நட்சத்திர பாதங்கள் மற்றும் 108 தேங்காய் ரகசியம்

​இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உள்ளன.

01. அஸ்வினி
02. பரணி
03. கார்த்திகை
04. ரோகிணி
05. மிருகசீரிடம்
06. திருவாதிரை
07. புனர்பூசம்
08. பூசம்
09. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

உதரணமாக அஷ்வினி நட்சத்திரத்திற்கு அஷ்வினி பாதம் 1 , அஷ்வினி பாதம் 2, அஷ்வினி பாதம் 3 அஷ்வினி பாதம் 4.  இதே போல் 27 நச்சத்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உள்ளன. மொத்தமாக 27 X 4 = 108 பாதங்கள் . இதுதான் 108 தேங்காய் உடைப்பதன் காரண இரகசியம்.
108 thengaai ragasiyam

இந்த 108 பாதங்கள் மேற்கண்ட 12 ராசிகளில் அமரும். இந்த 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள்.

 • மேஷம் 9 பாதங்கள் எனில் அஷ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை முதல் பாதம் மட்டும் ( 4+4+1 = 9)
 • ரிஷபம்: கார்த்திகை 2,3,4 (மூன்று பாதங்கள்), ரோகிணி 4 பாதங்கள், மிருகசீரிடம் 1,2 (3+4+2 = 9)
 • மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூசம் 1,2,3 (2+4+3 = 9)
 • கடகம்: புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம் 4 பாதங்கள், ஆயில்யம் 4 பாதங்கள் (1+4+4=9)
 • சிம்மம்: மகம் 4 பாதங்கள், பூரம் 4 பாதங்கள், உத்திரம் 1 பாதம் (4+4+1 = 9)
 • கன்னி: உத்திரம் 2,3,4 (மூன்று பாதங்கள்), அஸ்தம் 4 பாதங்கள், சித்திரை 1,2 (3+4+2 = 9)
 • துலாம்: சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 4 பாதங்கள், விசாகம் 1,2,3 (2+4+3 = 9)
 • விருச்சிகம்: விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள் (1+4+4=9)
 • தனுசு: மூலம் 4 பாதங்கள், பூராடம் 4 பாதங்கள், உத்திராடம் 1 பாதம் (4+4+1 = 9)
 • மகரம்: உத்திராடம் 2,3,4 (மூன்று பாதங்கள்), திருவோணம் 4 பாதங்கள், அவிட்டம் 1,2 (3+4+2 = 9)
 • கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 4 பாதங்கள், பூரட்டாதி 1,2,3 (2+4+3 = 9)
 • மீனம்: பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி 4 பாதங்கள், ரேவதி 4 பாதங்கள் (1+4+4=9)

108 thengaai ragasiyam

You may also like...

1 Response

 1. மாலதி நாராயணன் says:

  108 தேங்காய் ‌உடைப்பதன் ரகசியம்
  இது வரை அறியாத தகவல் மிகவும் அருமை