தண்ணீர் கொடு (காவிரி)

தண்ணீர் கொடு தாகம் எடுக்கிறது.நீரின்றி சருகாய்ப் போன
எத்தனையோ ப(உ)யிர்கள்.

மேகக் கடன்காரியிடம் காதல் தோல்வியுற்ற
விரிசல் விழுந்த வானம் பார்த்த பூமி.

எத்தனை நாள் வெறும் புழுதிக் காட்டில்
உழவு செய்ய ?

thanneer kodu thaagam edukkirathu

வானத்திடம் தன் மேனிப்பரப்பை காட்டாத
வயல்வெளி நிலப்பரப்பு,
இங்கே ஆடையிழந்து நிர்கதியற்று….

பாலைவன கனல்நீரைக் கண்டு
உயிரை கைக்கொண்டு பறந்து திரியும்
பறவையாய் – இந்த விவசாயி !

காவிரித் தாயே உயிர்கொடுக்க
எப்போது வருவாய்? ? ?

– நீரோடை மகேஷ்

You may also like...