நம்பிக்கை சாரல்
பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின்
கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai
வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு
நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை.
தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில்
ஊறத்துடிக்கும் மணற்கேணியாக.
கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால்,
முடமாகிப் போவேனா என்ன?
கண்மூடி கனவுகளை சேகரிக்க
வினாடிகள் போதும் எனக்கு.
நீண்டு வீசிய விரக்தி காற்றுக்கு பின்னால்
என் மனதில் பெய்த சாரல் மழை.
nambikkai saaral mazhai thannambikkai
– நீரோடை மகேஷ்
வணக்கம்
கவிதையின் வரிகள் நன்று இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை!!!
அருமை!!!