்டில் என்றுமே
  வறண்டு பிய்ந்த தோசைகள்!

  தோசை வேள்வியில்
  நெய்யாய் இடப்பட்ட மணித்துளிகள்
  அதிக பட்சம் குழந்தைப் பாடலில்
  பாடி மறக்கப்பட்டவையே!

  தோசை இயந்திரத்தை வசை பாடும்
  தோழமைகளே!
  தோன்றும் நேரத்தில் எல்லாம்
  வார்த்துக் கொடுத்தவளின் தட்டில்
  தோசைகளைக் கண்ட பின் பேசலாமா?
  கனவுகளை மீட்டுக் கொடுப்பதற்கு முன்
  கனவாய் போன மொறு மொறு தோசைகளையாவது தங்கள்
  கரங்களால் பரிசளியுங்கள்!

 6. Bavya says:

  “நினைவில் சுகமாய் நீ ”
  விண்ணில் பறக்கிறேன் என்னில்;
  விழவும் தயக்கம் இல்லை உன்னில்;
  விழித்தால் படுவேன் உன் கண்ணில்;
  நினைவுகளாய் என்றும் நீ என்னில்;
  என்னில் இருக்கும் உன்னை;
  உன்னில் காணவேண்டும் என்னை.

 7. M.Manoj Kumar says:

  கவிதையின் பெயர்:- அனுபவம் எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  ஒரு ஆசிரியரிடம் கல்வி அறிவு கற்பாய்; ஒரு நூலகரிடம் புத்தக நூல் அறிவு கற்பாய்; ஒரு வங்கி ஊழியரிடம் பணம், செல்வம் சேமிப்பு கற்பாய்; ஒரு காப்பீடு முகவரிடம் எதிர்கால சேமிப்பு கற்பாய்; ஒரு சவரத் தொழிலாளியிடம் தோற்ற அழகுக்கு வழி கற்பாய்; ஒரு கோவில் குருக்களிடம் கடவுள் ஸ்லோகங்கள் கற்பாய்; ஒரு தீக்ஷிதரிடம் வேதங்கள், ஆகமங்கள் கற்பாய்; ஒரு நகை வியாபாரியிடம் நகை அறிவு கற்பாய்; ஒரு கவிஞரிடம் கவிதை எழுத கற்பாய்; ஒரு எழுத்தாளரிடம் எழுத்து கற்பாய்; ஒரு உடற்பயிற்சி ஆசிரியரிடம் உடற்தகுதி கற்பாய்; ஒரு நாடக கலைஞரிடம் நாடகம் கற்பாய்; ஒரு நடிகரிடம் நடிப்பை கற்பாய்; ஒரு இளநீர் வியாபாரியிடம் உடல் ஆரோக்கியம் கற்பாய்; ஒரு மருத்துவரிடம் உடல் பாதுகாப்பு கற்பாய்; ஒரு மருந்து வியாபாரியிடம் மருத்துவ அறிவு கற்பாய்; ஒரு சமூக சேவகரிடம் சமூக சேவை கற்பாய்; ஒரு பழ வியாபாரியிடம் நல்ல பழம் பார்த்து வாங்க கற்பாய்; ஒரு காய்கனி வியாபாரியிடம் நல்ல காய்கனி பார்த்து வாங்க கற்பாய்; ஒரு திருடனிடம் உஷாராக இருக்க கற்பாய்; ஒரு போலீஸ்காரரிடம் தைரியம், ஒழுக்கம், சாமர்த்தியம் கற்பாய்; ஒரு அரசியல்வாதியிடம் ஆற்றல், புத்திசாலித்தனம் கற்பாய்; ஒரு வழக்கறிஞரிடம் சட்டம் கற்பாய்; ஒரு அலுவுலக மேலதிகாரியிடம் வேலை அறிவு கற்பாய்; ஒரு பெண்ணிடம் பழகினால் பெண்ணை பற்றி கற்பாய்; ஒரு ஆணிடம் பழகினால் ஆணை பற்றி கற்பாய்; தோல்வியை சந்தித்தால் வெற்றிக்கு வழி கற்பாய்; வீழ்ச்சியை சந்தித்தால் எழுச்சிக்கு வழி கற்பாய்; அவமானத்தை சந்தித்தால் பாராட்டுக்கு வழி கற்பாய்; கஷ்டத்தை சந்தித்தால் உதவியின்றி வாழ கற்பாய்; பிரச்சனைகளை சந்தித்தால் துணிவுடன் வாழ கற்பாய்; வெளியே பல இடங்கள் சென்றால் வாழ்க்கை அனுபவம் கற்பாய்; இவை யாவும் பெற்று அனுபவசாலியாக மாறுவாய்; புது பாடங்கள் மேலும் பல கற்பாய்; பல பேருக்கு கற்றுத்தருவாய்; திக்கற்ற பல பேருக்கு வழி காட்டுவாய்