வெள்ளை கொண்டைக்கடலை கட்லட்
மாலை நேர சிற்றுண்டி இது. ஒரு ஆரோக்கியமான சமையல் படைப்பு ! அதுவும், இந்த நேரத்தில். (அதாவது நாம் நோய் எதிர்ப்பு சக்தியை ,கொரானா வைரஸை எதிர்த்து போராட அதிகப்படுத்தி கொண்டிருக்கிறோம்) – kondakadalai cutlet
இந்த சமையல் பதிவின் மூலம் “பாரிஸா அன்சாரி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளை கொண்டைக்கடலை – 200 கிராம் (6-8 மணி நேரம் ஊற வைத்தது),
- பெரிய வெங்காயம்- 1,
- பச்சை மிளகாய் – 1,
- இஞ்சி – 1 அங்குலம் அளவு ,
- சீரகம் – 1 தேக்கரண்டி ,
- ஓமம் – 1/2 தேக்கரண்டி ,
- பூண்டு – 5 பல்,
- பெருங்காயம் பொடி- 1 சிட்டிகை,
- மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி,
- உப்பு – தேவையான அளவு ,
- எண்ணெய் – பொரிப்பதற்கு ,
- கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி,
செய்முறை
- மிக்ஸியில் ஊறவைத்த கொண்டைக்கடலை உடன், ஓமம், கொத்தமல்லி இலை, எண்ணெய் தவிர, அனைத்து ப் பொருட்களையும் அரைத்து எடுக்கவும் .
- பின்னர் அந்த கலவையுடன் ஓமம் , கொத்தமல்லி இலை சேர்த்து , கலந்து கொள்ளவும்
- எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
- அரைத்த கலவையை கட்லட் வடிவில் தட்டி வைத்து கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும், மிதமான சூட்டில் கட்லட்டை பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும்
- கட்லட் தயார்
- சூடாக, புதினா சட்னியுடன் பரிமாறவும்.
ஆரோக்கிய குறிப்புகள்
வெள்ளை கொண்டைக்கடலை யில் உள்ள, புரதம் , நார்ச்சத்து, துத்தநாகம், தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்கள், நம் “நோய் எதிர்ப்பு” செல்கள் வளர்ச்சிக்கும் , அதன் மூலம் உடலின் “நோய் எதிர்ப்பு சக்தியை” அதிகரிக்கவும் உதவுகின்றன.
“கொரானா”நேரத்தில்,இச்செய்தி,இனிய தேனை,இடைவிடாது,நம் காதுகளில் பாய்ச்சுவது திண்ணம். மேலும், கொலாஸ்ட்ரால்,இல்லாத கொண்டைக்கடலை யில் உள்ள நார்ச்சத்து, கொலாஸ்ட்ரால் அளவைக் குறைத்து,ஆரோக்கிய இதயத்துடன் வாழ வழி செய்யும். இதில் உள்ள “செலினீயம்”, பீட்டா கேரோட்டீன் “போன்றவை”ஆன்டி ஆக்சிடண்ட்” டாகச் செயல் பட்டு நலமான வாழ்க்கைக்கு அடி கோலும்.
பின் குறிப்பு: கொண்டைக்கடலையை நன்றாக ஊறவைக்க வேண்டும். (மேல் தோலை அழுத்தும் போது அமுங்க வேண்டும் ). 4-5 தடவை தண்ணீரில் கழுவ வேண்டும்) – kondakadalai-cutlet.
– பாரிஸா அன்சாரி, சென்னை
தற்சமயம் எல்லோருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கட்டாயம் வேண்டும். அதற்கு இந்த கட்லெட் உதவி செய்யும்.
Cutlet sema taste
Is it possible to share as a video
ஆரோக்கியமான சமையல் குறிப்பு..செய்முறை எளிதாக உள்ளதால் எல்லோரும் செய்து பார்க்க வசதி.அன்சாரி அவர்களுக்கு நன்றி..
கண்டிப்பாக விரைவில் வெளியிட முயல்கிறோம்
அருமையான ரெசிபி கட்லெட் செய்முறை அருமை.
Superb. Really useful recipe tips
Welcome to the group.
.
Its a very healthy, tasty n easy cutlet. Thank u for sharing Faarisa.
Very nice recipe